சென்னையில் தனியார் நிறுவனத்தில் ED அதிகாரிகள் அதிரடி சோதனை.. காலையில் இருந்தே நீடிக்கும் பரபரப்பு
சென்னை: சென்னை கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் மின் உற்பத்தி நிறுவனங்கள் தொடர்பான இடங்களில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். 5க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை கும்மிடிப்பூண்டியில் மின் உற்பத்தி நிறுவனங்கள் தொடர்பான இடங்களில் இன்று காலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சைதாப்பேட்டை சின்னமலை சாலையில் உள்ள ஓபிஜி பவர் அண்ட் இன்ப்ராஸ்ட்ரெக்சர் கார்ப்பரேட் அலுவலகம் மற்றும் அவனியாபுரத்தில் உள்ள இந்த நிறுவனத்தின் இயக்குனர் அரவிந்த் குப்தா வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

இதேபோன்று தேனாம்பேட்டை பாரதிதாசன் சாலையில் அமைந்துள்ள கவுசிக் துவாரா என்று நிறுவனத்தின் இயக்குனரான கவுசிக் என்பவரது வீடு மற்றும் கீழ்ப்பாக்கத்தில் உள்ள நிறுவனம், மற்றும் கும்மிடிப்பூண்டி என மொத்தம் 5 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலையில் இருந்து சோதனை நடத்தி வருகிறார்கள்.
இந்த சோதனைக்கு இருவேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. குறிப்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகமானது மின்சார தட்டுப்பாடு காரணமாக தனியார் மின் நிறுவனங்களுடன் கடந்த 2013 ஆம் ஆண்டு நீண்டகால ஒப்பந்தமானது போடப்பட்டது. நிலக்கரி மின் உற்பத்தி நிறுவனங்கள், சோலார் மின் உற்பத்தி நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் இந்த ஒப்பந்தமானது போடப்பட்டுள்ளது.
இதில் ஒரு நிறுவனமான ஒபிஜி பவர் அண்ட் இன்ப்ராஸ்ட்ரெக்சர் கார்ப்பரேட் நிறுவனத்தில் தான் தற்போது அமலாக்கத்துறை சோதனை நடைபெறுகிறது. இந்த நிறுவனத்தின் மூலம் ஆண்டுக்கு 414 மெகாவாட் மின்சாரமும், 64 மெகாவாட் சோலார் மின்சாரமும் வழங்குவதற்கான ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது. இதில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட தமிழக அரசு அதிக மின்சாரத்தை வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
சட்டவிரோத பணப்பரிமாற்றம், சட்டவிரோத அன்னிய முதலீடு இதில் நடந்திருப்பதாகவும், குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இதுகுறித்த புகாரின் பேரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்த சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதேபோன்று ஒபிஜி பவர் இன்ப்ராஸ்ட்ரெக்சர் நிறுவனமானது இதேபோன்று ஒப்பந்தத்தின் கீழ் மின்சாரம் வழங்கி வருகிறது.
மகாராஷ்டிராவில் சட்டசபை தேர்தல் நடந்து வருவதால், மின்சாரம் வழங்குவதில் ஏதேனும் முறைகேடு நடந்ததா என்பது குறித்து இந்த சோதனை நடப்பதாகவும் கூறப்படுகிறது. முழுமையான சோதனைக்கு பிறகே தமிழ்நாடு மின் வினியோக ஒப்பந்த முறைகேடு தொடர்பாக சோதனை நடக்கிறதா அல்லது மகாராஷ்டிராவில் தேர்தல் நடைபெறுவதால் அம்மாநில மின் வினியோக ஒப்பந்தத்தின் முறைகேடு தொடர்பாக இந்த சோதனை நடைபெறுகிறதா என்பது தெரியவரும் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications