சீறப் போகும் தொண்டர்கள்.. சில்லு சில்லாக நொறுங்குதாமே.. எடப்பாடிக்கு இப்படி ஒரு பீதியாமே? போச்சு
சென்னை: 2024 லோக்சபா தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்து உள்ளது. தொடர்ந்து 10வது முறையாக அதிமுக தேர்தலில் தோல்வி அடைந்து உள்ளது. இதனால் கட்சியில் எங்கே தொண்டர்கள் தலைமைக்கு எதிராக எழுச்சி பெறுவார்களா என்ற அச்சம் எடப்பாடி பழனிசாமிக்கு கொஞ்சம் ஏற்பட்டு உள்ளதாம்.
2024 லோக்சபா தேர்தலில் அதிமுக ஒரு தொகுதியில் கூட வெல்லவில்லை. திமுக கூட்டணி 40 இடங்களிலும் வென்று அசத்தி உள்ளது.

வரிசையாக 10 தோல்வி: அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி வந்த காலத்தில் இருந்து வரிசையாக அக்கட்சி தோல்விகளை தழுவி வருகிறது. வரிசையாக 9 தேர்தல்களில் அதிமுக தோல்வி அடைந்தது. இன்றோடு 10வது தேர்தலில் தோல்வி அடைந்து உள்ளது.
அதன்படி 2017 ஆம் ஆண்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல், அதே ஆண்டு 22 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தல், 2020 ஊரக உள்ளாட்சி தேர்தல், 2021 சட்டசபை தேர்தல், 2021 ஆம் ஆண்டு நடந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல், 2022 ஆம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், 2023 ஆம் ஆண்டு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், 2020ல் நடந்த கன்னியாகுமரி லோக்சபா இடைத்தேர்தல் என மொத்தம் 9 தோல்விகளை எடப்பாடி தலைமையிலான அதிமுக சந்தித்தது. இன்றோடு 10வது தேர்தலில் தோல்வி அடைந்து உள்ளது.
டெபாசிட் இழப்பு: அதிலும் இந்த முறை அதிமுக அதிக இடங்களில் டெபாசிட் இழந்து உள்ளது. தென் சென்னை, கன்னியாகுமரி, புதுச்சேரி, தேனி, தூத்துக்குடி, நெல்லை மற்றும் வேலூர் ஆகிய 7 தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ளது அதிமுக.
9 தொகுதிகளில் மூன்றாமிடத்திற்கும் சென்றுள்ளது. மேலும் 3 தொகுதிகளில் நான்காவது இடத்திற்கும் தள்ளப்பட்டது.
அதிமுக தோல்விக்கு என்ன காரணம்: 2024 லோக்சபா தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்து உள்ளது. தொடர்ந்து 10வது முறையாக அதிமுக தேர்தலில் தோல்வி அடைந்து உள்ளது. இதனால் கட்சியில் எங்கே தொண்டர்கள் தலைமைக்கு எதிராக எழுச்சி பெறுவார்களா என்ற அச்சம் எடப்பாடி பழனிசாமிக்கு கொஞ்சம் ஏற்பட்டு உள்ளதாம்.
இதன்படி தனக்கு நெருக்கமான சிலரிடம் சில மாவட்ட செயலாளர்கள், ஒன்றரை கோடி தொண்டர்கள் நமக்கு எதிராக எழுச்சி அடையும் வாய்ப்புகள் உள்ளன. தலைமையை எதிர்க்கும் வாய்ப்புகள் உள்ளன என்று நெருக்கமான சிலரிடம் அச்சத்துடன் பேசிக்கொண்டு இருக்கிறாராம்.
அதிமுகவின் தோல்விக்கு பின் வரும் காரணங்கள் உள்ளன. அதிமுக கட்சி பல விதமாக பிரிந்தது. ஓபிஎஸ் தரப்பு, டிடிவி தரப்பு தென் மண்டலங்களில் , டெல்டாவில் வாக்குகளை பிரிக்கின்றனர். இவர்களை இணைக்க வேண்டும். அதிமுகவில் வேட்பாளர் தேர்வு சொதப்பல். பல தொகுதிகளில் உள்ளூர் ஆட்களுக்கே தெரியாதவர்கள் வேட்பாளர்கள் ஆனார்கள். சில இடங்களில் வெளியூர் ஆட்கள் வேட்பாளர்கள் ஆனார்கள். கல்லை கூட ஜெயிக்க வைக்க எடப்பாடி ஒன்றும் ஜெயலலிதா இல்லையே.
பொதுவாக நாடாளுமன்ற தேர்தல் மத்தியில் ஆட்சியை தேர்வு செய்வது. அப்படி இருக்க பிரதமர் வேட்பாளர் இல்லாமல் அதிமுக என்ன சொல்லி வாக்கு கேட்கும். அதிமுகவில் நிர்வாகிகளே பெரிதாக வேலை செய்யவில்லை. பெரிதாக தேர்தலுக்காக களமிறங்கி பணிகளை செய்யவில்லை.
பெரிய கூட்டணியை அமைக்காமல் அதிமுக தோல்வி அடைந்துவிட்டது. எடப்பாடியின் பிரச்சாரம் பெரிதாக எடுபடவில்லை. அவரின் பிரச்சாரம் பெரிதாக கொங்கில் கூட மாற்றங்களை ஏற்படுத்தவில்லை.
கட்சி நிர்வாகிகள் கிரவுண்டு வேலை செய்யவில்லை என்று எடப்பாடியே கட்சி மீட்டிங்கில் சொல்லி இருந்தார். அது களத்திலும் நடந்தது. கட்சியில் தேர்தல் செலவிற்கான பணம் கூட சரியாக செலவாகவில்லை. நிர்வாகிகள் மூலம் பணம் பெரிய அளவில் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது.
அதிமுகவில் தலைமைக்கு பெரிய பவர் இல்லை. நிறைய கிளை பவர் சென்டர்கள் இருப்பதால் தலைமையின் உத்தரவிற்கு பயம் இல்லாத நிலை ஏற்பட்டு உள்ளது. சில இடங்களில் முதல்முறையாக அதிமுக பூத் கமிட்டியை கூட இழந்துள்ளது. இதுவும் தோல்விக்கு காரணம்.
-
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
கொங்கு மண்டலத்தில் 5, சென்னை 1, மதுரை 1, சேலம் 0.. பாஜகவை கன்ட்ரோலில் எடுத்த எடப்பாடி பழனிசாமி! -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
களம் இப்போதான் சூடுபிடிக்குது..முதல் ஆளாக பிரச்சாரத்துக்கு கிளம்பிய எடப்பாடி! ரேசில் முந்தும் அதிமுக -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
கூட்டுறவு கடன் தள்ளுபடி! எடப்பாடி எடுத்த ஸ்மார்ட் முடிவு! வாக்குறுதிக்கு பின்.. இவ்வளவு பிளானிங்கா! -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம்












Click it and Unblock the Notifications