மணல் அள்ளிய வருமானம் ரூ.4730 கோடி! கணக்கில் வந்ததோ ரூ.36 கோடிதான்! அமலாக்கத்துறை ஷாக் வாதம்
சென்னை: சட்டவிரோத மணல் குவாரிகள் தொடர்பான விசாரணைக்கு ஆஜராக கலெக்டர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் அமலாக்கத் துறை சில பரபர வாதங்களை முன்வைத்தது.
கடந்த செப். 12ஆம் தேதி தமிழ்நாட்டில் இருக்கும் மணல் குவாரிகள், சேமிப்பு கிடங்குகள், குவாரி அதிபர்களின் வீடுகளில் என மொத்தம் 34 இடங்களில் அமலாக்கத் துறை அதிரடியாகச் சோதனை நடத்தினர். அதில் ரூ.12.82 கோடி ரொக்கம், 1,024 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டது.

இந்த விவகாரத்தில் 10 மாவட்ட ஆட்சியர்கள், நீர்வளத் துறை முதன்மை பொறியாளர் முத்தையா உள்ளிட்டோர் நேரில் ஆஜராகும்படி அமலாக்க துறை சம்மன் அனுப்பியிருந்தது.
வழக்கு: அதைத் தொடர்ந்து நீர்வளத் துறை முதன்மை பொறியாளர் முத்தையா அமலாக்கத் துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார். இதற்கிடையே கலெக்டர்களுக்கு சம்மன் அனுப்பியதை எதிர்த்து தமிழ்நாடு அரசு மற்றும் 5 மாவட்ட கலெக்டர்கள் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
அதில் அமலாக்கத் துறை அதிகார துஷ்பிரயோகம் செய்து, வரம்பு மீறி சோதனை நடத்தி வருவதாகவும் மாநில நிர்வாகத்தைச் சீர்குலைக்கும் விதமாக மத்திய அரசின் கைப்பாவையாக உள்நோக்கத்துடன் அமலாக்கத் துறை செயல்படுவதாகவும் கூறப்பட்டிருந்தது.
வரம்பு மீறல்: மேலும், முக்கியமாகச் சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தில் கனிமவளம் சேர்க்கப்படவில்லை என்றும் அப்படியிருக்கும் போது, மாவட்ட ஆட்சியர்களுக்குச் சம்மன் அனுப்பவே அமலாக்கத் துறைக்கு அதிகாரம் இல்லை என்றும் கூறப்பட்டிருந்தது. மேலும், கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராகவும், அதிகார வரம்பை மீறியும் வகையிலும் மாநில அரசு அதிகாரிகளைத் துன்புறுத்தும் நோக்கிலும் இந்த சம்மனை அமலாக்கத் துறை அனுப்பியுள்ளது என்றும் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று சென்னை ஐகோர்ட்டில் நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தில் சேர்க்கப்படாத சட்டத்தின் அடிப்படையில் அமலாக்கத் துறை விசாரணை நடத்த முடியாது என்றும் சட்டவிரோத மணல் குவாரி தொடர்பாக விசாரணை நடத்துவது மாநில அரசின் தனிப்பட்ட அதிகாரத்துக்கு உட்பட்டது என்றும் வாதிட்டார்.
நடவடிக்கை எடுக்க முடியாது: மேலும், அமலாக்கத் துறையின் நடவடிக்கை உள்நோக்கம் கொண்டது என்று கூறிய வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, பா.ஜ. ஆளும் மாநிலங்களில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் குறிப்பிட்டார். மேலும், கனிம வள குற்றங்கள் தொடர்பாக மாநில அரசுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டுமே தவிர, அமலாக்கத் துறை நடவடிக்கை எடுக்க முடியாது என்றார்.
மேலும், குவாரி உரிமைதாரர் தவறுக்கு அதிகாரிகளுக்குச் சம்மன் அனுப்ப முடியுமா? யூகங்களின் அடிப்படையில் விசாரணை நடத்த முடியாது என்றும் பல மாவட்ட ஆட்சியர்களிடம் விவரங்களைக் கேட்டுப் பெறலாம். விசாரணைக்கு உதவும்படி கோரலாம். சம்மன் அனுப்ப முடியாது என்றும் வாதிட்டார்.
அமலாக்கத் துறை பரபர குற்றச்சாட்டு: அப்போது, அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்றும் கனிம வள சட்டம் மட்டுமல்லாமல், இந்தியத் தண்டனைச் சட்டம், ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். விசாரணை ஆரம்ப நிலையில் உள்ளதாகத் தெரிவித்த கூடுதல் சொலிட்டர் ஜெனரல், 4,500 கோடி ரூபாய் சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்றார். ஆனால் வெறும் 36.45 கோடி ரூபாய் மட்டுமே கணக்கில் காட்டப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், விசாரணைக்கு உதவி செய்யக் கேட்பதும், சம்மன் அனுப்புவதற்கும் வித்தியாசம் உள்ளது என்றனர். அதற்குச் சம்மன் அனுப்பப்பட்டவர்கள் யாரும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அல்ல என்ற சொலிட்டர் ஜெனரல், கனிம வள சட்ட வழக்குகளை அமலாக்கத் துறை விசாரிக்கவில்லை என்றும் மோசடி, ஊழல் குற்றச்சாட்டுக்கள் உள்ளதால் தான் விசாரணை நடத்தப்படுகிறது என்றும் தெரிவித்தார், அதற்கு நீதிபதிகள், "அப்படியிருந்தால் அனைத்து குவாரிகளின் விவரங்களை எப்படிக் கேட்க முடியும்" என்று கேள்வி எழுப்பினர்,
4500 கோடி பணப் பரிமாற்றம்: இதற்குப் பதிலளித்த ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், ஒரு யூனிட் மணல் விற்பதன் மூலம் 1900 ரூபாய் அரசுக்கு வருகிறது. ஆனால் 20 ஆயிரம் ரூபாய் வரை தனியாருக்குச் செல்கிறது. இந்த விவரங்களைச் சேகரிக்க அதிகாரம் உள்ளது. சட்டவிரோத குவாரி நடவடிக்கைகள் இல்லை என மாநில அரசு கூற முடியாது. இந்த சட்டவிரோத மணல் விற்பனை மூலம் கிடைத்த பணம் குறித்து அமலாக்கத் துறை விசாரிக்க முடியும்.
தமிழகம் முழுவதும் உள்ள 28 குவாரிகளில் நடத்திய சோதனையில், 27.70 லட்சம் யூனிட் மணல் எடுக்கப்பட்டுள்ளது. அளவுக்கு அதிகமாக மணல் எடுத்ததன் மூலம், 4,500 கோடி பணம் பரிவர்த்தனை நடந்துள்ளது. அரசு ஏன் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களைப் பாதுகாக்க முயற்சிக்கிறது என்றார். இதற்கு ஆட்சேபம் தெரிவித்ததாகவே, அரசு யாரையும் பாதுகாக்கவில்லை. சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம். அதை விடுத்து ஆட்சியர்களுக்குச் சம்மன் அனுப்பியது ஏன் என்றார்.
மணல் கொள்ளை: தொடர்ந்து பேசிய கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், "அமலாக்கத் துறையிடம் சாட்சியம் அளித்த அரசு அதிகாரி, சட்டவிரோத மணல் கொள்ளை நடந்துள்ளதாகவும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதது குறித்தும் சுட்டிக்காட்டியுள்ளதாகவும், குற்றம் சாட்டப்படாத அரசு தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல" தெரிவித்தார்.
ஏராளமான சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்குகள் உள்ளன. அவற்றை விசாரணை செய்ய வேண்டும். தேர்ந்தெடுத்து விசாரணை நடத்த முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், சட்டவிரோத மணல் விற்பனை தொடர்பாகத் தமிழக அரசு பதிவு செய்த முதல் தகவல் அறிக்கைகளை ஏன் அமலாக்கத் துறைக்கு வழங்கக் கூடாது எனக் கேள்வி எழுப்பினர்.
நாளை உத்தரவு: சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்திருப்பதற்கான ஆதாரங்களைச் சுட்டிக்காட்டினால், அந்த முதல் தகவல் அறிக்கைகளை வழங்கத் தயார் என துஷ்யந்த் தவே தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கில் நாளை உத்தரவு வழங்குவதாகக் கூறி வழக்கை ஒத்தி வைத்தனர்.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications