Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மெஷின் மூலம் மது விற்பனை.. கஜானாவை நிரப்ப இளைஞர்களை குடிக்கத் தூண்டும் திமுக அரசு.. எடப்பாடி ஆவேசம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : தானியங்கி இயந்திரம் மூலம் மது விற்பனை செய்யப்படுவதற்கு அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இளைஞர்களை மது அருந்த ஊக்குவித்து எதிர்காலத்தைச் சீரழிக்கும் வகையில் தானியங்கி இயந்திரத்தில் மது விற்பனை செய்வதா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

டாஸ்மாக் நிறுவனத்தால் சென்னை கோயம்பேடு அருகே உள்ள தனியார் மாலில் தானியங்கி மது விற்பனை இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது. சில்லறை விற்பனைக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட புகார்களை தடுக்கும் வகையில் தானியங்கி இயந்திரம் மூலம் மது விற்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாகவும், 4 மதுபான சில்லறை விற்பனை கடைகளில் மட்டுமே, கடைகளுக்கு உள்ளேயே இந்த இயந்திரம் நிறுவப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Edappadi Palanisamy condemns Tasmac liquor sale in automatic vending machines

எடப்பாடி கண்டனம் : இந்நிலையில், இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த இரண்டு ஆண்டு கால திமுக ஆட்சி, மக்கள் நலனுக்காக செயல்படுவதற்கு பதிலாக, தமிழ்நாட்டு மக்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் விதமாக செயல்பட்டு வருகிறது. இந்த திமுக ஆட்சியில், தமிழ்நாட்டைப் போதைப் பொருட்களின் கேந்திரமாக மாற்றிவிட்டார்கள். இதனால் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை பெருகி உள்ளதை பலமுறை நான் சட்டமன்றத்திலும், ஊடகத்தின் வாயிலாகவும் சுட்டிக்காட்டியுள்ளேன்.

டாஸ்மாக் மதுபானக் கடைகளில் மாணவர்களுக்கும், 21 வயது குறைந்தவர்களுக்கும் மது பானங்களை விற்கக்கூடாது என்ற குரல் ஓங்கி ஒலிக்கின்ற நிலையில், இளைஞர்களை சீரழிக்கும் வகையில் தானியங்கி மூலம் மதுபான விற்பனையைத் துவக்கி இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இந்த திமுக அரசு, திருமண மண்டபத்திலும், விளையாட்டுத் திடல்களிலும் மதுபானம் அருந்தலாம் என்று அரசாணை வெளியிட்டதைத் தொடர்ந்து, சமீபத்தில் சென்னையில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் டாஸ்மாக் கடைக்கு தானியங்கி மது விற்பனை மையம், அதாவது இயந்திரம் மூலம் மது வகைகளை விற்பனை செய்வதற்கான தானியங்கி இயந்திரம் அறிமுகப்படுத்தி உள்ளது.

அடிப்படை யோசனை கூட : தமிழ்நாடு முழுவதும் 500-க்கும் மேற்பட்ட இடங்களில் இதுபோன்ற இயந்திரங்கள் பொருத்தப்பட உள்ளதாகவும் வந்துள்ள செய்திகள், பொதுமக்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள், குறிப்பாக இளைஞர்கள், பெண்கள், சிறுவர்கள், சிறுமியர்கள் என எல்லோரும் வந்து செல்லும் மால்களில், டாஸ்மாக் தானியங்கி இயந்திரம் மக்களுக்கு என்ன மாதிரியான எண்ணத்தை விதைக்கும் என்ற அடிப்படை யோசனைகூட இந்த அரசுக்கு இல்லையா? ஏற்கனவே பள்ளி மாணவ, மாணவியர் சீருடை அணிந்தே மதுபானங்கள் அருந்துவது ஊடகங்களில் வெளிவந்த வண்ணம் உள்ளது.

Edappadi Palanisamy condemns Tasmac liquor sale in automatic vending machines

சாதாரண குளிர்பானங்களை அருந்துவதே உடல் நலத்திற்குக் கேடு என்று உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தி வரும் நிலையில், மதுபானங்களை தாராளமாக பயன்படுத்த இளைஞர்களைத் தூண்டுகிறது இந்த திமுக அரசு. மக்கள் நலனையோ, இளைஞர்களின் எதிர்காலத்தையோ, தமிழகத்தின் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டையோ கருத்தில் கொள்ளாமல் தான்தோன்றித்தனமாக இந்த திமுக அரசின் பொம்மை முதல்வர் மக்களைப் பற்றி கொஞ்சம்கூட அக்கறை கொள்ளாமல் வருவாயை மட்டுமே கருத்தில்கொண்டு இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டிருப்பது வெட்கக்கேடானது.

கைவிட வேண்டும் : நவீனமயமாகி வரும் கல்வித் துறை, சுகாதாரத் துறைகளில் கூட இதுவரை எந்த ஒரு நவீன திட்டத்தையும் இந்த அரசு கொண்டு வந்ததாகத் தெரியவில்லை. கொலைக் களமாக மாறிவரும் தமிழகத்தில், மதுவால் ஏற்படும் மரணங்களைப் பெருக்கி, தன் அரசின் மற்றும் தனிப்பட்ட கஜானாவை நிரப்ப, மக்களைக் குறிவைத்து திட்டம் தீட்டி செயல்படும் இந்த அடாவடி அரசை, அதிமுக வன்மையாகக் கண்டிக்கிறது. இயந்திரம் மூலம் மதுபானம் விற்பனை செய்யும் திட்டத்தை இந்த விடியா அரசு உடனயாகக் கைவிட வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+