ரோம் எரியும் போது பிடில் வாசித்த நீரோ.. வரி காலதாமதத்திற்கு அபராதம் வசூலிப்பதா?.. எடப்பாடி சுளீர்
சென்னை: வீட்டு வரி, சொத்து வரியை உயர்த்தியதோடு மட்டுமல்லாமல், தாமதத்திற்கு 1 சதவீதம் அபராதமும் விதிக்கப்படுகிறது. திமுக அரசின் இரட்டை வேடத்தை தமிழக மக்கள் நன்கு புரிந்துகொள்ள வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சியின் முதல் அரை நிதியாண்டுக்கான சொத்துவரியை செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் கூடுதலாக ஒரு சதவீதம் தனி வட்டியுடன் சொத்துவரி செலுத்த வேண்டுமென மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ரோம் நகரம் தீப்பற்றி எரியும்போது, நீரோ மன்னன் பிடில் வாசித்த கதையாக', தமிழக மக்கள் நலனில் துளியும் அக்கறையின்றி, அவர்கள் படும் துயரங்களை எண்ணிப் பார்க்காமல் மனம்போன போக்கில் செயல்படும், நிர்வாகத் திறனற்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவியேற்ற கடந்த 29 மாதங்களாக, மக்கள் மீது சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் மற்றும் பால் பொருட்களின் விலை உயர்வு, அனைத்து அத்தியாவசிய மளிகைப் பொருட்களின் விலை உயர்வுகள், கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வுகள் உள்ளிட்ட கட்டண உயர்வுகள் மூலம் மென்மேலும் மக்களை துன்புறுத்தி வருகிறது.
மேலும், மூலப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக அனைத்துத் தொழில் துறையினரும் மிகவும் பாதிக்கப்பட்டு தொழில் முனைவோர்கள், தொழிலாளர் குடும்பங்கள் வேலை வாய்ப்பின்மை மற்றும் பொருளாதார ரீதியாக நலிவடைந்து தங்களது வாழ்வாதாரங்களை இழந்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது, தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் நடப்பு நிதியாண்டில் (2023-2024) முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணைகளை, மாநகராட்சி எல்லைக்குள் வசிக்கும் மக்கள் காலதாமதமாக வரி செலுத்தினால், 1 சதவீதம் அபராதத் தொகை வசூலிக்கப்படும் என்று சட்டம் கொண்டுவந்து மக்களை மேலும் வாட்டி வதைக்கும் திமுக அரசின் இச்செயலுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, வரி உயர்வுக்காக பதாகைகளை ஏந்தி எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், 2021, சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போது திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் "கொரோனாவால் பாதிக்கப்பட்ட பொருளாதாரம் மீண்டும் மேம்படும் வரையில் சொத்து வரி உயர்த்தப்பட மாட்டாது" என வாக்குறுதி அளித்துவிட்டு தற்போது வரியை உயர்த்தியதோடு மட்டுமல்லாமல், தாமதத்திற்கு 1 சதவீதம் அபராதமும் விதிக்கப்படுகிறது. ஆகவே, இந்த விடியா திமுக அரசின் இரட்டை வேடத்தை தமிழக மக்கள் நன்கு புரிந்துகொள்ள வேண்டும்.
கொரோனா கால பேரிடரில் இருந்து தமிழக மக்கள் இன்னும் முழுமையாக மீண்டு வராத நிலையில் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில், வரி உயர்வுகளாலும், விலைவாசி உயர்வுகளாலும், தொழில் துறை முடக்கம், வேலையின்மை காரணமாகவும், பொதுமக்கள் பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்புக்கு உள்ளாகி, மன உளைச்சலால் மக்கள் விரோத விடியா அரசை எதிர்த்துப் போராடும் மனநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.எனது தலைமையிலான அம்மா அரசில், கொரோனா பேரிடர் காலத்தில் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்ட நிலையிலும், மக்களின் அடிப்படை வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, பொதுமக்கள் தங்களது குடும்பங்களில் பொருளாதார இடர்ப்பாடுகளை சந்தித்த நேரத்திலும், அவர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில்கொண்டு எந்தவித வரி உயர்வுகளும், கட்டண உயர்வுகளும் மக்கள் மீது திணிக்காமல் காத்து நின்றது.
ஏற்கெனவே, பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ள பொதுமக்களின் மனநிலையை அறிந்து, அவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு, தற்போது விடியா திமுக அரசால் புதிதாக விதிக்கப்பட்டுள்ள 1 சதவீத அபராதக் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டியும், உயர்த்தப்பட்ட வரி உயர்வுகளை குறைக்க எதிர்க்கட்சி உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரின் கோரிக்கையை உதாசீனப்படுத்தி, சர்வாதிகார மனப்பான்மையோடு மறுபரிசீலனை செய்யாத விடியா திமுக அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன். மேலும், தமிழகம் முழுவதும் பொதுமக்களை ஒன்று திரட்டி விடியா திமுக அரசைக் கண்டித்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போராட்டம் நடத்தப்படும்." என்று குறிப்பிட்டுள்ளார்.
-
மொட்டை கடுதாசி கொடுத்த விஜய்.. பொன்ராஜ் மீதான புகார் கடிதத்தை பாருங்க! இதெல்லாம் வேலைக்கே ஆகாது! -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை? -
ரிஸ்க் எடுக்க தயங்கும் எடப்பாடி? திணறும் ரத்தத்தின் ரத்தங்கள்! ஸ்டாலின் பாணியில் செக் வைக்காதது ஏன்? -
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
ஈரோட்டில் வெளுத்த வெயில்.. 100 டிகிரியை தாண்டியது! வேலூருக்கு இரண்டாவது இடம்












Click it and Unblock the Notifications