அமலாக்கத்துறையின் அடுத்த “அஸ்திரம்”.. செந்தில் பாலாஜி இதயத்தில் என்ன பிரச்னை? தனி மருத்துவ குழு ரெடி
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சு வலி காரணமாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், அமலாக்கத்துறை மருத்துவக் குழுவை அமைத்து உள்ளது.
தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நள்ளிரவு அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு இருக்கிறார். நேற்று காலை முதல் அவரது வீடுகள், தலைமை செயலகத்தில் உள்ள அவரது அறை, சகோதரர் வீடு, நண்பர்கள், நெருக்கமானவர்களின் இடங்களில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.

சோதனையின் முடிவில் அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்து காரில் அழைத்து சென்றபோது நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறி அவர், படுத்துக்கொண்டு அழுதார். இதனை தொடர்ந்து அவர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
அதிகாலை அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஈசிஜி முடிவில் மாறுதல் இருப்பதை கண்டறிந்தனர். அதனை தொடர்ந்து ரத்த நாளங்களில் அடைப்பு உள்ளதா என்பதை கண்டறிய ஆஞ்சியோகிராம் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. அந்த சோதனையின் முடிவை ஓமந்தூரார் மருத்துவமனை அறிக்கை மூலம் விளக்கியது.
அதில், "மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு.செந்தில் பாலாஜி, வயது 47, அவர்களுக்கு இருதய இரத்த நாள பரிசோதனை 14.06.2023 அன்று காலை 10.40 மணியளவில் செய்யப்பட்டது. அப்பரிசோதனையில் மூன்று முக்கியமான இரத்த குழாய்களில் அடைப்பு உள்ளது கண்டறியப்பட்டது. அதற்கு விரைவில் பை பாஸ் அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைக்கப்படுகிறது." என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், அவரை 28 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாவட்ட முதன்மை நீதிபதி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து இடைக்கால ஜாமின் கோரி செந்தில் பாலாஜி தரப்பு தொடர்ந்த வழக்கு விசாரணையில் வாதிட்ட அமலாக்கத்துறை, நேற்று ஆரோக்கியமாக இருந்த செந்தில் பாலாஜி, இன்று திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக கூறுகிறார்.
உடனே செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். அதற்கு அவசியம் இல்லை என்றே நாங்கள் கூறுகிறோம். செந்தில் பாலாஜி உடல்நிலையை கண்காணிக்க சுதந்திரமான மருத்துவக் குழுவை அமைக்க வேண்டும். மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவமனைக்கு செந்தில் பாலாஜியை மாற்றக்கூடாது." என்று தெரிவித்தது.
இந்த நிலையில் அமலாக்கத்துறை தனியாக மருத்துவக் குழு ஒன்றை அமைத்து இருக்கிறது. சென்னையை சேர்ந்த 5 மருத்துவர்களை கொண்ட குழுவை அமைத்து செந்தில் பாலாஜியின் உடல்நிலையை கண்காணிக்க அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications