கொங்கு மண்டலத்தில் ஸ்வீட் எடு கொண்டாடு ஹேப்பி.. செங்கோட்டையனை எடப்பாடி பழனிசாமி உதறியது இதுக்குதானா?
சென்னை: துரோகத்திற்காக நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்றால், அதனை பெற தகுதியான ஒரே ஆள் எடப்பாடி பழனிசாமி மட்டும்தான் என்று மூத்த தலைவர் செங்கோட்டையன் கூறியிருந்தார்.. ஆனால், எடப்பாடி பழனிசாமி என்ன துரோகம் செய்தார்? செங்கோட்டையன் நீக்கத்தால் கொங்கு மண்டலத்தில் ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை என்று பத்திரிகையாளர் பாண்டியன் கருத்து கூறியிருக்கிறார்.
Reflect Voice என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன், "அப்படியென்ன எடப்பாடி பழனிசாமி துரோகம் செய்துவிட்டார்? அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர், பொதுக்குழு, செயற்குழு என அனைத்தையுமே எடப்பாடி பழனிசாமி ஏற்றுக் கொண்டுவிட்டாரே?

சசிகலாவுக்கு என்ன துரோகம் செய்துவிட்டார்? நாட்டை கொள்ளையடிப்பதற்கு தன்னுடைய ரத்த வாரிசான தினகரனை உட்கார வைக்க நினைக்கலாமா? ஏற்கனவே திமுக அரசால் 5 லட்சம் கோடி, அதிமுக அரசால் 5 லட்சம் கோடி என்று தமிழ்நாட்டில் 10 லட்சம் கோடி கடன் உள்ளது..
துரோகம் செய்தது யார்?
இதில் தினகரனை முதலமைச்சராக்கியிருந்தால், 15 லட்சம் கோடி வந்திருக்கும். அந்த 5 லட்சம் கோடி தினகரனிடம் சென்றிருக்கும்.. இதுதான் துரோகம்.
ஹெல்த் விஜயபாஸ்கரை எடுத்துக் கொண்டால், புதுக்கோட்டை மாவட்டத்தை பார்த்துக் கொள்கிறார், பிறகு பக்கத்து மாவட்டத்தையும் பார்த்து கொள்கிறார்.. திருச்சி வரை கட்சியை பார்த்து கொள்கிறார். அதற்கான செலவையும் செய்கிறார்..
தங்கமணி, வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் என எல்லாருமே செலவு செய்கிறார்கள்.. ஆனால், செங்கோட்டையன் செலவு செய்யவில்லை..
செங்கோட்டையன் செலவு செய்ய மறுக்கிறார் என்ற செய்தி எடப்பாடிக்கு செல்லவும்தான், அவர் கோபப்பட்டார்.. அதனால்தான், கடந்த எம்பி தேர்தலில் பாஜகவிலிருந்து வந்த ஆற்றல் அசோக் என்பவரை வேட்பாளராக நிறுத்தினார். ஆற்றல் அசோக் தொகுதியில 20 கோடி செலவு செய்யவும் தயார் என்றார்..
செலவு செய்யாத செங்கோட்டையன்?
இது தெரிந்ததுமே செங்கோட்டையன் எடப்பாடியிடம் கோபப்பட்டார்.. எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்திலிருந்தே ஈரோட்டை நான் கட்டியாளும்போது, புதிதாக ஒருவரை நிறுத்தினால், அவர் எப்படி என்னை மதிப்பார்? என்றெல்லாம் கேள்வி எழுப்பியிருந்தார்.
ஆனால் திமுகவுக்கு தேர்தல் களத்தில் டஃப் தர வேண்டுமானால், அதிமுகவை காப்பாற்ற வேண்டுமானால், தொகுதியில் செலவு செய்பவர்களுக்கே சீட் தர வேண்டும் என்ற முடிவுக்கு அப்போது வந்தார் எடப்பாடி பழனிசாமி..
எனவே, கட்சியை வைத்தே சம்பாதித்துகொண்டு, கட்சிக்கே செலவு செய்யாமல் இருந்த செங்கோட்டையனை புறக்கணிக்க துவங்கினார் எடப்பாடி பழனிசாமி.. இதுதான் துரோகம்.. இந்த துரோகத்தை வேலுமணியிடம் போய் சொன்னார் செங்கோட்டையன்.
ஓவர்டேக் செய்த எடப்பாடி பழனிசாமி
நாம் செலவு செய்யாவிட்டால் எடப்பாடி பழனிசாமியும் செலவு செய்வதில்லை, நமக்கு பதிலாக வேறு ஆட்களை உள்ளே இறக்குகிறார்.. அனைத்து விஷயங்களிலும் நம்மை ஓவர்டேக் செய்து போய் கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி என்றெல்லாம் சொன்னார்.. அப்போது துவங்கியதுதான் 6 பேர் கொண்ட கூட்டணி.
நத்தம் விஸ்வநாதன், பாலக்கோடு அன்பழகன், செங்கோட்டையன் இப்படி இந்த 6 பேரும் சேர்ந்து எடப்பாடியை தங்கள் வழிக்கு கொண்டு வர நினைத்தனர். ஆனால், சசிகலா போன்றோருக்கே கிலோ கணக்கில் அல்வாவை கிண்டி தந்தவர் எடப்பாடி பழனிசாமி.. யாருக்கும் அஞ்சாதவர்.
கொங்கு மண்டலம் - பின்னடைவு
செங்கோட்டையன் நீக்கத்தால் கொங்கு மண்டலத்தில் பின்னடைவு ஏற்படுமா? என்று கேட்கிறார்கள்.. அப்படி எதுவுமே இல்லை.. ஸ்வீட் எடு கொண்டாடு என்று எல்லாரும் சொல்லி கொண்டிருக்கிறார்கள்.
செங்கோட்டையனை நீக்கியிருந்தால் இந்நேரம் பூகம்பமே கட்சிக்குள் வெடித்திருக்குமே? அதிமுக கொடி கம்பம் சாய்க்கப்பட்டதாக செய்திகள் வந்திருக்குமே? அப்படி ஏதாவது வந்ததா?
செங்கோட்டையன் செய்ததை அவரது குடும்பத்தினரே ஏற்க மாட்டார்கள்.. அவரது மனைவி, மகனுமே எடப்பாடி பழனிசாமிக்காகத்தான் பேசிட்டு இருப்பாங்க.. ஓபிஎஸ், சசிகலா, தினகரன் இவர்கள் எல்லாம் எப்படி தனி மரமாக இன்று உள்ளார்களோ, செங்கோட்டையனும் தனி மரமாகிவிட்டார்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக












Click it and Unblock the Notifications