மதுரையே நொந்து போயிடுச்சு.. ஏற்கனவே "புளிசோறு" பிரச்சனை.. இப்ப இதுவேற.. எடப்பாடிக்கு மேட்டர் தெரியுமா
சென்னை: மதுரை மாநாடு நடந்து முடிந்த நிலையில், அதன் பரபரப்புகள் இன்னும் அடங்கவில்லை. அடுத்த பிரச்சனை வெடித்து கிளம்பி உள்ளது. இது அதிமுகவினரை அதிர வைத்துள்ளது.
மதுரையில் மாநாடு என்று எடப்பாடி பழனிசாமி சொன்னதுமே, ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் மட்டுமல்லாமல், எதிர்ப்புகளும் சேர்ந்தே கிளம்பின.. இந்த மாநாட்டை தடுத்து நிறுத்த பல வழிகளில் முட்டுக்கட்டைகள் கிளம்பின என்றாலும், அனைத்தையும் முறியடித்து, மாநாட்டை நடத்தி விட்டார் எடப்பாடி பழனிசாமி,

உண்மையை சொல்லப்போனால், மாநாடு நடத்தப்பதற்கு முன்பைவிட, மாநாட்டுக்கு பிறகுதான் நிறைய சர்ச்சைகள் கிளம்பி உள்ளன.. மாநாட்டு திடலில் 2 பக்கமும் சுடச்சுட உணவுகள் தயாரிக்கப்பட்ட நிலையில், அவை எதுவுமே ருசியாக இல்லை என்பதாலும், சாப்பாடு சரியாக வேகவில்லை என்பதாலும், தொண்டர்கள் சாப்பிடாமல் சென்றதாக தெரிகிறது.
அடுத்த சர்ச்சை: இதனால், டன் கணக்கில் அண்டா, அண்டாவாக சாப்பாடு கொட்டப்பட்டுள்ளது. நிறைய புளியோதரை செய்திருக்கிறார்கள்.. அதெல்லாமே கீழே கொட்டிய வீடியோவும் வெளியானது... இந்த பரபரப்பு அடங்குவதற்குள்ளேயே அடுத்த புகார் கிளம்பி உள்ளது.. இந்த மாநாட்டுக்காக நிறைய வாகனங்கள் ஞாயிற்றுக்கிழமை அணிவகுத்து வந்தன..
போக்குவரத்து நெரிசல்: குறிப்பாக, தென் மாவட்டங்களில் இருந்து தொண்டர்கள், வடமாவட்டங்களில் இருந்துஅழைத்து வரும் வாகனங்கள் அணிதிரண்டு வருவதால், அந்த வாகனங்கள் உரிய மாற்றுப் பாதையை தேர்ந்தெடுத்து செல்ல வேண்டும் என்று மாநகர போக்குவரத்து போலீசாரும் அறிவித்திருந்தனர். ஆனாலும், எங்கே திரும்பினாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஆனால், மாநாட்டிற்கு சென்ற வாகனங்கள் சுங்க கட்டணத்தை செலுத்தவில்லையாம்.. மின்னணு தொழில்நுட்பத்தில், பாஸ்டேக் வாயிலாக கட்டணம் செலுத்துவதற்கு பலரின் வங்கி கணக்கில் பணம் இல்லை...
இதனால், சுங்கச்சாவடிகளில் வாகன எண்களை பதிவு செய்ய அனுமதிக்காமல் பலரும் முழக்கமிட்டதாக தெரிகிறது. இதன்காரணமாக, இந்த வாகனங்களின் பின்னால், வந்து நின்ற மற்ற வாகனங்களுக்கும், சரக்கு வாகனங்களிடமும் கட்டணம் வசூலிக்கப்படவில்லையாம்.
வருவாய் இழப்பு: இதனால், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு, 20 கோடி ரூபாய் அளவிற்கு வருமானம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. இந்த ஒருநாள் மாநாடு காரணமாக, ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும், தினசரி வருவாயில், 5 சதவீதம் வரை குறைந்துள்ளதாக தேசிய நெடுஞ்சாலை ஆணைய வட்டாரம் கூறியுள்ளது. சாப்பாடு வீணாண பிரச்சனையை விட்டுவிட்டு, இப்போது இந்த பிரச்சனையை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications