கைதி அமைச்சராக ஏன் தொடர வேண்டும்? செந்தில் பாலாஜி குறித்து எடப்பாடி பழனிசாமி கேள்வி
சென்னை: சிறை கைதி எண் கொடுத்த பிறகும் செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வது தவறு என எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.
மாற்றுக்கட்சியினர் பலர் அங்கிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். இந்த விழாவில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், கொள்கை அடிப்படையில்தான் கூட்டணி அமைத்தது அதிமுக.

எனவே நாங்கள் யாருக்கும் அடிமையில்லை. திமுகதான் பிறருக்கு அடிமையாக இருக்கிறது. தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சி என்றால் அது அதிமுகதான். தமிழகத்தில் 25 லோக்சபா தொகுதிகளில் பாஜக வெல்லும் என மத்திய அமைச்சர் அமித்ஷா கூறியது அவரது கருத்து.
அது போல் நான் சொல்கிறேன். தமிழகம், புதுவையில் 40 லோக்சபா தொகுதிகளில் அதிமுக வெல்லும் சூழல் பிரகாசமாக இருக்கிறது. ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வது என்பது தவறு. அவருக்கு கைதி எண் கொடுத்தாகிவிட்டது.
அவர் மருத்துவமனையில் இருந்தாலும் கிட்டதட்ட போலீஸார் பாதுகாப்பில்தான் இருக்கிறது. ஏற்கெனவே திமுக ஆட்சியில் ஆலடி அருணா, நில அபகரிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட என்கேகேபி ராஜா , அதிமுக ஆட்சியில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட அமைச்சர்கள் மீது புகார் வந்த போது அவர்கள் எல்லாம் அமைச்சரவையிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
இதுதான் தமிழகத்தின் வரலாறு. எனவே அரசியல் நாகரிகம் கருதி முதல்வர் ஸ்டாலின் செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும். இதைத்தான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். ஒரு கைதியை எதற்காக முதல்வர் போய் சந்திக்கிறார்.
இது ஜனநாயக நாடு யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். எனவே விஜய் அரசியலுக்கு வருவதையும் நான் அப்படித்தான் பார்க்கிறேன். நீட் தேர்வை பொருத்தமட்டில் 2010 ஆம் ஆண்டு டிசம்பர் 21 ஆம் தேதி அறிவிக்கை வெளியானது. அப்போது யாருடைய ஆட்சி இருந்தது.
திமுக- காங்கிரஸ் கூட்டணி ஆட்சிதான் மத்தியில் இருந்தது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக காந்தி செல்வன்தான் இருந்தார். நீட் வேண்டாம் என்பதுதான் அதிமுகவின் முடிவு. இதற்காக நீதிமன்றம் வரை சென்று போராடியுள்ளோம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்!












Click it and Unblock the Notifications