அவைக்கு நடுவே வந்து.. கத்திய எடப்பாடி! உடனே துரைமுருகனுக்கு வந்த கோபம்! டெல்லியில் நடந்தது தெரியுமா?
சென்னை: எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு சட்டசபையில் இன்று கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. எடப்பாடி பழனிசாமி அவைக்கு நடுவே வந்து கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. நேற்று பல்வேறு தலைவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு அவை ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து இன்று மீண்டும் பல்வேறு அறிக்கைகள், கேள்வி நேரம் கூட்டுவதற்காக அவை கூட்டப்பட்டது.

இன்று தமிழ்நாடு சட்டசபைக்கு வந்த எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை தொடர்பாக கேள்வி எழுப்பினர். முன்பே எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் சபாநாயகர் அறையில் அப்பாவுவை சந்தித்து எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை பற்றி கோரிக்கை வைத்தனர்.
அதற்கு என்னுடைய முடிவை நான் சபாநாயகர் அறையில் சொல்ல முடியாது. சொல்ல கூடாது. நீங்கள் சட்டசபைக்கு வாருங்கள். சட்டசபையில் நான் என் முடிவை அறிவிக்கிறேன். ஏன் அந்த முடிவை எடுத்தேன் என்றும் அறிவிக்கிறேன் என்றும் கூறி உள்ளனர்.
இதையடுத்து இன்று அவையில் கேள்வி நேரம் தொடங்கியது. கேள்வி நேரத்திற்கு பின் அதிமுக எம்எல்ஏக்கள் கேள்வி கேட்கலாம். அவர்களுக்கு நான் விளக்கம் அளிக்கிறேன் என்று அவை தொடங்கியதும் சபாநாயகர் தெரிவித்தார். ஆனால் இதை கேட்காமல் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் அவையில் அமளி செய்தனர். கேள்வி நேரத்திற்கு முன் எங்களை பேச அனுமதிக்க வேண்டும்.
நாங்கள் இப்போதே பேச வேண்டும். அதன்பின் கேள்வி நேரத்தில் விவாதம் செய்யலாம் என்று எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் கூறினர். ஆனால் அப்பாவு.. முதலில் கேள்வி நேரம் நடைபெறட்டும். அதன்பின் நீங்கள் பேசலாம். உங்களுக்குத்தான் நேரம் கொடுத்து இருக்கிறேனே. நீங்கள் ஏன் இப்போது அமளி செய்கிறீர்கள் என்று கேட்டார்.
ஆனால் எடப்பாடி பழனிசாமி இதை கேட்காமல் கோபமாக கத்தினார். உடனே குறுக்கிட்ட அமைச்சர் துரைமுருகன்.. சபாநாயகர் எடப்பாடி தரப்பினருக்கு பேச நேரம் கொடுத்து இருக்கிறீர்கள். பின்னர் பேச நேரம் கொடுப்பதாக கூறினீர்கள். ஆனால் அதை மீறி இவர்கள் ஏன் இப்படி சத்தம் போடுகிறார்கள். இவர்கள் ஏன் கூச்சல் போடுகிறார்கள் என்று கேட்டார்.

ஆனால் இதை கேட்காமல் எடப்பாடி பழனிசாமி கோபமாக கத்தினார். இதனால் அவரின் மைக் ஆப் செய்யப்பட்டது. இதனால் கோபம் அடைந்த எடப்பாடி பழனிசாமி இருக்கைக்கு வெளியே வந்தார். சபைக்கு நடுவே வந்து நின்று கொண்டு கத்தினார். அப்பாவுவை நோக்கி கோபமாக பேசினார். அதை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியும் ஆதரவு எம்எல்ஏக்களும் அவைக்கு நடுவே வந்து கூச்சல் போட்டனர்.
இவர்களை இருக்கையில் அமரும்படி சபாநாயகர் கூறினார். ஆனால் இதை எடப்பாடி கேட்கவில்லை.
உடனே குறுக்கிட்ட அமைச்சர் துரைமுருகன்.. இவர்கள் இப்படி செய்வது தவறு. டெல்லியில் நடந்தது தெரியும் அல்லவா? நாடாளுமன்றத்தில் இப்படி அவைக்கு நடுவே வந்து கூச்சல் போட்டவர்களை கூட்ட தொடர் முழுக்க சஸ்பெண்ட் செய்தனர். அது போல செய்யும் நிலைமை ஏற்பட்டுவிட கூடாது என்று கூறினார்.












Click it and Unblock the Notifications