முதலில் ஹிந்தி எதிர்ப்பு! இப்போது நிர்மலாவுக்கு குறி.. யார் இந்த சென்னை அதிகாரி பாலமுருகன்? பின்னணி
சென்னை: சேலத்தை சேர்ந்த 2 விவசாயிகளுக்கு அமலாக்கத்துறை ஜாதியை குறிப்பிட்டு சம்மன் அனுப்பியது தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எதிராக ஜனாதிபதிக்கு சென்னையில் பணியாற்றும் இந்திய வருமான வரித்துறை அதிகாரி பாலமுருகன் பரபரப்பான கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில் தான் இந்த பாலமுருகன் யார்? அவரது பின்னணி என்ன பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள அப்பம்மா சமுத்திரம் எனும் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணையன். அதே கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர்கள் 2 பேருக்கும் பாஜகவின் பிரமுகரான குணசேகரன் என்பவருக்கும் தகராறு இருப்பதாக கூறப்படுகிறது.

அதாவது விவசாயிகளின் 6 ஏக்கர் நிலத்தை குணசேகரன் அபகரிக்க முயன்று தொல்லை கொடுப்பதாக புகார் உள்ளது. இதற்கிடையே தான் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டு 6 ஏக்கர் நிலத்தை வாங்கியதாகவும், அதுபற்றிய விசாரணைக்கு ஆஜராக வேண்டியும் சென்னை அமலாக்கத்துறை சார்பில் இரு விவசாயிகளுக்கும் கடிதம் எழுதப்பட்டது.
இருவரும் விசாரணணைக்கு ஆஜராகி விளக்கமளித்தனர். இதற்கிடையே தான் அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனில் ஜாதி பெயர் குறிப்பிட்டு இருப்பது சர்ச்சையானது. இதற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. இதுதொடர்பாக சேலம் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
இந்த நிலையில் தான் இந்திய வருவாய்த்துறை அதிகாரியும் சென்னையில் ஜிஎஸ்டி பிரிவில் துணை ஆணையராக பணியாற்றி வரும் பாலமுருகன் ஜனாதிபதி திரெளபதி முர்முவுக்கு பரபரப்பான கடிதம் எழுதியுள்ளார். அதில், ‛‛விவசாயிகளுக்கு ஜாதி பெயரை குறிப்பிட்டு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மன் கண்டிக்கத்தக்கது. இதற்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொறுப்பேற்க வேண்டும். அவருக்கு மத்திய அமைச்சராக இருக்க தகுதியில்லை. இதனால் மத்திய நிதி அமைச்சர் பொறுப்பில் இருந்து நிர்மலா சீதாராமனை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்'' என குறிப்பிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
இந்நிலையில் தான் அமலாக்கத்துறையை விமர்சித்தும், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை டார்கெட் செய்தும் ஜனாதிபதி திரெளபதி முர்முவுக்கு கடிதம் எழுதியுள்ள அதிகாரி பாலமுருகன் யார்? என்பது குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. தற்போது பாலமுருகன் சென்னையில் உள்ள இந்திய வருவாய்த்துறை அலுவலகத்தில் ஜிஎஸ்டி பிரிவில் துணை ஆணையராக பணியாற்றி வருகிறார்.
இதற்கு முன்பு கடந்த 2020ம் ஆண்டில் இவர் சென்னை ஜிஎஸ்டி ஆணையரகத்தில் ஹிந்தி செல் என அழைக்கப்படும் பிரிவின் தலைமை உதவி ஆணையராக நியமனம் செய்யப்பட்டார். இந்த பிரிவு என்பது ஹிந்தி மொழி பயன்பாட்டை அதிகரிக்கும் வகையிலும், கோப்புகளையும் இந்தி மொழியில் உருவாக்குவதை ஊக்குவிக்கும் வகையிலும் உருவாக்கப்பட்டு இருந்தது.
அப்போது அவர் உயரதிகாரியான மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்கம் வாரியத்தின் தலைவருக்கு எழுதிய கடிதம் பரபரப்பபை ஏற்படுத்தியது. அந்த கடிதத்தில், ‛‛நான் எனது தாய் மொழி என்பது தமிழ். எனக்கு ஹிந்தி மொழியில் ஏபிசிடி கூட தெரியாது. ஹிந்தி செல்லை பொறுத்தமட்டில் அனைத்து கோப்புகளும் ஹிந்தி மொழியில் இருக்க வேண்டும். கோப்புகளில் குறைந்தபட்சம் 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை ஹிந்தி மொழி இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இங்கு பணியாற்றும் சூப்பிரண்டுகள் முதல் இன்ஸ்பெக்டர்கள் வரை 3ல் 2 பங்கு பணியாளர்கள் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள். அவர்களுக்கு ஹிந்தி மொழி தெரியும். ஆனால் எனக்கு ஹிந்தி மொழி தெரியாது. இத்தகைய சூழலில் என்னை இந்த பிரிவுக்கு நியமனம் செய்துள்ளீர்கள். இது என் மீது ஹிந்தி திணிப்பது போன்று உள்ளது. மேலும் பிராமின் ஒருவரிடம் பைபிள் அல்லது குரானை கொடுத்து அதனை படித்து அதனை பரப்ப வேண்டும் என கூறுவதற்கு சமமான செயலாக இது இருக்கிறது. இதனால் இந்த பொறுப்புக்கு வேறு ஒருவரை நியமனம் செய்ய வேண்டும்'' என தெரிவித்து இருந்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications