சென்னையின் புதிய ஹாட் ஸ்பாட்.. தடம் தெரியாமல் மாறப்போகிறது ஈ.சி.ஆர்.. பிரம்மாண்டத்தின் உச்சம்!
சென்னை: சென்னை மக்களின் விருப்பமான பகுதியாக கிழக்கு கடற்கரைச் சாலை (ECR) வேகமாக மாறி வருகிறது. கடற்கரையோரப் பகுதிகளில் பிரமாண்டமான உள்கட்டமைப்பு, சுற்றுலா மற்றும் ஹோட்டல் திட்டங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. பல சிறப்பான வசதிகள் இங்கே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இங்கே அமைய உள்ள பல முக்கிய திட்டங்கள் குறித்து இங்கே பார்க்கலாம்.

நந்தவனம் பாரம்பரிய பூங்கா - 223 ஏக்கர் கடலோரச் திட்டம்:
223 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள பிரம்மாண்டமான நந்தவனம் பாரம்பரிய பூங்கா இங்கே பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சில்லறை வணிகப் பகுதிகள், கடற்கரை நடைபாதைகள், திறந்தவெளி இசை நிகழ்ச்சிகளுக்கான இடங்கள் மற்றும் பூங்காக்களை இந்த பகுதி கொண்டிருக்கும். ₹100 கோடி மதிப்பிலான இத்திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது டெண்டர் விடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கலைஞர் பன்னாட்டு மாநாட்டு மையம்:
சென்னையை முக்கிய MICE (கூட்டங்கள், ஊக்கமளிக்கும் நிகழ்வுகள், மாநாடுகள் மற்றும் கண்காட்சிகள்) மையமாக மாற்றும் நோக்கில் ₹525 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கலைஞர் பன்னாட்டு மாநாட்டு மையம் நிறைவடையும் தருவாயில் உள்ளது. இதன் கட்டுமானப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. அடுத்த ஆண்டு திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ECR-ல் சொகுசு விருந்தோம்பல் வசதிகள்:
சென்னையின் கடலோர விருந்தோம்பலை மாற்றியமைக்க பல நட்சத்திர ஹோட்டல்கள் தயாராகி வருகின்றன. தாஜ் ECR (151 அறைகள்), கிராண்ட் ஹயாத் (250 அறைகள் - சென்னையின் மிக ஆடம்பரமான ஹோட்டல்), IHCL செலெக்ஷன்ஸ் (120 அறைகள்), ரேடிசன் பார்க் இன் (100 அறைகள்), சீப்ரோஸ் (ராஃபிள்ஸ் ஆக இருக்கலாம் - 194 அறைகள்) மற்றும் இன்டர்கான்டினென்டல் (புதுப்பிக்கப்பட்டது - 110 அறைகள்) ஆகியவை இதில் அடங்கும். இவை சென்னையின் முகத்தை பெரிய அளவில் மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உயர்தர குடியிருப்பு திட்டங்கள்:
இப்பகுதியில் சொகுசு குடியிருப்பு திட்டங்களும் அதிகரித்து வருகின்றன. வூரா ஒன் சீ (4 கோபுரங்களில் 41 தளங்கள்), ஆல்டியஸ் ஓசன் கிளிஃப் (3 கோபுரங்களில் 34 தளங்கள்) மற்றும் ரிபப்ளிக் ஆஃப் நேச்சர் (32 ஏக்கர் பரப்பிலான ஆடம்பர டவுன்ஷிப்) ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
உள்கட்டமைப்பு மேம்பாடுகள் மற்றும் நகர்ப்புற வசதிகள்:
இங்கே சாலை விரிவாக்கப் பணிகள் மற்றும் 400 MLD பெருர் கடல்நீர் சுத்திகரிப்பு ஆலை ஆகியவை நடைபெற்று வருகின்றன. இது வேகமாக வளர்ந்து வரும் இந்த பகுதிக்கு சிறந்த போக்குவரத்து இணைப்பையும், நிலையான நீர் விநியோகத்தையும் உறுதி செய்யும். கோவளம் முதல் அக்கரை வரையிலான கிழக்கு கடற்கரைச் சாலை (ECR) 8.6 கி.மீ. நீளத்திற்கு ஆறு வழித்தடமாக விரிவாக்கப்படும் பணிகள், ஜனவரி மாத இறுதிக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட சிக்கல்களால் இத்திட்டம் நீண்டகாலமாக தாமதமாகி வந்ததாகவும், தற்போது அவை சரிசெய்யப்பட்டுள்ளதாகவும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
கோவளம் முதல் அக்கரை வரையிலான சாலை
நெடுஞ்சாலைத் துறை வட்டாரங்களின்படி, 1.2 கி.மீ. நீளமுள்ள சில பகுதிகளில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்துள்ளன. "நில ஆவணங்களில் சில முரண்பாடுகள் இருந்தன. அவை சரிசெய்யப்பட்டுள்ளன. நில உரிமையாளர்களுக்கு விரைவில் இழப்பீடு வழங்கப்படும்," என அத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
திருவான்மியூர் முதல் அக்கரை வரையிலான சாலையை விரிவாக்கும் திட்டம் 2005 ஆம் ஆண்டு ₹10 கோடி ஒதுக்கீட்டில் அறிவிக்கப்பட்டது. எனினும், ஏராளமான சிறிய நிலங்கள் சம்பந்தப்பட்ட நீதிமன்ற வழக்குகள் மற்றும் அடிக்கடி நடந்த நில விற்பனைகள் காரணமாக இத்திட்டம் தொடங்கப்படாமல் இருந்தது.
2018-19 ஆம் ஆண்டில், சாலை விரிவாக்கப் பணிகள் வேகமெடுத்த போதிலும், கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக பணிகள் தடைபட்டன. கடந்த ஆண்டு முதல் மீண்டும் பணிகள் வேகம் பிடித்தன.












Click it and Unblock the Notifications