சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இங்க பாருங்க.. நாங்களும்தான் இறக்கி விட்டோம்.. ஆனால் அந்த 2 பேரும் என்ன செஞ்சாங்க தெரியுமா

திமுகவின் முக்கிய நபர்களின் விவரங்களை பாஜகவிடம் அதிமுக தந்துள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக - பாஜக பஞ்சாயத்துக்கு இப்போதைக்கு என்ட் கார்டு கிடையாது போல. மாத்தி மாத்தி தோல்விக்கு யார் காரணம் என்று புகார் பட்டியலை தொடர்ந்து வாசித்தபடி உள்ளனராம்.

அதில் இப்போது ஒரு டிவிஸ்ட். இதில் என்ன கொடுமை என்றால், தோல்விக்கு எதிர்க்கட்சிதான் காரணம் என்று அதிமுக தரப்பில் பாஜகவிடம் கூறியுள்ளனராம். வழக்கமாக தங்கள் பக்கத்தில் என்ன குழப்பம் என்றுதான் எல்லோரும் ஆராய்ந்து பார்ப்பார்கள்.

ஆனால் ஆட்சி, அதிகாரம், ஆள் பலம், பண பலம் எல்லாம் இருந்தாலும், அதையெல்லாம் எதிர்க்கட்சியின் பண பலம் தகர்த்து விட்டதாக அதிமுக தரப்பில் பாஜகவிடம் கூறியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அதிர வைத்துள்ளது.

டிடிவி தினகரன் அதிமுகவுக்கு மீண்டும் வந்தால்... அமைச்சர் செல்லூர் ராஜு அதிரடி பதில்டிடிவி தினகரன் அதிமுகவுக்கு மீண்டும் வந்தால்... அமைச்சர் செல்லூர் ராஜு அதிரடி பதில்

விசாரணை

விசாரணை

ஆட்சி அதிகாரம் இருந்தும் தமிழகத்தில் நாம் தோற்றது ஏன் என்று அதிமுகவிடம் பாஜக தொடர்ந்து விசாரித்தபடியே உள்ளது. தமிழக பாஜக தலைவர்களிடமும் விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் அதிமுக தரப்பில் பாஜகவிடம் ஒரு தகவலைச் சொல்லியுள்ளனராம். இதுதான் இந்த செய்தியின் அடிப்படை.

வட மாவட்டம்

வட மாவட்டம்

கரூர் மற்றும் வட மாவட்டத்தைச் சேர்ந்த இரு பெரும் புள்ளிகளை அதிமுக தரப்பில் கை காட்டியுள்ளனராம். இவர்கள் பண பலத்தில் மிகப் பெரியவர்கள். ஆட்களை இழுப்பதில் வல்லவர்கள். இவர்கள்தான் நமது தோல்விக்கு மிக முக்கிய காரணம் என்று கூறியுள்ளனராம்.

கை மீறி போனது

கை மீறி போனது

நாமும் நிறைய செலவு செய்தோம். என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ எல்லாவற்றையும் செய்தோம். ஆனால் அவர்கள் நம்மை மீறி போய் விட்டனர். நாம் செய்ததை ஒன்றுமில்லாமல் செய்து விட்டனர்.

உள்ளடி வேலை

உள்ளடி வேலை

ஆட்களை இழுப்பது, வளைத்துப் போடுவது, உள்ளடி வேலை, பணம் செலவிடுவது என எல்லாவற்றிலும் நமக்குப் பெரும் போட்டியாக திகழ்ந்தனர். இதனால்தான் நாம் என்ன செய்தும் கூட வெற்றி நமக்கு வசமாகாமல் போய் விட்டது என்று பாஜகவிடம் கூறப்பட்டுள்ளதாம்.

பாஜக கோபம்

பாஜக கோபம்

இதன் மூலம் அந்த இரண்டு பேரும்தான் தோல்விக்கு முக்கிய காரணம், நாங்கள் இல்லை என்பதை மறைமுகமாக எடுத்து வைத்துள்ளனராம். இதனால் பாஜகவின் கோபம் தம் மீது குறைந்து இந்த இருவர் பக்கம் திரும்பும் என்பது அதிமுக புள்ளிகளின் எண்ணமாம். ஆனால் பாஜக இதை தனது கட்சியினர் மூலம் கிராஸ் செக் செய்து வருகிறதாம்.

எனவே அடுத்தடுத்த நாடுகளில் பல்வேறு பரபரப்புகளை எதிர்பார்க்கலாம் என்று சொல்கிறார்கள்.

English summary
The AIADMK has told the BJP that the two DMKs mainstream people are responsible for the defeat.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X