அக்கு அக்கா உடையுதே.. "உலை" வெச்ச பிரபலம்.. "பாஜகவை உதறி தள்ளுங்க".. மதில்மேல் பூனையான அதிமுக.. அடடே

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடக்க உள்ள நிலையில், இதுதொடர்பாக சில பிரத்யேகமான தகவல்கள் நமக்கு கிடைத்துள்ளன.

கடந்த வாரம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றிருந்தபோது, கூட்டணி தொடர்பாக அமித்ஷாவிடம் பேசியதாக தெரிகிறது. இந்த பேச்சுவார்த்தையில் மாநில தலைவர் என்ற முறையில் தன்னை அழைக்கவில்லை, தன்னிடம் ஆலோசிக்கவில்லை என்ற அதிருப்தி அண்ணாமலைக்கு இருப்பதாக சொல்கிறார்கள்..

Edapadi Palanisamy and What decision is the AIADMK going to take today about the BJP alliance

அதனாலேயே அதிமுக - பாஜக அதிருப்தி அதிகமாகிவிட்டதாகவும், இந்த ஒரு வார காலமாகவே அதிமுகவை அண்ணாமலை விமர்சிக்க இதுதான் காரணம் என்றும் சொல்லப்படுகிறது.

கூட்டணி நீடிக்குமா: இதற்குபிறகுதான், பாஜக தலைமையை விமர்சிக்க தேவையில்லை, அண்ணாமலையை மட்டும் விமர்சித்தால் போதும் என்று எடப்பாடி சொல்லவும், அதன்படியே சிவி சண்முகமும், ஜெயக்குமாரும், அண்ணாமலை மீதான விமர்சனத்தை முன்வைத்திருந்தனர்.. அத்துடன், அதிமுகவுடன் பாஜக கூட்டணியில் இல்லை என்றும் ஜெயக்குமார் மூலம் அறிவிப்பையும் வெளியிட செய்தாராம் எடப்பாடி பழனிசாமி.

அப்பாயின்மென்ட்: இதனிடையே, அமித்ஷாவை சந்தித்து இதுகுறித்து பேசி, கூட்டணி குறித்து பேசவேண்டும் என்பதற்காக, மூத்த தலைவர்கள், வேலுமணி, தங்கமணி, கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் ரகசியமாக டெல்லி சென்றுள்ளார்கள்..

"அண்ணாமலையை மாற்ற முடியாது, கூட்டணி உறுதி, போய் தேர்தல் வேலையை பாருங்கள் என்று டெல்லி சொல்லிவிட்டதாம். இதனால், அதிமுக தலைவர்களும் என்ன செய்வதென்றுதெரியாமல் ஊர்வந்து சேர்ந்துள்ளனர். இந்த சம்பவம்தான் தற்போது அதிமுகவில் வெடித்து கிளம்பி உள்ளதாம்.

வடமாவட்ட சீனியர்: அதாவது, பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்து விட்டு, பாஜக தலைமையை சந்திக்க டெல்லிக்கு சீனியர்களை அனுப்பி வைத்ததில் எடப்பாடி பழனிசாமி மீது கோபமாக இருக்கிறாராம் அந்த வடமாவட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்.. அதுமட்டுமல்ல, டெல்லி வந்தவர்களை, பாஜக தலைமை கொஞ்சம்கூட மதிக்காததினால், இந்த கோபம் அவருக்கு பல மடங்கு அதிகரித்து விட்டதாம்.

இதனால், டெல்லியில் இருந்தபடியே எடப்பாடியை தொடர்பு கொண்ட அந்த வடமாவட்ட புள்ளி, "இங்க ஒரு பயலும் மதிக்க மாட்டேங்கிறாங்க. இத தெரிஞ்சும் தங்கமணி, வேலுமணியை எதற்கு டெல்லிக்கு அனுப்புனீங்க ? கூட்டணி இல்லைன்னு சொல்லிட்டோம். கூட்டணி வேண்டும்னா பாஜகதானே சென்னைக்கு நம்மளை தேடி வரவேண்டும்? அதுக்கு மாறாக, நாம டெல்லிக்கு வந்தது மரியாதையாக இல்லை " என்று கடுமையாக தனது ஆதங்கத்தைக் கொட்டினாராம்.

எடப்பாடி பழனிசாமி: அதற்கு எடப்பாடி பழனிசாமி, "தங்கமணியும் வேலுமணியும் ரகசியமாக டெல்லி வந்து பாஜக தலைவர்களை சந்திக்கத் திட்டமிட்டிருந்தனர். இதை தெரிந்து அவர்களை நான் தடுக்க நினைத்தேன்.. ஆனால் என்னால் முடியவில்லை.

எனினும், இவர்கள் மட்டும் டெல்லி தலைவர்களை தனியாக சந்தித்து, அதன்மூலம் கட்சிக்குள் குழப்பத்தை உருவாக்கக் கூடாது. அதனால்தான், நத்தம் விஸ்வநாதன் பெயரையும், உங்கள் பெயரையும் சேர்த்து சொன்னேன்.. நீங்கள் 5 பேரும் சேர்ந்து, பாஜக தலைவர்களை ஒன்றாக சந்தியுங்கள் என்று சொன்னேன்" என்றாராம் எடப்பாடி பழனிசாமி.

திக் திக் முடிவு?: இதற்குபிறகுதான், வடமாவட்ட சீனியருக்கு கோபம் தணிந்ததாம்.. எனினும், இன்று நடக்கவிருக்கும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், பாஜக கூட்டணியை உதறித் தள்ளுங்கள் என்று பேசுவதற்கே பெரும்பான்மையான மாவட்ட செயலாளர்கள் திட்டமிட்டிருப்பதாக சொல்கிறார்கள்.. இன்று மாலை என்ன நடக்க போகிறது? பொறுத்திருந்து பார்ப்போம்!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+