ஓபிஎஸ் வந்துட்டு இருக்கார்! சட்டென எடப்பாடிக்கு போன மெசேஜ்.. போட்டோவை எடுங்க.. கிளம்புங்க.. பரபரப்பு
சென்னை: சென்னை அண்ணாசாலையில் உள்ள மேம்பாலத்திற்கு அருகே இருக்கும் பெரியார் சிலைக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சார்பாக மரியாதை செலுத்தப்பட்டது. அப்போது அங்கே ஓபிஎஸ் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது;
தந்தை பெரியாரின் 144-வது பிறந்த நாள் இன்று தமிழ்நாடு முழுக்க வெகுசிறப்பாக கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டின் இரண்டு பெரிய கட்சிகளான திமுக, அதிமுக இரண்டிற்கும் அஸ்திரவமே பெரியார்தான்.
இந்த நிலையில் பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுக்க அவரின் சிலைக்கு அரசியல் தலைவர்கள் மரியாதை செய்து வருகின்றனர். தந்தை பெரியாரின் பிறந்தநாள் சமூக நீதி நாளாகக் கொண்டாடப்படுகிறது.

எடப்பாடி
இந்த நிலையில் சென்னை அண்ணாசாலையில் உள்ள மேம்பாலத்திற்கு அருகே இருக்கும் பெரியார் சிலைக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சார்பாக மரியாதை செலுத்தப்பட்டது. இதற்கு முன்பாக அங்கு அதிமுகவினர் சார்பாக அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. அதிமுகவினர் அந்த சிலைக்கு மாலை போட்டு, கீழே மலர்கள் வைத்து அலங்காரம் செய்து இருந்தனர். அதோடு அதிமுகவினர் பெரியார் புகைப்படம் ஒன்றையும் அங்கே எடுத்து வந்தனர்.

பெரியார் புகைப்படம்
பிரேம் செய்யப்பட்ட புகைப்படம் ஒன்றை அதிமுகவினர் எடுத்து வந்து அங்கே வைத்து இருந்தனர். இதையடுத்து அங்கு எடப்பாடி பழனிசாமி வந்து மரியாதை செய்தார். அவருடன் அதிமுக எம்எல்ஏக்கள், மாஜி அமைச்சர்கள், மூத்த தலைவர்கள் உடன் இருந்தனர். பெரியார் சிலைக்கு மரியாதை செய்து கொண்டு இருக்கும் போதே, அங்கு இருந்த அதிமுக நிர்வாகிகளுக்கு ஓபிஎஸ் வருவதாக தகவல் சென்றுள்ளது. அண்ணாசாலையில் உள்ள அந்த சிலைக்கு மரியாதை செய்ய ஓபிஎஸ் திட்டமிட்டு இருந்தார்.

எடப்பாடி
எடப்பாடி அங்கே இருக்கும் அதே நேரத்தில் ஓபிஎஸ் பெரியார் சிலைக்கு அருகில் வந்து கொண்டு இருப்பதாக தகவல் சென்றுள்ளது. இதையடுத்து உடனே எடப்பாடி பழனிசாமி அங்கிருந்து அவசரமாக கிளம்பினார். ஓ பன்னீர்செல்வம் வருவது தெரிந்தும் எடப்பாடி பழனிசாமி அங்கிருந்து உடனே வெளியேறினார். அவரை தொடர்ந்து சட்டென மற்ற மாஜி அமைச்சர்களும், அதிமுக எம்எல்ஏக்களும் அங்கிருந்து கிளம்பினார்கள்.

நெரிசல்
இந்த நிலையில்தான் அதிமுகவினர் அங்கிருந்து கிளம்பும் போது அங்கே செய்யப்பட்டு இருந்த அலங்காரங்களை எடுத்துவிட்டு சென்றனர். அதோடு பெரியார் படம் அங்கே வைக்கப்பட்டு ருந்தது. அதையும் சட்டென்று தூக்கிவிட்டு அங்கிருந்து கிளம்பி சென்றனர். இதையடுத்து ஓ பன்னீர்செல்வம் அங்கே வந்தார். அங்கு வந்து அவர் சிலைக்கு மரியாதை செய்தார். இரண்டு பேரும் அங்கு அடுத்தடுத்து வந்ததால் கடுமையான போக்குவரத்து நெரிசல் அங்கே ஏற்பட்டது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications