ரிவென்ஞ்ச் டைம்.. எடப்பாடி மாஸ்டர் பிளான்.. எஸ்.பி.வேலுமணி அப்செட்.. அதிமுகவில் மீண்டும் தர்மயுத்தம்

Subscribe to Oneindia Tamil

கோவை: சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர்உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அணி திரண்டனர். தவெகவுக்கு ஆதரவளித்தனர். இதனால், அவர்களின் பதவியை எடப்பாடி பறித்தார். வேலுமணி எடப்பாடியிடம் சரண்டரானாலும், பழைய பதவியை அவருக்கு கொடுக்கவில்லை. கோவையில் அதிமுக அவரின் கண் அசைவில் தான் இயங்கியது. அதை எடப்பாடி முடக்கியதால் வேலுமணி அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்ய உள்ளாராம்.

அதிமுகவில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்த இடத்தில் முன்னாள் அமைச்சர் வேலுமணி இருந்தார். அதிமுக ஆட்சியில் நிழல் முதல்வர் என்றும் வேலுமணியை அழைத்தனர். கட்சியிலும், ஆட்சியிலும் அவர் பவர்புல்லாக இருந்தார். ஆட்சியை இழந்தும் கட்சியில் வேலுமணி செல்வாக்குடன் தான் இருந்தார். கொங்கு மண்டலம் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் தனக்கான ஆதரவு வட்டத்தை உருவாக்கினார். அவ்வப்போது கருத்து வேறுபாடுகள் நிலவினாலும் எடப்பாடி - வேலுமணி நெருக்கமாகவே இருந்தனர்.

edappadi-palanisamy-admk-edappadi-palanisamy-triggered-sp-velumani-soon-to-take-decision

வேலுமணி முயற்சிகள் வீண்

ஆனால் கடந்த சில வருடங்களாக அவர்களிடையே விரிசல் விரிவடைந்து கொண்டே இருக்கிறது. சட்டமன்ற தேர்தல் தோல்வி எடப்பாடி வேலுமணியை பகையாளியாகவே மாற்றிவிட்டது. எடப்பாடிக்கு எதிராக பனிப்போர் நடத்தி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்து அமைச்சரவையில் இடம்பெற முயற்சி செய்தார் வேலுமணி. அது நடக்கவில்லை. இதனால் வேலுமணி மீண்டும் எடப்பாடியிடம் சரண்டரானார். மோதல் நிலவிய போது நமது அம்மா நாளிதழ், நியுஸ் ஜெ தொலைக்காட்சி ஆகியவற்றை வேலுமணி கைப்பற்றினார்.

அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வேலுமணியிடம் இருந்த தலைமை நிலைய செயலாளர், கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் பதவி ஆகியவற்றை எடப்பாடி பழனிசாமி பறித்தார். எடப்பாடியிடம் சரண்டராகிவிட்டதால் தன்னுடைய பழைய பதவி கிடைக்கும் என்று வேலுமணி நினைத்தார். பதவி கிடையாது என்று எடப்பாடி கறாராக உள்ளார். கோவை அதிமுக அலுவலகத்தை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேலுமணி என்னவெல்லாமோ செய்து பார்த்தார்.

எடப்பாடிக்கு எதிராக திட்டம்

அதையும் அவரால் தக்க வைக்க முடியவில்லை. அவர் வசம் இருந்த மாவட்ட செயலாளர் பதவியில், முன்னாள் அமைச்சர் செ.ம. வேலுசாமி நியமிக்கப்பட்டு அவர் சார்ஜ் எடுத்துவிட்டார். இந்த நிகழ்ச்சியில் வேலுமணியின் ஆதரவாளர்கள் அனைவரும் வேலுசாமியை சந்தித்து அவரின் ஆதரவாளர்களாக மாறிவிட்டனர். மாவட்ட செயலாளர் பதவியேற்பு நிகழ்வுக்கு வேலுசாமியே நேரடியாக வேலுமணிக்கு அழைப்பு விடுத்துள்ளார். அன்றைய தினம் கோவையில் இருந்து கொண்ட வேலுமணி புறக்கணித்துவிட்டார்.

வேலுசாமிக்கு வாழ்த்து தெரிவித்து சமூகவலைதளங்களில் ஒரு பதிவு கூட வேலுமணி போடவில்லை. பவர்புல்லாக இருந்த தன்னை புறக்கணிப்பதை வேலுமணி விரும்பவில்லையாம். இதனால் எடப்பாடிக்கு பாடம் கற்பிக்க அவர் திட்டமிட்டு வருகிறாராம். இதற்காக சைலன்டாக ஒரு வார் ரூமை உருவாக்கி எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து விமர்சிக்க வைக்கிறாராம். மேலும் தனக்கு தெரிந்த ஊடகவியலாளர்களிடம் பேசி எடப்பாடிக்கு எதிராக கருத்துகளை பரப்ப சொல்லி வருகிறாராம்.

தன்னுடைய பழைய பதவிகளை வழங்க எடப்பாடிக்கு குறிப்பிட்ட கால அவகாசம் வழங்கவுள்ளாராம். அதற்குள் பழைய பதவியை கொடுக்காவிடின் மீண்டும் தர்மயுத்தம் நடத்துவது அல்லது கட்சி மாறுவது என்கிற முடிவில் உள்ளாராம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+