அவதூறாக பேசிய உதயநிதி இனி பேசவே கூடாது.. ரூ 1.10 கோடி கேட்டு எடப்பாடி பழனிசாமி ஹைகோர்ட்டில் வழக்கு
சென்னை: தன்னை அவதூறாக பேசிய உதயநிதி ஸ்டாலின் ரூ 1.10 கோடி நஷ்டஈடாக தர வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி வழக்குத் தொடர்ந்தார்.
செப்டம்பர் 3 ஆம் தேதி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட சனாதன ஒழிப்பு மாநாட்டில் திமுக இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், இந்த மாநாட்டின் தலைப்பில் சனாதன எதிர்ப்பு மாநாடு என போடாமல் ஒழிப்பு மாநாடு என போட்டுள்ளீர்கள்.

எனக்கு இந்த தலைப்பே மிகவும் பிடித்துவிட்டது. சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு, கொரோனா, மலேரியா ஆகியவற்றை நாம் எதிர்க்கக் கூடாது, ஒழித்துக் கட்ட வேண்டும் என உதயநிதி பேசியிருந்தார்.
இதற்கு பாஜகவினர், இந்து அமைப்பினர் கடும் கண்டனத்தை தெரிவித்தனர். மேலும் உதயநிதியின் தலையை சீவினால் ரூ 10 கோடி தருவதாக அயோத்தி சாமியார் தெரிவித்திருந்தார். மக்கள் பிரச்சினையை திசைத் திருப்பவே உதயநிதி சனாதனம் குறித்து பேசியதாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்தார்.
உதயநிதியின் தலை சீவ சொன்ன சாமியாரின் உருவபொம்மை எரிப்பு தமிழகத்தில் நடந்தது. அத்துடன் அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி உதயநிதி தனது அறிக்கையில் 'சனாதனம் என்றால் என்ன' என்பதை வீட்டினுள் பத்திரமாக அடுக்கிவைத்திருக்கும் புத்தகங்களில் இருந்து தேடிக் கொண்டிருக்கும் எடப்பாடி அவர்களே, கொடநாடு கொலை-கொள்ளை வழக்குகளிலும், ஊழல் வழக்குகளில் இருந்தும் தப்பிக்க, நீங்கள் ஆட்டுத் தாடிக்குப்பின் நீண்டநாள் ஒளிந்திருக்க முடியாது.
ஆடு ஒருநாள் காணாமல் போகும்போது, நீங்கள் என்ன ஆகப்போகிறீர்கள் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள் என தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் உதயநிதியின் இந்த கருத்துக்கு எதிராக நஷ்ட ஈடு கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மனுத்தாக்கல் செய்துள்ளார். தன்னை பற்றி அவதூறாக பேச உதயநிதி ஸ்டாலினுக்கு தடை விதிக்க வேண்டும். உதயநிதி தன்னை பற்றி பேசியதற்கு நஷ்டஈடாக ரூ 1.10 கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்துள்ள மனுவில் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு வழக்குப் பட்டியலிடப்படும் என தெரிகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications