அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி.. துணை பொதுச் செயலாளர் கே பி முனுசாமி
சென்னை: அதிமுக பொதுக் குழுவை கூட்ட தடை ஏதும் இல்லை என ஹைகோர்ட் தீர்ப்பளித்த நிலையில் அதிமுக பொதுக் குழு கூட்டம் தொடங்கிய நிலையில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார்.
Recommended Video
அதிமுக பொதுக் குழு கூட்டம் கடந்த ஜூன் 23 ஆம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமியை பொதுச் செயலாளராக தேர்வு செய்ய தனித் தீர்மானம் நிறைவேற்ற நிர்வாகிகள் முடிவு செய்திருந்தனர்.
ஆனால் கடைசி நேரத்தில் ஓபிஎஸ் நீதிமன்றத்தை நாடியதால் பொதுக் குழு கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ் கையெழுத்திட்டிருந்த 23 தீர்மானங்கள் மட்டுமே நிறைவேற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் மகிழ்ச்சியாக வந்த ஓபிஎஸ்ஸுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

வானகரம்
சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தின் வாசலில் தொடங்கி அவருக்கு தொடர்ந்து அவமானங்கள் ஏற்பட்டன. மேலும் இந்த பொதுக் குழுவில் தீர்மானங்கள் நிராகரிப்பு, அவைத் தலைவர் தேர்வு, பொதுக் குழுவுக்கான மறு தேதி அறிவிப்பு என உயர்நீதிமன்ற உத்தரவு மீறப்பட்டதாக ஓபிஎஸ் தரப்பு கூறி அங்கிருந்து வெளியேறினார் ஓபிஎஸ்.

அதிமுக பொதுக் குழு
இந்த நிலையில் அதிமுக பொதுக் குழுவுக்கு தடை கோரி ஓபிஎஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் இரு தரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் அதிமுகவின் உள்கட்சி விவகாரங்களில் தலையிட முடியாது என்பதால் அதிமுக பொதுக் குழு கூட்டம் நடைபெற ஹைகோர்ட் அனுமதித்தது. இது ஓபிஎஸ்ஸுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது.

பொதுக் குழு கூடியது
இந்த நிலையில் அதிமுக பொதுக் குழு காலை 9.15 மணிக்கு கூடியது. இந்த கூட்டத்தில் 16 தீர்மானங்களும் நிறைவேறின. அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவிகள் ரத்து செய்யப்பட்டன. இதையடுத்து இடைக்கால பொதுச் செயலாளர் பதவி உருவாக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தை அடுத்து இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டார்.

இடைக்கால பொதுச் செயலாளர்
பொதுச் செயலாலரால் நியமிக்கப்படும் பொறுப்பாளர்கள் பொதுச் செயலாளரின் பதவிக்காலம் வரை நீடிப்பார்கள். கட்சியின் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா என்ற கட்சியின் விதியை ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பொதுச் செயலாளரை தேர்வு செய்ய 4 மாதங்களில் தேர்தல் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதிமுகவின் துணை பொதுச் செயலாளராக கே பி முனுசாமி தேர்வு செய்யப்பட்டார். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் நீக்கப்பட்டு இடைக்கால பொதுச் செயலாளர், துணை பொதுச் செயலாளர் பதவிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
-
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
"தூக்க முடியல.. டிராலியில் வந்த புகார்கள்!" ஸ்டாலினிடம் அறிக்கையை ஒப்படைத்த திமுக கள ஆய்வுக்குழு! -
நாங்க உங்க கூட இல்ல ப்ரோ.. செல்வப் பெருந்தகையை கழற்றி விடும் காங்? மாணிக்கத்துக்கு வந்த திடீர் மவுசு -
அவர் வரலாறு தெரியுமா.. சந்தர்ப்பவாத அரசியல்வாதி.. ஆதவ் அர்ஜுனாவை வெளுத்த கேபி முனுசாமி -
கரப்பான் பூச்சி கட்சிக்கு தாவும் Gen-Z! ஏமாந்துவிடக்கூடாதாம்.. உஷார் சொல்லும் வீரமணி! -
ரீல்ஸ் போடுங்கப்பா..ஆட்சியை பிடிக்கலாம்! அதிமுக கூட்டத்தில் அள்ளி விட்ட எடப்பாடி! ஆடிப்போன ஐடி விங்! -
கைவிட்ட பாஜக.. மம்தாவையும் பகைத்து கொண்ட திரிணாமுல் தலைவர்கள்.. இடியாப்ப சிக்கல்! -
இழுத்து பிடித்த எடப்பாடி பழனிசாமி.. விட்டு விலகும் நிர்வாகிகள்! மதுராந்தகத்தில் சம்பவம் செய்யும் தவெக! -
புதுப்பொலிவு பெறும் புதுச்சேரி.. அள்ளி கொடுத்த மத்திய அரசு! எல்.முருகன் சொன்ன குட் நியூஸ்! -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
கருகுது இரட்டை இலை.. திமுகவுக்கு தாவும் சி.விஜயபாஸ்கர்? பெரிய பொறுப்புடன் வரவேற்கும் மு.க.ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications