சீக்கிரம் வாங்க.. நேரம் ஆகுதுல்ல.. சென்னை ஏர்போர்ட்டில் முதல்வரின் சுவராஸ்ய நிகழ்வு!
முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடு கிளம்பி சென்றார்.
Recommended Video
சென்னை: முதலைமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக இன்று காலை வெளிநாடு புறப்பட்டு சென்றுவிட்டார். முதலில் இங்கிலாந்து செல்லும் அவர் பின்னர் அமெரிக்கா செல்கிறார். அதைத்தொடர்ந்து நாடு திரும்பும் வழியில் துபாய் செல்கிறார். அவருடன் அவரது தனிச்செயலாளர் கிரிராஜன் உள்ளிட்ட சீனியர் அதிகாரிகள் சிலரும் பயணிக்கின்றனர்.
விமானநிலையத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்பை போல் அதீத உற்சாகமும், மகிழ்ச்சியும் வெளிப்பட்டது. முதல்வரை வெளிநாட்டிற்கு வழியனுப்புவதற்காக விமான நிலையத்தில் அதிமுக நிர்வாகிகள் காலை முதலே குவியத்தொடங்கினர். குறிப்பாக மேற்கு மண்டல சட்டமன்ற உறுப்பினர்கள் பலரும் ஆஜராகியிருந்தனர்.
முதல்வரை வழியனுப்ப வந்தவர்கள் அனைவரும் அவர் காலில் விழுந்து எழுந்து செல்ல தவறவில்லை. முன்னாள் அமைச்சர் அப்துல் ரஹீம் தொடங்கி அதிமுக அமைப்பு சாரா தொழிலாளர் அணியை சேர்ந்த சீனியர் நிர்வாகி கமலக்கண்ணன் வரை படார்..படார்.. என எடப்பாடி பழனிசாமி காலில் விழுந்து எழுந்தனர்.

உற்சாக எடப்பாடி
முன்னதாக விமான நிலையத்திற்கு வந்த எடப்பாடி பழனிசாமியை புகழ்ந்து அங்கு எழுப்பப்பட்ட வாழ்த்துக்கோஷம் விண்ணைப் பிளந்தது. ராஜ ராஜ சோழன் ரேஞ்சுக்கு புகழ்ந்து முழக்கங்கள் எழுப்பப்பட்டதால் வழக்கத்தை விட இன்று சற்று உற்சாக மூடில் காணப்பட்டார் முதல்வர்.

ஆகுது
முதல்வரை வழியனுப்பி வைப்பதற்காக தி.நகர் சத்யா எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி.சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோர் தங்களது படை பரிவாரங்களை பெருவாரியாக அழைத்து வந்து எடப்பாடியை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர். தன்னை சந்தித்து மலர்கொத்து வழங்க வந்தவர்களை பார்த்து ''ஓடியாங்க..ஓடியாங்க..நேராமாகுதுல்ல'' எனக் கூறி அனைவரையும் சந்தித்து வாழ்த்து பெற்றுக்கொண்டார்.

பயண விளக்கம்
முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடு செல்வது முதலீடுகளை ஈர்க்கவா இல்லை சொந்தக்காரணத்திற்காகவா என நேற்று சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருந்தார்.

சிரிப்பு
இதனிடையே வெளிநாடு போகிற போக்கில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி, தொழிலதிபர்களிடம் பேசி முதலீடுகளை ஈர்க்கவே தாம் வெளிநாடு செல்வதாகவும், ஸ்டாலின் அடிக்கடி வெளிநாடு ஏன் செல்கிறார் எனவும் வினவினார். தாம் என்றுமே ஒரு விவசாயி என உருகிய எடப்பாடி சிரித்த முகத்துடன் செய்தியாளர்களிடம் இருந்து விடைபெற்று விருட்டென விமான நிலையத்திற்குள் நடையை கட்டினார்.












Click it and Unblock the Notifications