ஆடிட்டர் சண்முகராஜ் வீட்டிலும் அமலாக்கத்துறை ரெய்டு.. ஏற்கனவே IT ரெய்டு நடந்ததே.. யார் இந்த புள்ளி?
சென்னை: செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில், சென்னை உள்பட 10 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். இதில், அண்ணா நகரில் உள்ள ஆடிட்டர் சண்முகராஜ் வீட்டிலும் ED சோதனை நடைபெற்று வருகிறது.
சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கடந்த ஜூன் மாதம் அமலாத்துறையால் கைதான திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி, தற்போது புழல் சிறையில் இருக்கிறார். செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய விவகாரத்தில் முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில், சென்னையில் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் நுங்கம்பாக்கம், அண்ணா நகர், தேனாம்பேட்டை உள்ளிட்ட 10 இடங்களில் இந்த ரெய்டு நடைபெற்றுவருவதாகத் தெரிகிறது. குறிப்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரின் குடும்பத்தினருடன் தொழில் முறையில் தொடர்பில் இருந்தவர்களின் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
சென்னை, அண்ணா நகரில் உள்ள ஆடிட்டர் சண்முகராஜ் வீட்டில் இன்று காலை முதல் தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையின் முன்னணி ஆடிடட்டரான சண்முகராஜ், பல்வேறு முக்கிய நபர்களின் கணக்குகளை கவனித்து வருபவர், முக்கியமாக, சபரீசன் சம்பந்தப்பட்ட கணக்குகளையும் சண்முகராஜ் கவனித்து வருவதாகக் கூறப்படுகிறது.
கடந்த ஏப்ரல் மாதம் சண்முகராஜ் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் 'ஜி ஸ்கொயர்' ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி இருந்தனர். அப்போது அண்ணாநகரில் உள்ள தி.மு.க., - எம்.எல்.ஏ., மோகன் மகன் கார்த்திக் வீடு, அவரது ஈஞ்சம்பாக்கம் வீடு, ஆடிட்டர் சண்முகராஜன் வீடு உட்பட, கீழ்ப்பாக்கம், அமைந்தகரை, சைதாப்பேட்டை, அம்பத்துார் உட்பட, சென்னையில் 50 இடங்களில் ஐ.டி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இந்நிலையில், தற்போது, செந்தில் பாலாஜி தொடர்புடைய பணப் பரிமாற்ற மோசடி விவகாரத்தில் அமலாக்கத்துறையும், ஆடிட்டர் சண்முகராஜ் வீட்டில் சோதனை மேற்கொண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் முகப்பேர் கிழக்கு பகுதியில் உள்ள பொதுப்பணி திலகம் என்ற பொறியாளர் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இதேபோல, திண்டுக்கல்லில் பிரபல தொழிலதிபர் ரத்தினம் மற்றும் அவரது மைத்துனர் கோவிந்தன் வீடு, அலுவலகம் ஆகிய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், புதுக்கோட்டையில் தொழிலதிபர் ராமச்சந்திரன் மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் ரெய்டு மேற்கொண்டு வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications