கண்டிஷனே வேண்டாம்! இறங்கி வந்த ஓபிஎஸ்? எடப்பாடிக்கு எல்லா பக்கமும் சுக்கிர திசைதான்.. என்னாச்சு?
சென்னை: அதிமுகவில் நிலவி வந்த நியமன கையெழுத்து பிரச்சனை ஒன்றில் சுமூக முடிவு எட்டப்படலாம் என்று அதிமுக வட்டாரத்தில் சந்தோச தகவல்கள் வர தொடங்கி உள்ளன.
அதிமுகவில் கடந்த ஒரு வாரத்திற்கு முன் முக்கியமான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சட்டசபை கூட்டத்தின் இரண்டாவது பட்ஜெட் கேள்வி நேர அமர்வு தொடங்கிய அதே நாளில் மாலையில் இந்த கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டம் இரண்டு காரணங்களுக்காக நடத்தப்பட்டது. ஒன்று சசிகலா.. இரண்டாவது உட்கட்சி தேர்தல். இந்த நிலையில் ஒரே வாரத்தில் இந்த இரண்டு விவகாரத்திலும் சுமுகமான முடிவு எட்டப்பட்டு இருப்பதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. என்ன நடந்தது?

அதிமுக
அதிமுகவில் சசிகலாவை இணைப்பதை பற்றி பேச்சு நடந்து இருக்கிறது அந்த கூட்டத்தில். ஆனால் அப்போதே அதுதான் சென்னை நீதிமன்ற தீர்ப்பு வரப்போகிறதே.. அதுவரை பொறுத்திருங்கள். தீர்ப்பை பார்த்து முடிவு செய்து கொள்ளலாம் என்று எடப்பாடி தரப்பு வட்டாரங்கள் தெரிவித்து இருக்கிறதாம். இந்த நிலையில்தான் தற்போது தீர்ப்பும் சசிகலாவிற்கு எதிராக வந்து இருக்கிறது. சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது தவறு இல்லை என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.

சசிகலா
இதனால் இப்போது அதிமுகவில் சசிகலாவிற்கு ஆதரவாக இருந்த குரல்கள் எல்லாம் கப் சிப் என்று அடங்கி போய் இருக்கிறது. இந்த நிலையில் உட்கட்சி தேர்தல் விவகாரமும் சுமுகமாக முடிக்கப்பட உள்ளதாக அதிமுக வட்டாரத்தில் தகவல்கள் வருகின்றன. அதன்படி நடந்து முடிந்த 25 மாவட்ட அதிமுக உட்கட்சி தேர்தலில் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான நிர்வாகிகள் பலர் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வந்தன.

தேர்தல்
இதன் காரணமாக அந்த நிர்வாகிகள் நியமனத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கையெழுத்து போடவில்லை என்றும் கூறப்பட்டு வந்தது. உங்களுக்கு ஆதரவாக இருக்கும் மாவட்ட செயலாளர்கள் சிலரை மாற்றுங்கள்.. அப்படி மாற்றினால் இந்த நிர்வாகிகள் நியமனத்தில் கையெழுத்து போடுகிறேன் என்று ஓபிஎஸ் கண்டிஷன் போட்டதாக தகவல்கள் வந்தன. சசிகலா வழக்கில் தீர்ப்பு வருவதை எதிர்பார்த்து ஓபிஎஸ் இந்த கண்டிஷனை போட்டதாக கூறப்படுகிறது.

எடப்பாடி
அதோடு முழுக்க முழுக்க எடப்பாடி ஆதரவாளர்களுக்கு பதவி கிடைத்தால், தன்னுடைய ஒருங்கிணைப்பாளர் பதவிக்கே கூட ஆபத்து வரலாம் என்று கருதி ஓபிஎஸ் இப்படி கட்டுப்பாடு விதித்ததாக கூறப்படுகிறது. அதாவது இரட்டை தலைமை பதவியை தீர்மானம் மூலம் நீக்கி எடப்பாடி ஒற்றை தலைவராக முயற்சிக்கலாம் என்று ஓபிஎஸ் கருதியதாக தகவல்கள் வந்தன. இந்த நிலையில்தான் தற்போது எடப்பாடி பழனிசாமி ஓபிஎஸ் இடையே இந்த விவகாரத்தில் சுமூகமான தீர்வு எட்டப்பட்டு இருப்பதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மோதல்
அதன்படி மீதம் உள்ள 70 மாவட்ட தேர்தலில் ஓபிஎஸ், இபிஎஸ் என்று இரண்டு தரப்பு ஆதரவாளர்களையும் நிற்க வைக்கலாம். இதில் மோத வேண்டாம் என்று இரண்டு தரப்பும் டீலிங்கில் இறங்கி உள்ளதாக கூறப்படுகிறது. அதுதான் சசிகலா வரப்போவது இல்லை என்று உறுதியாகிவிட்டது. அவர் மேல்முறையீடு செய்தாலும் எதுவும் நடக்க போவதில்லை. இதனால் கட்சிக்குள் மோதல் வேண்டாம் என்று இரண்டு தரப்பும் சுமுகமாக இறங்கி வந்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.

கையெழுத்து
ஓபிஎஸ் தரப்பு இதில் இறங்கி வந்திருப்பதால் எடப்பாடி கேம்ப் ஹாப்பியாக இருக்கிறதாம். அதிமுகவில் இன்னும் 70 மாவட்டங்களுக்கு இந்த தேர்தல் நடக்க வேண்டும். அதன்பின் மாவட்ட செயலாளர்கள் தேர்தல் ஏப்ரல் 19, 21 தேதிகளில் நடக்க உள்ளது. இதனால் அந்த தேர்தல்களுக்கு முன்பாக ஓபிஎஸ் புதிய நிர்வாகிகள் நியமனத்தில் கையெழுத்து போடுவார். ஏற்கனவே தேர்வான 25 மாவட்ட நிர்வாகிகள் நியமனத்தில் கையெழுத்து போடுவார் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications