ஜாபர் சாதிக் வீடு, அலுவலக ரெய்டில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல்! அமலாக்கத் துறை அறிவிப்பு
சென்னை: போதை பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் போது முக்கிய ஆவணங்களும் சொத்து விவரங்கள் அடங்கிய கோப்புகளும் கைப்பற்றப்பட்டதாக அமலாக்கத் துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து அமலாக்கத் துறை வெளியிட்ட எக்ஸ் வலைதள பதிவில் கூறியிருப்பதாவது: கடந்த 2002 ஆம் ஆண்டு அமலான சட்டவிரோத பணபரிவர்த்தனை சட்டத்தின் கீழ், ஜாபர் சாதிக் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களுக்குச் சொந்தமான சென்னை, திருச்சி, மதுரை ஆகிய மாவட்டங்களில் உள்ள வீடுகள், நிறுவனங்களில் சென்னை அமலாக்கத் துறை அதிகாரிகள் ஏப்ரல் 9ஆம் தேதி சோதனை நடத்தினர்.

அப்போது அவருக்கு எதிரான முக்கிய ஆவணங்களும் சொத்து விவரங்களும் கைப்பற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இவ்வாறு அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
டெல்லியில் உணவு பொருள் டெலிவரி என்ற பெயரில் ரூ 2000 கோடி மதிப்பிலான போதை பொருள்களை டெல்லி போதை பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் பறிமுதல் செய்து அதை கொண்டு வந்த சிலரை கைது செய்தனர். அப்போது அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அந்த பொருள் ஜாபர் சாதிக்கிற்கு சொந்தமானது என தெரியவந்தது.
உணவு டெலிவரி என்ற பெயரில் நியூசிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு போதை பொருளை அவர் கடத்துவதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து ஜாபர் சாதிக்கை என்சிபி அதிகாரிகள் தேடி வந்த நிலையில் அவர் ராஜஸ்தான் மாநிலத்தில் பதுங்கியிருந்த போது பிடிபட்டார்.

இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இயக்குநர் அமீர், பாசித் புகாரின் பெயர்களை வாக்குமூலமாக ஜாபர் சாதிக் தெரிவித்திருந்தாராம். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி அமலாக்கத் துறையினர் ஜாபர் சாதிக் வீடு, அலுவலகம், இயக்குநர் அமீரின் வீடு அலுவலகம், பாசித் புகாரியின் வீடு, அலுவலகம் என சென்னையில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டது. இந்த நிலையில்தான் ஜாபர் சாதிக் உள்ளிட்டோரின் வீடுகளில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications