சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஸ்டாலினுக்கு சிக்கல்?.. ஓபிஎஸ்ஸா இது?.. "அந்த மாடு முறைச்சு பார்க்குது".. யூடர்ன் அடிக்கும் அதிமுக

திமுக அரசை குற்றஞ்சாட்டி ஓபிஎஸ் விமர்சித்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: சில மாதங்களாக ஒதுங்கி கிடந்த அதிமுக, திடீரென விஸ்வரூபம் எடுத்து கொண்டிருக்கிறது.. ஒருபக்கம் நீட் விவகாரம் மறுபக்கம் தேர்தல் பிரச்சாரங்களில் திமுகவை டேமேஜ் செய்ய ஆரம்பித்துள்ளது.. இதனால் ஸ்டாலினுக்கு சிக்கல்கள் பெருகும் சூழல் ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.

திமுக ஆட்சி பொறுப்பேற்று இத்தனை மாத காலத்தில் அதிமுக சத்தமின்றிதான் கிடந்தது.. காரணம், தேர்தலில் அதிர்ச்சி தோல்வி, சசிகலாவின் எழுச்சி, உட்கட்சி பூசல், மாஜிக்களிடம் அதிரடி ரெய்டுகள், ஊழல் வழக்குகள், என இடியாப்ப சிக்கலில் அக்கட்சி சிக்கி கொண்டுவிட்டது.

இதற்கு பிறகுதான் மெல்ல மெல்ல ஒவ்வொரு பிரச்சனையில் இருந்தும் தன்னை விடுவித்து கொள்ள முயன்றது.. இப்போது கேஸ், கோர்ட் போன்றவற்றை ஒரு ஓரமாக ஒதுக்கிவிட்டு, திமுகவை சரமாரியாக தாக்க ஆரம்பித்துவிட்டது.

ஸ்டாலினுக்கு வந்த தர்மசங்கடம்.. திமுகவுக்கு எதிராக முக்கிய முடிவை எடுக்கும் பாஜக?.. இனிதான் சிக்கலேஸ்டாலினுக்கு வந்த தர்மசங்கடம்.. திமுகவுக்கு எதிராக முக்கிய முடிவை எடுக்கும் பாஜக?.. இனிதான் சிக்கலே

 நீட் விவகாரம்

நீட் விவகாரம்

நீட் விவகாரத்தில் அதிமுக இப்படி ட்விஸ்ட் தரும் என்று யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.. அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்கலாம் என்று ஓபிஎஸ் அவ்வளவு சொல்லியும் எடப்பாடி தான் பிடிவாதமாக மறுத்துவிட்டதாகவும், 2 வருடம் ஆட்சியில் உள்ள பாஜகவை பகைத்து கொள்ள தேவையில்லை என்று நிர்வாகிகளை சமாதானப்படுத்தியதாகவும் செய்திகள் வந்தன.. நீட் விஷயத்தில் உதயநிதியையும், பொங்கல் தொகுப்பு விஷயத்தில் ஸ்டாலினையும் அதிமுக தனித்தனியாக பிரித்து வைத்து விமர்சித்து வருகிறது.

 சட்டசபை தேர்தல்

சட்டசபை தேர்தல்

இதையே தங்கள் பிரச்சார யுக்திகளாகவும் கையில் எடுத்துள்ளது.. நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ஸ்டாலின் பிரச்சாரம் செய்ய எங்கு சென்றாலும், நீட் விவகாரம் குறித்து எடப்பாடி என்னுடன் விவாதிக்க தயாரா? அதிமுக, திமுக ஊழல்களை பட்டியல் போட்டு பேச தயாரா? நேருக்கு நேர் ஒரே மேடையில் விவாதிக்க தயாரா? என்று கேள்வி எழுப்பி கொண்டே இருந்தார்.. இப்போது அதே கேள்வியை பிரச்சாரங்களில் ஸ்டாலினும் கேட்டு வருகிறார்.. அந்த பக்கம் எடப்பாடியும் கேட்டு வருகிறார்.

 எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

ஈரோட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, தினம் ஒரு தகவல் என்பது போல, தினம் ஒரு பொய்யை எடப்பாடி பழனிசாமி சொல்லி வருகிறார்.. நீட் தேர்வு மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகே அமலுக்கு வந்தது. திமுக ஆட்சியில் இருந்த வரை தமிழ்நாட்டில் ஒரு இடத்திலும் நீட் தேர்வு நடக்கவில்லை. அவ்வளவு ஏன் ஜெயலலிதா இருந்த வரை கூட நீட் தேர்வு நடைபெறவில்லை. நீட் தேர்வு அதிமுக ஆட்சியில்தான் வந்தது. இதை ஆதாரங்களுடன் நிரூபிக்க நான் தயார்... இதுகுறித்து பழனிசாமி என்னுடன் விவாதிக்க தயாரா?" என்று கேட்டார்.

 சவால்

சவால்

கடந்த முறை பிரச்சாரங்களில் இதற்கு பதில் சொல்லாத எடப்பாடி பழனிசாமி, இந்த முறை இந்த சவாலை ஏற்றுள்ளார்.. மதுரையில் பேசிய அவர், நீட் விவகாரம் தொடர்பாக ஸ்டாலினின் சவாலுக்கு நாங்கள் தயார். பொது இடத்தில் நீட் விவகாரம் குறித்து விவாதிக்க ஓபிஎஸ்ஸும், நானும் வர்றோம்" என்று பதிலுக்கு சவால் விடுத்துள்ளார்.

 முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்

அதேபோல, கரூர் பிரச்சார கூட்டத்தில் ஓபிஎஸ், திமுகவை லிஸ்ட் போட்டு குற்றஞ்சாட்ட ஆரம்பித்துவிட்டார்.. குறிப்பாக பொங்கல் பரிசு தொகுப்பூதியம் பற்றிய பேச்சு, திமுகவுக்கே எரிச்சலை கிளப்பும் அளவுக்கு சென்றுவிட்டது.. ஓபிஎஸ் பேசும்போது, பொங்கல் பரிசு தொகுப்புன்னு ஒன்னு கொடுத்தாங்களே, அதை பார்த்து நாடே சிரிக்குது... ஒரு பைசா கொடுக்க கூட அது வக்கில்லை... அந்த அரிசியை பிரித்தாலே நாற்றம் அடிக்குது. வெல்லம் தண்ணியா உருகி போச்சு... வட நாட்டில் இருந்து பொருட்களை வாங்கி தந்தாங்க.. அதான்.

 பொங்கல் பரிசு

பொங்கல் பரிசு

அந்த அரிசியை மாட்டுக்கு கொடுத்தால் அது முறைச்சு முறைச்சு பார்க்குது.. மொத்தத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கியதில் 500 கோடி ஊழல் நடந்துள்ளது... அம்மாவிற்கும், எம்ஜிஆருக்கும் துரோகம் செய்த அத்தனை பேரும், அதன் பலனை அனுபவிப்பார்கள் என்றார்.. ஏற்கனவே இதே ஊழல் குற்றச்சாட்டைதான் எடப்பாடியும் கடந்த மாதம் திமுக மீது வைத்திருந்தார்.. இதற்கு தான் முதல்வர் ஸ்டாலின் உடனடியாக சாட்டையை எடுத்து, சம்பந்தப்பட்ட அதிகாரியை டிஸ்மிஸ் செய்தார்.. இன்னும் களையெடுப்பு நடக்கத்தான் போகிறது.. ஆனாலும், விடாமல் திமுக ஊழல் செய்ததாக ஓபிஎஸ்ஸும் சொல்ல ஆரம்பித்துள்ளார்..

 குற்றச்சாட்டுகள்

குற்றச்சாட்டுகள்

மற்ற குற்றச்சாட்டுகள், குறைகள் பொதுப்படையானது என்றாலும், 500 கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக அதிமுக கிளப்பி வருவது, தேர்தல்கள் வரும் சமயத்தில் சிக்கலையே ஏற்படுத்த முயல்வது போல தெரிகிறது.. இதற்கு தக்க பதிலடியை திமுக தரப்பு விரைவில் என்றும் நம்பப்படுகிறது.. எனினும் திமுக அரசின் செயல்பாடுகளை நாட்டு மக்கள் உன்னிப்பாக கவனித்து வருவதாலும், பெரிய அளவிலான அதிருப்திகள் இல்லாததும், திமுகவுக்கு சாதகமான முடிவையே இந்த தேர்தலில் பெற்று தரும் என்று நம்பப்படுகிறது.

English summary
Edappadi palanisamy accepts CM MK Stalins challenge to discuss NEET
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X