Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜெ. ஸ்டைல்.. எல்லாம் கண்ட்ரோலில் வந்துவிட்டது.. பாஜகவை எதிர்க்க துணிந்த எடப்பாடி.. இப்படி சொல்லுறாரே

பாஜகவின் கட்டுப்பாட்டில் இருந்து அதிமுகவை வெளியே கொண்டு வர வேண்டும் என்று எடப்பாடி நினைக்கிறார், என்று மூத்த பத்திரிகையாளர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஓ பன்னீர்செல்வம் வழியாக அதிமுகவை அபகரிக்க, அதிமுக உள்ளே நுழைய பாஜக நினைக்கிறது, ஆனால், ஓ பன்னீர்செல்வத்தை அனுமதிக்காமல் அதிமுகவை முழு கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும் என்று எடப்பாடி நினைக்கிறார், என்று மூத்த பத்திரிகையாளர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தல் சூடு பிடித்து உள்ளது. இந்த தேர்தலில் அதிமுக, திமுக - காங்கிரஸ், நாம் தமிழர், தேமுதிக ஆகிய கட்சிகள் களத்தில் இறங்கி உள்ளன.

பாஜக கட்சி அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு கொடுப்பதாக தெரிவித்து உள்ளது. அதேபோல் ஓ பன்னீர்செல்வமும் இரட்டை இலைக்கு வாக்கு கேட்க போவதாக கூறியுள்ளார். இந்த நிலையில் பாஜகவை எதிர்க்க எடப்பாடி பழனிசாமி துணிந்துவிட்டதாக மூத்த பத்திரிகையாளர் பாண்டியன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

 பேட்டி

பேட்டி

அவர் தனது பேட்டியில், ஓ பன்னீர்செல்வம் வழியாக அதிமுகவை அபகரிக்க, அதிமுக உள்ளே நுழைய பாஜக நினைக்கிறது. ஓ பன்னீர்செல்வம் இல்லையென்றால் சசிகலா மூலம், தினகரன் மூலம் அதிமுகவை அபகரிக்க பாஜக நினைக்கிறது. ஆனால் இதற்கு எடப்பாடி அனுமதி கொடுப்பது இல்லை. ஓ பன்னீர்செல்வத்தை அனுமதிக்காமல் அதிமுகவை முழு கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும் என்று எடப்பாடி நினைக்கிறார். ஏனென்றால் எதிர்காலத்தில் பாஜகவை நேரடியாக எடப்பாடி எதிர்ப்பார். ஜெயலலிதா பாஜகவை எதிர்த்தது போல. லோக்சபா தேர்தலில் ஒன்றாக இருந்தால் கூட சட்டசபை தேர்தல்களில் பாஜகவை ஜெயலலிதா எதிர்த்து இருக்கிறார். அந்த ஜெயலலிதா பாதையில் எடப்பாடி உறுதியாக இருக்கிறார்.

எடப்பாடி

எடப்பாடி

எடப்பாடி நினைத்தால் இதை செய்ய முடியும். அதிமுக தொண்டர்களை எடப்பாடி கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டார். தனக்கு மக்கள் செல்வாக்கு இருந்தால் போதும் பாஜகவை எளிதாக எதிர்கொள்ள முடியும் என்று எடப்பாடி நினைக்கிறார். அதனால்தான் ஈரோடு கிழக்கில் மோடி படத்தை பயன்படுத்தவில்லை. ஈரோடு கிழக்கில் பாஜக பெயரை பயன்படுத்தவில்லை. ஈரோட்டிலேயே பாஜக எடப்பாடியிடம் பணிந்துவிட்டது. ஒரு பானை சோற்றிற்கு ஒரு சோறு பதம். மோடியை எதிர்க்க எடப்பாடி தயாராகிவிட்டார் என்பது இதன் மூலம் உறுதியாகிவிட்டது. அவ்வளவுதான் இதில் வாதம் வைக்க எதுவும் இல்லை.

எதிர்க்க வேண்டாம்

எதிர்க்க வேண்டாம்

இதனால்தான் எடப்பாடியை எதிர்க்க வேண்டாம் என்று ஓ பன்னீர்செல்வம், டிடிவி தினகரனை வாபஸ் வாங்க வைத்துள்ளனர். நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடியின் ஆதரவு வேண்டும் என்பதற்காக பாஜக இப்படி இறங்கி போகிறது. பத்திரப்படுத்த வேண்டிய குதிரை எடப்பாடி என்பதால், அவரிடம் பாஜக நெருங்கி செல்கிறது. எடப்பாடிக்கு இப்போதைக்கு கட்சிதான் முக்கியம். கட்சியை காப்பாற்ற வேண்டும் என்று நினைக்கிறார். ஓ பன்னீர்செல்வம் உள்ளே வந்தால் பாஜகதான் முக்கியம் என்று நினைப்பார். அதிமுக உள்ளே பாஜகவிற்காக ஓ பன்னீர்செல்வம் வேலை பார்ப்பார். பாஜகவின் ஆளாக ஓ பன்னீர்செல்வம் இருப்பார். ஆனால் அதை எடப்பாடி விரும்பமாட்டார்.

 ஓ பன்னீர்செல்வம்

ஓ பன்னீர்செல்வம்

ஓ பன்னீர்செல்வத்திற்கு டெல்லி ஆதரவு இருக்கிறது. ஆனாலும் அவரால் எம்எல்ஏக்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவை பெற முடியவில்லை. அன்று கூவத்தூரில் ஓ பன்னீர்செல்வத்திற்கு எதிராக சசிகலா கூவத்தூருக்கு எம்எல்ஏக்களை கொண்டு சென்றார். அப்போது கூவத்தூரில் சசிகலா கேம்பில் இருந்த ஆட்களை மொத்தமாக எடப்பாடி தன் பக்கம் தூக்கிவிட்டார். அரசியலில் இதை சிலர் துரோகம் என்பார்கள். சிலர் சாணக்கிய வியூகம் என்பவர்கள். சிலர் சக்கர வியூகம் என்பார்கள். அந்த வியூகத்தைதான் எடப்பாடி மேற்கொண்டு இருக்கிறார்.

பாஜக

பாஜக

பாஜகவின் கட்டுப்பாட்டில் இருந்து அதிமுகவை வெளியே கொண்டு வர வேண்டும் என்று எடப்பாடி நினைக்கிறார். தனக்கு தொண்டர்கள் ஆதரவு கிடைக்கும் வரை எடப்பாடி அமைதியாக இருந்தார். அந்த தொண்டர்கள் சப்போர்ட் தனக்கு கிடைத்துவிட்டது. ஜெயலலிதா சப்போர்ட் இல்லாமலே 66 எம்எல்ஏக்களை பெற்று இருக்கிறார். வெறும் 3 சதவிகித வாக்குகள் வித்தியாசத்தில்தான் எடப்பாடி முதல்வர் பதவியை இழந்தார். அந்த வாக்குகள் இஸ்லாமியர் வாக்குகள். அவர்கள் வாக்குகளை பெற்று இருந்தால் எடப்பாடி முதல்வர் ஆகி இருக்க முடியும். தனக்கு இப்போது தொண்டர்கள் சப்போர்ட் இருப்பது எடப்பாடிக்கு தெரியும். இப்போது தொண்டர்கள் சப்போர்ட் இருப்பதால் எடப்பாடி பாஜகவை எதிர்க்க துணிந்துவிட்டார், என்று மூத்த பத்திரிகையாளர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+