சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஒற்றைத்தலைமைக்கு 2,441 பேர் ஆதரவு..தேர்தல் ஆணையத்தின் கதவை தட்டிய இபிஎஸ்..பிரமாண பத்திரம் தாக்கல்

இந்திய தேர்தல் ஆணையத்தில் அதிமுக செயற்குழு, பொதுக்குழுவை சேர்ந்த 2441 பேரின் ஆதரவு பிராமண பத்திரம் இ.பி.எஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: எடப்பாடி பழனிச்சாமி தான் அதிமுகவின் ஒற்றை தலைமையாக வரவேண்டும் என 2,441 பேரும் தனித்தனியே ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்திய தேர்தல் ஆணையத்தில் அதிமுக செயற்குழு, பொதுக்குழுவை சேர்ந்த 2441 பேரின் ஆதரவு பிராமண பத்திரம் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஒற்றைத் தலைமை விவகாரத்தால் அதிமுகவில் ஓ.பன்னீர்சல்வம், எடப்பாடி பழனிசாமி தரப்பினடையே மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக ஓ பன்னீர் செல்வம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக யாராவது மேல்முறையீடு செய்தால் தங்கள் தரப்பை கேட்காமல் உத்தரவு எதுவும் பிறப்பிக்கக்கூடாது என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓபிஎஸ் செய்த ஒற்றை தவறு.. உச்சபட்ச முடிவை எடுக்க போகும் எடப்பாடி? ஓ இதுக்குத்தான் அத்தனை மீட்டிங்கா? ஓபிஎஸ் செய்த ஒற்றை தவறு.. உச்சபட்ச முடிவை எடுக்க போகும் எடப்பாடி? ஓ இதுக்குத்தான் அத்தனை மீட்டிங்கா?

ஓ.பன்னீர் செல்வம் மனு

ஓ.பன்னீர் செல்வம் மனு

இதனிடையே ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் தேர்தல் ஆணையத்தில் முறையிடப்பட்டது. தலைமை தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் அளித்துள்ள அறிக்கையில், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக 5 ஆண்டுகள் பதவிக்காலம் உள்ளதாகவும், இன்றுவரை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தாம் தான் என்றும், அதில் மாற்றம் இல்லை என்றும், கூறியுள்ளார்.

அனுமதி தரக்கூடாது

அனுமதி தரக்கூடாது

அதிமுக ஒருங்கிணைப்பாளரான தனது ஒப்புதல் இன்றி வருகிற 11 ஆம் தேதி பொதுக்குழு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த கூட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. கட்சியின் சட்ட விதிகளை திருத்தி ஒற்றை தலைமையை கொண்டு வருவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதால், பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி அளிக்கக்கூடாது என்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

2441 பேர் தனித்தனியே ஆதரவு

2441 பேர் தனித்தனியே ஆதரவு


இதையடுத்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் தேர்தல் ஆணையத்தில் இன்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. செயற்குழு, பொதுக்குழுவை சேர்ந்த 2,441 பேரின் ஆதரவுடன் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. எடப்பாடி பழனிசாமி தான் அதிமுகவின் ஒற்றை தலைமையாக வரவேண்டும் என 2,441 பேரும் தனித்தனியே ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Recommended Video

    எடப்பாடியெல்லாம் எம்ஜிஆராக முடியாது! ஓபிஎஸ் தான் கட்சிக்கு தலைமை! - ஜுனியர் எம்ஜிஆர்
    பொதுக்குழு நடைபெறுமா?

    பொதுக்குழு நடைபெறுமா?

    தமிழகத்தில் நோய்த்தொற்று அதிகரித்து வரும் சூழலில் ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில் ஆட்களை திரட்டி பொதுக்குழு கூட்டம் நடத்தினால் நோய் பரவல் அதிகரிக்கும் என தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளார் புகழேந்தி. தற்போது நோய் தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்தி இருக்கும் நிலையில், தமிழக அரசு வரும் 11ஆம் தேதி அதிமுக நடத்தவுள்ள பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார். பொதுக்குழு நடைபெறுமா பார்க்கலாம்.

    English summary
    2,441 people have expressed support for Edappadi Palanisamy to become the single leader of the AIADMK. Edappadi Palanisamy has filed a petition in support of 2441 members of the AIADMK Executive Committee and the General Committee of the Election Commission of India.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X