"எதிர்பார்க்கவே இல்லை".. பூரித்து போன எடப்பாடி.. ஏக குஷியில் நிர்வாகிகளுக்கு பாராட்டு.. என்னாச்சு!?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு திமுக அரசை கண்டித்து கடந்த வெள்ளிக்கிழமை அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை என்று குற்றஞ்சாட்டி மாவட்ட தலைநகரங்களில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதிமுக நிர்வாகிகள் பெரிய அளவில் திரண்டு இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் திமுக அரசை கண்டித்து அதிமுக நடத்திய கண்டன ஆர்பாட்டம் வெற்றியடைந்ததில் எடப்பாடி குஷியாக இருக்கிறாராம். கட்சியின் மா.செ.க்களிடம் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார் எடப்பாடி என்று அதிமுக தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அப்போது தனது அறிவுறுத்தல்களை கடைப்பிடித்ததற்கு நன்றியும் தெரிவித்தாராம். அதாவது, திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் கண்டன ஆர்பாட்டத்தை நடத்தியது அதிமுக. இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுகவினர் பெரிய அளவில் கலந்து கொண்டனர். இதற்கு நன்றி என்று எடப்பாடி கூறியுள்ளார்.

 அதிமுக கூட்டம் அதிகம்

அதிமுக கூட்டம் அதிகம்

அதிமுக நிர்வாகிகளும் தமிழக உளவுத்துறை அதிகாரிகளும் எதிர்பார்க்காத அளவுக்கு கூட்டம் திரண்டிருந்தது. ஓபிஎஸ்-இபிஎஸ் தலைமைக்கு எதிராக அதிமுகவில் அதிருப்திகளும் ஆதங்கங்களும் அதிகம். ஆளாளுக்கு விருப்பு வெறுப்புகளுடனேயும், கோஷ்டி மனப்பான்மையுடனேயுமே அரசியல் செய்து வருவதால் கட்சிக்குள் ஒருங்கிணைப்பு இல்லை என்பது கண் கூடாகவே தெரிகிறது.

எப்படி கூட்டம் சேர்ந்தது?

எப்படி கூட்டம் சேர்ந்தது?

அப்படிப்பட்ட சூழலில், ஆர்பாட்டத்தில் இந்தளவுக்கு கூட்டம் எப்படி சேர்ந்தது ? என்பது தான் ஆளும் கட்சியின் சந்தேகம். பணம் கொடுத்து கூட்டி வந்த கூட்டம் என ஒரு சப்பை காரணத்தை ஆளும் தலைமைக்கு உளவுத்துறை சொன்னாலும், எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் அதிமுக, ஒரு ஆர்ப்பாட்டத்திற்காக நிறைய செலவு செய்ய விரும்ப மாட்டார்கள் என ஆளூம் கட்சி நம்புகிறது. அப்படியிருந்தும், கூட்டத்தில் அதிமுகவினர் திரளாக வந்து ஆர்ப்பாட்டத்தை வெற்றியடைய வைத்தது எப்படி ? என்ற கேள்விதான் அரசியலில் தொக்கி நிற்கிறது.

அதிமுக தரப்பு

அதிமுக தரப்பு

இது குறித்து அதிமுக தரப்பில் விசாரித்தபோது, '' உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வரக்கூடிய சூழலில், ஆர்பாட்டத்திற்கு செலவு செய்ய அதிமுக மா.செ.க்கள் விரும்பவில்லை என்பது உண்மைதான். ஏற்கனவே நிறைய குழப்பங்கள் கட்சிக்குள் இருந்து வருகிறது. இந்த நிலையில் ஆர்ப்பாட்டமும் கலகலத்துப் போய்விட்டால் நம்மளை திமுக ஒரு பொறுட்டாகவே மதிக்காது என யோசித்தார் எடப்பாடி.

ரெய்டு குறித்து பேச்சு

ரெய்டு குறித்து பேச்சு

அதனால் ஒவ்வொரு மா.செ.க்களிடமும் ஆர்பாட்டம் அறிவித்த உடனேயே பேசிய எடப்பாடி, விஜிலென்ஸை தூண்டிவிட்டு நம்மை ஒழிக்கப் பார்க்கிறார் ஸ்டாலின். இன்றைக்கு நம் அமைச்சர்கள் சிலரை குறி வைத்து ரெய்டு நடத்தியுள்ள விஜிலென்ஸ், நாளைக்கு உங்களிடமும் வரலாம். அதுக்கு பிறகு இரண்டாம் கட்ட தலைவர்களும் குறி வைக்கப்படலாம். ரெய்டில் எதுவும் சிக்காது என நமக்கு தெரியும். ஆனால், மக்களிடம் அதிமுக இமேஜை டேமேஜாக்கவும், அதிமுக நிர்வாகிகளிடம் மன உளைச்சல்களை ஏற்படுத்தவுமே இந்த ரெய்டு நடத்தப்படுகிறது.

 நோக்கம் பின்னணி

நோக்கம் பின்னணி

இது தவிர, ரெய்டின் ' நோக்கம் ; பின்னணி ' என்னவென்பதும் உங்களுக்கு தெரிந்த விசயம் தான். அதனால், திமுகவுக்கும் ஸ்டாலினுக்கும் ஒரு அதிர்வை தர வேண்டுமென்றால், திமுகவுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை வெற்றியடைய செய்ய வேண்டும். ஆர்பாட்டத்தின் பிரமாண்டம் தான் நம்முடைய ஒற்றுமையை திமுகவுக்கு உணர்த்தும். அதிமுக இன்னமும் கட்டுக்கோப்பாக, உறுதியுடன் தொண்டர்கள் பலத்துடன் இருக்கிறது என்கிற மெசேஜை ஸ்டாலினுக்கு காட்ட வேண்டும்.

அலட்சியம் வேண்டாம்

அலட்சியம் வேண்டாம்

அதனால், அலட்சியமாக இல்லாமல் ஆர்ப்பாட்டத்தை பிரமாண்டப்படுத்த உண்மையாக சிந்தியுங்கள். ஏற்பாடு செய்யுங்கள். வெற்றியாக்குங்கள் என்று சுமார் 35 நிமிடம் ஒவ்வொருவரிடமும் பேசியிருக்கிறார் எடப்பாடி. அவரின் இந்த பேச்சு முன்னாள் அமைச்சர்களிடமும் மா.செ.க்களிடமும் உத்வேகத்தை தந்திருக்கிறது. அதனாலேயே இந்த ஆர்ப்பாட்டம் வெற்றியடைந்துள்ளது '' என்று பின்னணி விசயங்களை சுட்டிக்காட்டினார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+