ஆடியில சேதி ஆவணியில் தேதி! எடப்பாடிக்கு ஜெர்க் கொடுக்கும் எம்எல்ஏக்கள்! ’அவர்’ தான் காரணமா? ஷாக்தான்

Subscribe to Oneindia Tamil

சென்னை : அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு ஓ.பன்னீர்செல்வம் கடும் நெருக்கடி கொடுத்து வரும் நிலையில், தற்போது திமுக தரப்புக்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் செல்ல இருப்பதாக வெளியான தகவலால் இபிஎஸ் தரப்பு கடும் அதிருப்தி அடைந்து இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு அவ்வப்போது சில பின்னடைவுகளை சந்தித்து வந்தாலும் தற்போதைய சூழலில் அதிமுகவின் அதிகாரமிக்க தலைவராக எடப்பாடி பழனிச்சாமி உருவாகி இருக்கிறார்.

அதே நேரத்தில் அவ்வப்போது ஆதரவு காற்று ஓ பன்னீர்செல்வம் பக்கம் இறுதியில் அவருக்கு என்னமோ ஏமாற்றம் தான் மிஞ்சி வருகிறது என்கின்றனர் அதிமுகவில் இரு தரப்பிலும் தொடர்பில் இருக்கும் நடுநிலை ரத்தத்தின் ரத்தங்கள்.

ஓ.பன்னீர்செல்வம்

ஓ.பன்னீர்செல்வம்

தற்போதைய சூழலில் அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பும் இணைவதற்கு வாய்ப்பே இல்லை என இபிஎஸ் வெளிப்படையாக கூறிவிட்ட நிலையில், அணி மாறும் படலங்களும் அரங்கேறி வந்தன. உயர் நீதிமன்ற ஒற்றை நீதிபதியின் தீர்ப்புக்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு வட்டம் அதிகரிப்பது போல இருந்தாலும் உயர்நீதிமன்ற இரு நீதிபதிகளின் தீர்ப்பால் அது அப்படியே அடங்கிப் போனது. இதனால் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு உற்சாகமாக இருக்கும் நிலையில் தற்போது அவர்களுக்கு இடி போன்ற ஒரு தகவல் கிடைத்திருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

இந்த முறை அவருக்கு எதிராக இருப்பது ஓ.பன்னீர்செல்வம் அல்ல திமுக. ஆம் திமுக தரப்பிலிருந்து அதிமுக எம்எல்ஏக்களை தங்கள் தரப்புக்கு இழுப்பதற்கான முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருவதும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களே அவர்களுடன் நேரடியாக பேச்சு வார்த்தை நடத்தி இருப்பதும் ஊடகங்கள் மூலம் வெளியான நிலையில் கடும் அதிருப்தியில் இருக்கிறார் எடப்பாடி. ஈரோடு, கோவை, தர்மபுரி உள்ளிட்ட கொங்கு மண்டலங்களில் இருக்கும் அதிமுக எம்எல்ஏக்கள் சிலர் திமுகவில் சேர்ந்து தற்போது முக்கிய துறைகளை கவனித்து வரும் அமைச்சர் ஒருவர் மூலம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் இந்த பேச்சுவார்த்தை கடந்த மாதமே நிறைவடைந்து விட்டதாக கூறப்படுகிறது.

திமுகவுக்கு தாவல்

திமுகவுக்கு தாவல்

இன்னும் சில நாட்களில் அவர்கள் திமுகவில் இணையப் போவதாக வதந்திகள் உலாவின. ஆனால் அவை வதந்திகள் அல்ல உண்மைதான் என்கின்றனர் கொங்கு மண்டல திமுகவினர். ஏற்கனவே இது தொடர்பாக பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாகவும் சட்ட சிக்கல்களை தவிர்ப்பதற்காகவே அவர்கள் தற்போது அமைதி காத்து வருவதாகவும் விரைவில் தொகுதி நலன் கருதி முதலமைச்சரை சந்தித்து மனு அளிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான பேச்சுவார்த்தைகள் அனைத்தும் நிறைவடைந்துவிட்ட நிலையில் விரைவில் கொங்கு மண்டலத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற இருக்கும் பொது கூட்டத்தில் அவர்கள் முதல்வரை சந்தித்து 'தங்கள் தொகுதி நலனுக்காக மனு' அளிப்பார்கள் என கூறப்படுகிறது.

எடப்பாடி அதிருப்தி

எடப்பாடி அதிருப்தி

இதனை உறுதி செய்யும் வகையில் தான் தர்மபுரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான டாக்டர் செந்தில்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் மூன்று இரட்டை இலை சின்னங்களை பதிவிட்டதாகவும் கூறுகின்றனர். அது தொடர்பாக ஊடகத்தினர் பேசும் போதும் அது உண்மை தான் என்று செந்தில்குமார் தெரிவித்தார். இதனால் அதிமுகவில் பரபரப்பு தொற்றிக்கொண்டு நிலையில் ஒரு பக்கம் பன்னீர்செல்வத்தை சமாளிப்பதற்கே நேரம் சரியாக இருக்கிறது என எடப்பாடி பழனிச்சாமி நினைத்து வரும் நிலையில் தற்போது திமுகவும் களத்தில் இறங்கி இருப்பது எடப்பாடிக்கு கடும் நெருக்கடியை கொடுக்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+