Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜெயலலிதா மாதிரி இல்லை.. "தம்பி என்ன பண்ணுற?".. பழனி கோவிலில் கடிந்து கொண்ட எடப்பாடி.. சூப்பர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பழனி முருகன் கோவிலுக்கு சென்ற எடப்பாடி பழனிசாமி இன்று அதிமுக தொண்டர்களுடன் சேர்ந்து வழிபாடு செய்து, சிறப்பு பூஜையும் மேற்கொண்டார்.

Recommended Video

    பழனி முருகனை தரிசித்த எடப்பாடி பழனிச்சாமி

    அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக அவரின் ஆதரவாளர்கள் மூலம் தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி தற்போது ஆளும் திமுக அரசுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை வைத்து வருகிறார். எதிர்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி.. உட்கட்சி பிரச்சனையால் கடந்த சில நாட்களாக திமுகவை விமர்சிக்காமல் இருந்த நிலையில் மீண்டும் திமுக மீது கவனம் செலுத்த தொடங்கி உள்ளார்.

    சமீபத்தில் கூட ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளம் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு சென்று மக்களிடம் பேசினார். அரசு உடனடியாக இவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கைகளை வைத்தார்.

    இந்த நிலையில்தான் நேற்று எடப்பாடி பழனிசாமி பழனி சென்றார். அங்கு நடந்த திமுக பொதுக்குழு கூட்டத்தில் திமுகவை கடுமையாக விமர்சனம் செய்து பேசினார். இலங்கையில் குடும்ப ஆட்சிக்கு மக்கள் முடிவு கட்டியது போல தமிழ்நாட்டிலும் நடக்கும்.

    அதிமுக

    அதிமுக

    அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது . தொண்டர்கள் பலர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். இந்த கூட்டமே அதிமுகவின் வலிமையை காட்டும் கூட்டம். பழனி முருகன் அருள் அதிமுகவிற்கு இருக்கிறது. அதனால்தான் இவ்வளவு தொண்டர்கள் கடல் போல திரண்டு உள்ளனர். மக்கள் விரோத அரசை திமுக செய்து வருகிறது. கடந்த 14 மாதங்களில் திமுக ஆட்சியில் மக்களுக்கான நலத்திட்டங்கள் எதுவும் செய்யப்படவில்லை. வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.

    எடப்பாடி

    எடப்பாடி

    திமுக என்பது குடும்ப கட்சி. ஒரு குடும்பத்திற்காக அந்த கட்சி இயங்கிக்கொண்டு இருக்கிறது. ஆனால் அதிமுக என்பது ஜனநாயக கட்சி. ஜனநாயக ரீதியாக இதில் நிர்வாகிகள் தொண்டர்கள் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். நாங்கள் மக்கள் நலனில் அக்கறை செலுத்தி வருகிறோம். அதிமுக வேண்டுமானால் ஆட்சியில் இல்லாமல் இருக்கலாம். ஆனால் நாங்கள் மக்கள் நலனை கருத்தில் கொண்டே செயல்படுகிறோம் என்று எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார்.

    வழிபாடு

    வழிபாடு

    இதையடுத்து இன்று பழனியில் எடப்பாடி பழனிசாமி வழிபாடு செய்தார். பழனி மலைக்கோயிலுக்கு எடப்பாடி பழனிசாமி ரோப் கார் மூலம் சென்றார். காலை 7 மணிக்கே சிறப்பு வழிபாடு நடத்தினார். அதன்பின் காலசாந்தி மற்றும் சிறுகாலசந்தி போன்ற முக்கிய பூஜைகளை மேற்கொண்டார். பின்னர் கோவில் பிரகாரத்தை சுற்றி வந்தார். அதன்பின் அங்கு கோவிலில் மக்கள் அமர்ந்து ஓய்வு எடுக்கும் இடத்தில் இவரும் அமர்ந்து ஓய்வு எடுத்தார்.

    மேடையில் அமரவில்லை

    மேடையில் அமரவில்லை

    இந்த நிலையில் எடப்பாடியை பார்க்க வந்த நிர்வாகிகள் பலர் எடப்பாடி இருக்கும் மேடையில் அமராமல் கீழே தரையில் அமர்ந்தனர். இவர்களை பார்த்ததும்.. யாரும் கீழே அமர கூடாது. தம்பி தம்பி மேலே போய் உட்காரு என்று எடப்பாடி அன்பாக கட்டளையிட்டார். தம்பி கீழ உட்காராத.. மேலே போய் உட்காருங்க. ஏன் இப்படி பண்றீங்க என்று அன்பாக கடிந்து கொண்டார். அவரின் செயல் மிகப்பெரிய அளவில் கவனம் பெற்றது.

    என்ன செய்வார்கள்

    என்ன செய்வார்கள்

    பொதுவாக ஜெயலலிதா பொது இடங்களுக்கு செல்லும் போது அவருக்கு முன் நிர்வாகிகள் அமர மாட்டார்கள். அவர் அமர்ந்து இருக்கும் பட்சத்தில் அவருக்கு அருகில் தொண்டர்கள் யாரும் அமராமல் ஒதுங்கியே இருப்பார்கள். ஜெயலலிதா மீது இருக்கும் மரியாதை, பயம் இதற்கான காரணம். ஆனால் எடப்பாடி அப்படி எல்லாம் பார்க்காமல் தொண்டர்களையும் தான் இருந்த மேடையிலேயே அமர வைத்தது இன்று அதிமுக ரத்தத்தின் ரத்தங்கள் இடையே கவனம் பெற்றது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+