தலைமை யார்?.. ஈபிஎஸ்- ஓபிஎஸ் வீடுகளுக்கு சர் புரென பறக்கும் கார்கள்.. அனல் பறக்கும் ஆலோசனை
சென்னை: சென்னை கிரீன்வேஸ் சாலையில் எடப்பாடி பழனிச்சாமி வீட்டிலும் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் தங்கமணி, வேலுமணி, சி விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
அதிமுகவில் எப்போது எடப்பாடி பழனிச்சாமியின் கை ஓங்கி ஓபிஎஸ் ஓரங்கட்டப்பட்டாரோ அன்று முதல் ஒற்றைத் தலைமை எனும் கோரிக்கை எழுந்துள்ளது. இது நேற்று முதல் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

எடப்பாடி பழனிச்சாமி
அதிமுகவை முற்றிலும் கைப்பற்ற எடப்பாடி பழனிச்சாமியும் ஓபிஎஸ்ஸும் முயற்சித்து வருகிறார்கள். இதில் பெரும்பாலான நிர்வாகிகள் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக இருப்பதாக சொல்லப்படுகிறது. ஓபிஎஸ்ஸை கடுப்பேற்ற எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் தேனியில் ஒட்டிய போஸ்டரிலிருந்து பிரச்சினை சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

ஒருங்கிணைப்பாளர்
இதற்கு பதிலடியாக தான் ஒருங்கிணைப்பாளராக இருந்து அதிமுகவில் என்னென்ன செய்துள்ளேன் என்பதை விவரித்து ஓபிஎஸ் தகவல்களை வெளியிட்டிருந்தார். இதிலிருந்து ஒற்றைத் தலைமை எனும் பொறுப்பை ஏற்க தன்னை விட தகுதியானவர் யாரும் இல்லை என்பதை மறைமுகமாக குறிப்பிட்டிருந்தார்.

மாவட்டச் செயலாளர்
இந்த நிலையில்தான் நேற்று நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஒற்றைத் தலைமை குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக ஜெயக்குமார் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ஒற்றைத் தலைமை பேச்சால் கோபமடைந்த ஓபிஎஸ் தனது வீட்டில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

இரவோடு இரவாக போஸ்டர்
இந்த நிலையில் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக இரவோடு இரவாக சென்னை, தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஒற்றைத் தலைமையே வா என போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஓபிஎஸ் வீட்டில் 2ஆவது நாளாக ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதில் ஆர் பி உதயகுமார், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். அதே போல் எடப்பாடி பழனிச்சாமியின் வீட்டிலும் ஆலோசனை நடைபெறுகிறது. இந்த ஆலோசனையில் சி விஜயபாஸ்கர், வேலுமணி, தங்கமணி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications