பட்டென பக்கத்தில் வந்த போலீஸ் அதிகாரி! உற்று பார்த்த எடப்பாடி.. தப்பாகிடுச்சோ! அடுத்து நடந்த சம்பவம்
சென்னை: அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இன்று சென்னையில் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட சம்பவம் பெரிய அளவில் வைரலாகி வருகிறது.
Recommended Video
மிகப்பெரிய புயல் அடித்து ஓய்ந்தது போல அதிமுகவில் தற்போது அமைதி நிலவி வருகிறது. நேற்றுதான் சசிகலா வழக்கில் தீர்ப்பு வந்தது.
அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் என்று சென்னை நீதிமன்றம் தீர்பளித்துவிட்டது. எடப்பாடி கேம்பை இந்த தீர்ப்பு சந்தோசத்தின் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

எடப்பாடி கெம்ப்
இந்த தீர்ப்பை தொடர்ந்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று அதிமுக கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி தலைமையில் மூத்த உறுப்பினர்கள் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது. மூத்த நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதில் கோர்ட் தீர்ப்பு பற்றி விவாதிக்கப்பட்டது.

என்ன நடந்தது?
இந்த நிலையில் சென்னையில் இன்று சட்டசபை நிகழ்வில் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார். இதற்காக அவர் தனது டோயோட்டா காரில் சென்று இருந்தார். அவர் எப்போதும் பயன்படுத்தும் ஆஷ் நிற டோயோட்டா கார் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து சட்டசபை கூட்டம் வெளியே வந்தவருக்கு அதிமுக தொண்டர்கள் பலர் மரியாதையை செய்தனர்.

தொண்டர்கள்
அதிமுக தொண்டர்கள் பலர் எடப்பாடியை சூழ்ந்து கவர்ந்து வாழ்த்து தெரிவித்தனர். இவர்கள் எல்லோருக்கும் எடப்பாடி மாறி மாறி நன்றி தெரிவித்தார். பெரும்பாலும் சசிகலா வழக்கில் சாதகமாக வந்த தீர்ப்பிற்கு அதிமுக நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்தனர். இவர்களிடம் பேசிக்கொண்டே வந்த எடப்பாடி பழனிசாமி அங்கு நின்ற ஆஷ் நிற டோயோட்டா காரில் ஏற சென்றார்.

மாறிவிட்டார்
அப்போது அருகில் இருந்த போலீஸ் எடப்பாடி அருகே சென்று.. கார் டோர் முன் நின்று.. இது உங்கள் கார் இல்லை சார் என்றார். உடனே எடப்பாடி அந்த போலீசை உற்று பார்த்தார் .. அதன் பின் தலையில் கை வைத்து தப்பான காரில் ஏற போய்விட்டேனே என்று கூறிக்கொண்டே சட்டென அங்கிருந்து நகர்ந்தார். அந்த கார் திமுக எம்எல்ஏ உதயநிதியின் கார். எடப்பாடியின் ஆஷ் நிற டோயோட்டா கார் முன் பக்கம் நிறுத்தப்பட்டு இருந்தது. இதையடுத்து அங்கிருந்து நடந்து சென்று தனது காரில் ஏறினார்.

உதயநிதி ஸ்டாலின்
ஏம்பா என் காருக்கு ஒழுங்கா கூட்டு போகமாட்டியா என தனது பாதுகாவலரை கடிந்து கொண்ட படி தன் காரில் ஏறி கிளம்பினார் எடப்பாடி. தொண்டர்களின் வரவேற்பால் திக்குமுக்காடி போன எடப்பாடி கார் மாறி ஏறப்போன சம்பவம் வைரலாகி வருகிறது. சட்டப்பேரவையில் ஆளுங்கட்சிக்கு எதிராக கேள்விகளை எழுப்பி விவாதம் செய்த களைப்பில் தன்னிலை மறந்து எது தன்னுடைய கார் என தெரியாமல் சட்டமனற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் காரில் ஏற முயன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் உலா வருகிறது
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications