Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஸ்கெட்ச் செந்தில் பாலாஜிக்கு இல்லை.. அதிமுகவிற்கு.. பாஜக சைலண்ட் சம்பவம்.. வெடிக்கும் டாஸ்மாக் கேஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: டாஸ்மாக் ஊழல் என்று பாஜக கடுமையான புகார்கள் வைத்து வருகிறது. ஆனால் இந்த டாஸ்மாக் ஊழல் புகார் என்பது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மட்டும் நெருக்கடி இல்லை. மொத்தமாக அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களுக்கும் செக் வைக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன.

டாஸ்மாக் நிறுவனத்தில் சோதனை நடத்தியது தொடர்பாக மார்ச் 25ம் தேதி வரை எந்த மேல் நடவடிக்கையும் எடுக்க கூடாது என அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், தமிழக அரசு மனுவுக்கு பதிலளிக்கும்படியும் உத்தரவிட்டுள்ளது.

டாஸ்மாக் பிரச்சனை பின்னணி

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை சோதனை நடத்திய அமலாக்கத் துறை, டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்தது, பார் உரிமம் வழங்கியது, மதுபானங்களை மதுபான கடைகளுக்கு கொண்டு செல்வதற்கான போக்குவரத்துக்கு டெண்டர் வழங்கியது உள்ளிட்டவற்றில் 1000 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக அறிக்கை வெளியிட்டது.

அமலாக்கத் துறையின் இந்த சோதனையை அரசியலமைப்பு சட்டத்தின் கூட்டாட்சி கட்டமைப்புக்கு விரோதமானது என அறிவிக்கக் கோரியும், அரசு அனுமதியின்றி நடத்தப்பட்ட சோதனையை சட்டவிரோதமானது என அறிவிக்க கோரியும், விசாரணை என்ற பெயரில் டாஸ்மாக் அதிகாரிகளை துன்புறுத்த கூடாது என அமலாக்கத் துறைக்கு உத்தரவிடக் கோரி தமிழக உள்துறை செயலாளரும், டாஸ்மாக் நிர்வாக இயக்குனரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

ED target is not just Minister Senthil Balaji BJP focuses AIADMK also

இந்த வழக்கு, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் என்.செந்தில் குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் மணல் குவாரி விவகாரத்தில் அமலாக்கத் துறை இதுபோல சோதனை நடத்தியது. மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பிய சம்மனுக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்தது. ஆனால் உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டது. அதன்படி விசாரணைக்கு ஒத்துழைப்பும் வழங்கப்பட்டது எனத் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், மாநில அரசு அனுமதி பெற்று தான் சோதனை நடத்த வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமலாக்க துறையின் நடவடிக்கை தொடர்பாக குறிப்பிட்டு கோரிக்கை வைக்காமல் பொத்தாம் பொதுவாக கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தனர். மேலும், அதனை திருத்தம் செய்து புதிய மனுவை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

தொடர்ந்து டாஸ்மாக் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விக்ரம் சவுத்ரி, சோதனை நடத்தும் போது, அதற்குரிய காரணங்களை எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும். எந்த தகவலும் தெரிவிக்காமல் அலுவலகத்துக்குள் நுழைந்து அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். குற்றம் மூலம் பணம் ஈட்டப்பட்டு சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்யப்பட்டதற்கு சந்தேகப்படுவதற்கான காரணங்கள் இருக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

மேலும், 60 மணி நேரம் பெண் அதிகாரிகள் உள்ளிட்டோரை சட்டவிரோதமாக அமலாக்க துறையினர் சிறை பிடித்தனர். இது அதிகாரிகளின் தனிநபர் சுதந்திரத்துக்கு விரோதமானது என்றார். அரசு தலைமை வழக்கறிஞர், பெண் அதிகாரிகள் காலை 11 மணி முதல் நள்ளிரவு வரை சிறை பிடித்துள்ளனர். அதிகாலை 1 மணிக்கு சிலரை வெளியில் செல்ல அனுமதித்து விட்டு காலை 8 மணிக்கு திரும்ப வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர் என்றார்.

அதிமுகவிற்கு செக்

டாஸ்மாக் ஊழல் என்று பாஜக கடுமையான புகார்கள் வைத்து வருகிறது. ஆனால் இந்த டாஸ்மாக் ஊழல் புகார் என்பது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மட்டும் நெருக்கடி இல்லை. மொத்தமாக அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களுக்கும் செக் வைக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன.

இந்த வழக்கில் கிட்டத்தட்ட 40 FIR பதியப்பட்ட அடிப்படியில் அமலாக்கத்துறை விசாரணை செய்து வருகிறது. அதாவது டாஸ்மாக்கில் முறைகேடு என்று தமிழக அரசே தாக்கல் செய்த FIR அடிப்படையில் விசாரணை நடக்கிறது.

இந்த FIR களில் கிட்டத்தட்ட 34 எப்ஐஆர்கள் அதிமுக அமைச்சராக இருந்த தங்கமணி காலத்தில் பதியப்பட்ட FIR கள் ஆகும். அதாவது தங்கமணி உள்ளிட்ட முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் ஆகும். இதைதான் அமலாக்கத்துறை கையில் எடுத்துள்ளது. இதில் மேலும் விசாரணை நடந்தால் அது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மட்டும் சிக்கல் அல்ல. இன்னும் சொல்லப்போனால் செந்தில் பாலாஜிக்கு பெரிய சிக்கலே இல்லை.. உண்மையான சிக்கல் அதிமுக மாஜி அமைச்சர்களுக்குத்தான்.

பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அதிமுக கூறி வரும் நிலையில்.. அமலாக்கத்துறை ரெய்டு திமுகவை விட அதிமுகவிற்கு பாஜக வைக்கும் செக்காகவே பார்க்கப்படுகிறது.

வழக்கில் நடந்தது என்ன?

நீதிபதிகள், டாஸ்மாக் அலுவலகம் சென்றதற்கான காரணங்களை அமலாக்கத் துறை தெரிவித்திருக்க வேண்டும். இரவில் ஏன் சோதனை நடத்தப்பட்டது என அமலாக்கத் துறைக்கு கேள்வி எழுப்பினர். இதை மறுத்த மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், இரவில் சோதனை நடத்தப்படவில்லை. அனைவரும் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டனர் என விளக்கமளித்தார்.

ஆனால், பொய் சொல்ல வேண்டாம். அனைத்தும் செய்தித்தாள்களில் வெளியாகியுள்ளது எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், அமலாக்க துறை தனது அதிகாரத்தை செயல்படுத்திய விதத்தை தான் கேள்வி எழுப்புகிறோம் எனக் கூறி, அமலாக்க துறை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 25 ம் தேதிக்கு தள்ளிவைத்தனர். மேலும், அதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என உத்தரவிட்ட நீதிபதிகள், எந்த வழக்குகளின் அடிப்படையில் அமலாக்க துறை சோதனை நடத்தியது என்பது குறித்த விவரங்களையும் பதில் மனுவில் தெரிவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+