அதெல்லாம் ஓபிஎஸ் ஏற்றுக்கொள்வார்ங்க.. அசால்ட்டாக பேசிய கே.பி.முனுசாமி.. ஓஹோ.. இதுதான் காரணமா!
சென்னை: பொதுக் குழுவில் எடுக்கப்படும் முடிவுகளை ஓபிஎஸ் ஏற்பார் என எடப்பாடி பழனிச்சாமி தரப்பை சேர்ந்த கே பி முனுசாமி பொடி வைத்து பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
ஒற்றைத் தலைமை விவகாரம் இருதலைமைகளுக்கும் இத்தனை நாட்களாக உள்ளுக்குள்ளேயே புகைந்து கொண்டிருந்தது. தற்போது வெளியே மோதல்களாக வெடித்துள்ளது.
பொதுக் குழு கூட்டம் நடைபெற இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில் ஒற்றைத் தலைமை யார் என்ற பிரச்சினை பூதாகரமாகியுள்ளது. இந்த நிலையில் அசாதாரண சூழல் நிலவுவதால் பொதுக் குழு கூட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும் என ஓபிஎஸ் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

எடப்பாடி பழனிச்சாமி
இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் திடீரென செய்தியாளர்களை சந்தித்தனர். துணை ஒருங்கிணைப்பாளர் கே பி முனுசாமி கூறுகையில் திட்டமிட்டபடி பொதுக் குழு கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் அண்ணன் ஓ பன்னீர் செல்வம் வருகை தருவார்.

தீர்மானங்கள்
அவரும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியும் இணைந்து பொதுக் குழுவில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை ஏற்பார்கள். அவர்கள் ஏற்பதால் நாங்களும் ஏற்போம். இந்த கூட்டத்தில் அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் வந்துள்ளார்கள்.

3 பேர்
அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் ஆகிய 3 பேரை தவிர்த்து எம்ஜிஆர் காலத்திலிருந்து கட்சியிலிருப்பவர்கள் தற்போது ஒன்றாக வந்துள்ளார்கள் என்றார். கே பி முனுசாமி பேசியதில் இரு விஷயங்களை அவர் பொடி வைத்து பேசியுள்ளார்.

பொடி வைத்து பேசிய கே பி முனுசாமி
அதில் ஒன்று பொதுக் குழு கூட்டத்திற்கு ஓபிஎஸ் வருவார், பொதுக் குழுவில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை ஏற்பார் என்கிறார். அப்படியென்றால் பொதுக் குழுவில் என்ன மாதிரியான தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது. அது போல் ஓபிஎஸ்ஸுக்கு 30 மாவட்டச் செயலாளர்களின் ஆதரவு இருப்பதாக வைத்திலிங்கம் சொன்னார்.

மறைமுகமாக விமர்சனம்
ஆனால் கே பி முனுசாமியோ ஓபிஎஸ், இபிஎஸ், வைத்திலிங்கத்தை தவிர தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அதிமுக நிர்வாகிகள் இங்கு இருக்கிறோம் என குறிப்பிட்டுள்ளார். அப்படியென்றால் எடப்பாடிக்குத்தான் தமிழகத்தில் உள்ள அதிமுகவினர் ஆதரவு இருப்பதாகவும் , ஓபிஎஸ்ஸுக்கு வைத்திலிங்கத்தை தவிர வேறு யாருடைய ஆதரவு இல்லை என்றும் மறைமுகமாக கூறுகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications