கடைசியாக "பணிந்ததா" பாஜக.. "மாஸ்டர் மைண்ட்" எடப்பாடி பழனிசாமி.. என்னென்னவோ நடக்குதே.. அப்ப தலைவர்?
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மிகுந்த மகிழ்ச்சியிலும், குஷியிலும் இருக்கிறாராம்.. இந்த இரட்டிப்பு ஹேப்பிக்கு காரணம் என்ன தெரியுமா?
ஒருவருட காலமாகவே, அதிமுகவுக்குள் ஒற்றை தலைமை பூசல் நிலவிவந்த நிலையில், அது கடந்த வருடம் பொதுக்குழு கூட்டத்தின் வெளியே, உடைத்து கிளம்பியது..
கடந்த ஜூலை மாதம் 11ம் தேதி இந்த பொதுக்குழு கூட்டம் நடந்தது.. அதிமுக சட்டவிதிகளில் மாற்றம் செய்து அதிமுக பொதுக்குழு செயற்குழு தீர்மானம் அன்றைய தினம் நிறைவேற்றியது.

சட்டவிதிகள்: ஆனால், சட்ட விதிகளில் மாற்றம் செய்ததை அங்கீகரிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்திருந்தனர். ஹைகோர்ட், சுப்ரீம்கோர்ட்டில், அதிமுக விவகாரத்தில் வழக்குகள் நிலுவையில் இருந்ததன் காரணமாக, அந்த சட்ட விதிகளை தேர்தல் ஆணையம் இணையத்தில் பதிவேற்றாமலேயே இருந்தது.. எனவே, கடந்த ஏப்ரல் மாதத்தில் மாற்றம் செய்யப்பட்ட அதிமுக சட்ட விதிகளை நாங்கள் அங்கீகரிக்கிறோம் என்று தேர்தல் ஆணையம் அதிமுகவிற்கு கடிதம் எழுதி இருந்தது.
இப்படிப்பட்ட சூழலில்தான் கடந்த வாரம், இந்த சட்ட விதிகளை முழுமையாக அங்கீகரித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இணையத்திலும் பதிவேற்றிவிட்டது.. சட்டப் போராட்டங்களில் ஓபிஎஸ்ஸூக்கு எதிராக தொடர் வெற்றி பெற்ற நிலையில், தேர்வாணையத்திலும் வெற்றி பெற்றிருக்கிறார்.
வெப்சைட் உறுதி: அவர் அனுப்பிய கட்சி சட்டத் திருத்தங்கள், புதிய சேர்க்கைகள் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் தலைமை தேர்தல் ஆணையம் அப்படியே ஏற்றுக்கொண்டிருக்கிறது... அதோடு அதிகாரப்பூர்வ வெப்சைட்டிலும், அவற்றை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கிறது. இதன்மூலம் எடப்பாடி பழனிசாமி தலைமை உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது.
இதுகுறித்து அதிமுக வழக்கறிஞர்களுக்கு தேர்தல் ஆணையமும் கடிதம் எழுதியிருந்தது.. இப்படி தேர்தல் ஆணைய வெப்சைட்டில், அதிமுகவின் சட்ட விதிகளை பதிவேற்றம் செய்ததன் மூலம் அதிமுகவிற்கு இரட்டை இலை சின்னம் கிடைத்துள்ளது... அத்துடன் இரட்டை இலை சின்னமும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்ற கடிதமானது, அதிமுகவின் தலைமை அலுவலகத்திற்கு அதிமுக பொதுச்செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
நிறைய மாற்றங்கள்: இந்த நிகழ்வுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமியிடம் நிறைய மாற்றங்கள் தென்பட்டு வருகிறதாம்.. அன்றைய தினமே, மா.செ. கூட்டத்துக்கான அறிவிப்பை அறிவித்து அதிரடி கிளப்பியிருந்தார் எடப்பாடி.. இதற்கு காரணம், தங்களுக்கு மட்டுமே அதிமுக என்பதைதான், பறைசாற்றும் விதமாக கூட்டத்தை கூட்டுகிறார் என்றார்கள்.. விரைவில் மதுரையிலும் மாநாடு நடத்த போவதால், அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

இப்போது விஷயம் என்னவென்றால், பாஜகவில் நிறைய மாற்றங்கள் தென்படுகிறதாம்.. குறிப்பாக, கர்நாடகாவில் பாஜக தோல்வி அடைந்திருப்பதால் அவர் மீதான பாஜக தலைவர்களின் அணுகுமுறையிலும் மாற்றம் ஏற்பட்டு இருப்பதாக சொல்கிறார்கள்.. அதாவது, எடப்பாடி பழனிசாமியிடம் இனி மென்மையாகத் தான் செல்ல வேண்டும், சாப்ட் அரசியல்தான் அவரிடம் இனி கடைப்பிடிக்க வேண்டும் என்ற பாஜக தலைவர்கள் மத்தியில் உருவாக்கப்பட்டிருக்கிறதாம்.
செம குஷி: ஏற்கனவே மகிழ்ச்சியில் இருக்கும் எடப்பாடி, பாஜகவின் மென்மைப்போக்கினால், மேலும் துள்ளி குதிக்கிறாராம்,.. இந்த உற்சாகத்துடனேயே, அடுத்தக்கட்ட அதிரடி நடவடிக்கைகளுக்கு எடப்பாடி பழனிசாமி ஓசையின்றி தயாராகி வருவதாக தெரிகிறது.. அந்தவகையில், அதிமுகவின் நிர்வாக அமைப்புகளில் மாற்றம் வரப்படலாம் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.. முக்கியமாக, தமிழகத்தின் அனைத்து பகுதி தலைவர்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பதவிகளை பிரித்து வழங்க எடப்பாடி பழனிசாமி ஆலோசித்துக் கொண்டிருக்கிறாராம்.
ஆனால், ஓபிஎஸ் தரப்போ நொந்து போயுள்ளதாம்.. கொங்கு மண்டலத்தில் மாநாடு நடத்துவது குறித்து ஓபிஎஸ் ஆலோசனை நடத்தி வரும்நிலையில், அதிமுகவை கைப்பற்றுவதில் அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டதால் ஓபிஎஸ்சிடம் முன்பு மாதிரி உற்சாகம் இல்லை என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.
நம்பிக்கை வார்த்தைகள்: தன்னை சந்திக்க வருபவர்களிடம் கூட நம்பிக்கையுடன் பேச மறுத்து, "கொங்கு மண்டலத்தில் மாநாடு நடத்தி மட்டும் என்ன ஆகப்போகிறது? " என்று விரக்தியான வார்த்தைகள் வெளிவருகிறதாம். இந்த நிலையில், "தேர்தல் ஆணையம் என்ன மாதிரி அங்கீகாரம் வேண்டுமானாலும் எடப்பாடிக்கு தரட்டும். பிரச்சனை இல்லை. ஆனால், சிவில் கோர்ட்டில் போடப்பட்டுள்ள வழக்கின் தீர்ப்புக்கு கட்டுப்பட்டதுதான். கவலையை விடுங்கள் " என்று அவ்வப்போது பண்ருட்டி ராமச்சந்திரன் தான் ஓபிஎஸ்சுக்கு தெம்பு கொடுத்து வருகிறாராம்.












Click it and Unblock the Notifications