பிரபலங்களின் ஆடிட்டர்களை குறி வைத்து ஒரே நேரத்தில் அமலாக்கத்துறை ரெய்டு.. சிக்கியது என்ன?
சென்னை: சினிமா பிரபலங்களின் ஆடிட்டர் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்ட விரோத பணப் பரிமாற்ற புகார்கள் தொடர்பாக சென்னையில் பல்வேறு ஆடிட்டர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை கோடம்பாக்கம் அண்ணா பிரதான சாலையில் உள்ள டைரக்டர்ஸ் குடியிருப்பை சேர்ந்தவர் பொன்ராஜ். இவர் பல முக்கிய பிரமுகர்களுக்கு ஆடிட்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது வீட்டுக்கு நேற்று காலை 8 மணி அளவில் காரில் வந்த அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இதேபோல, திருவொற்றியூரில் வசிக்கும் ஆடிட்டர் சேரன் மற்றும் துரைப்பாக்கத்தில் உள்ள ஆடிட்டர் ஆகியோரின் வீடு உட்பட சென்னையில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறையினர் நேற்று தீவிர சோதனை நடத்தினர்.
இந்த இடங்களில் துப்பாக்கி ஏந்திய மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சட்ட விரோத பணப் பரிமாற்ற புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடந்ததாக கூறப்படுகிறது. எனினும், சோதனைக்கான காரணங்கள் குறித்து அமலாக்கத் துறை தரப்பில் இருந்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
சினிமா பிரபலங்கள் ஒவ்வொரு திரைப்படத்திற்கும் பல கோடி ரூபாய் ஊதியமாக பெறுகின்றனர். அந்த ஊதியத்தை வருமான வரித்துறைக்கு கணக்கு காட்டுவதை தவிர்க்க ரொக்கப் பணம் மற்றும் அசையா சொத்துகளாக பெறுவதால குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
மேலும், சினிமா பிரபலங்கள் வீடுகளில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையில் பல கோடி ரூபாய் சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் பல்வேறு தொழில் நிறுவனங்களில் முதலீடு மற்றும் பினாமி பெயர்களில் பல கோடி மதிப்புள்ள சொகுசு கார்கள் இறக்குமதி செய்த ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
இதற்காக சினிமா பிரபலங்களின் கணக்கு வழக்குகளை பராமரிக்கும் நபர்களுக்கு பல கோடி வரை பணம் சட்டவிரோதமாக வழங்கப்பட்டதற்கான ஆவணங்கள் வருமான வரித்துறை சோதனையில் சிக்கியது. அதனை தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் சினிமா பிரபலங்களின் வரவு செலவு கணக்குகளை ஆய்வு செய்யும் ஆடிட்டர்கள் வீடுகளில் நேற்று ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் வழக்கு தொடர்பான பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. சோதனை முழுமையாக முடிந்த பிறகு, அதற்கான காரணம், கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து தெரிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா? -
ஆண்டவரையே திகைக்க வைத்த அறிவாலயம்.. கமல்ஹாசன் எடுத்த கடைசி அஸ்திரம்! மநீம கூட்டத்தில் முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications