அதிமுக ஒற்றை தலைமைக்கான தலைவர் இபிஎஸ் தான்! இன்றைய எழுச்சி திமுகவுக்கான சாவு மணி! எஸ்பி வேலுமணி பரபர
சென்னை:அனைத்து தொண்டர்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அதிமுகவின் ஒற்றை தலைமைக்கான தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தான். இன்றைய எழுச்சி தான் திமுக ஆட்சிக்கான சாவு மணியாக இருக்கும். மீண்டும் பழனிச்சாமி தமிழக முதல்வராக வருவார்'' என அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி பேசினார்.
Recommended Video
அதிமுகவின் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்தது. இந்நிலையில் தான் அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள மண்டபத்தில் இன்று நடந்தது.
கூச்சல் குழப்பம், தீர்மானங்கள் நிராகரிப்பு, ஒற்றை தலைமை கோஷம், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் வெளிநடப்பு உள்ளிட்ட பல்வேறு களேபரங்களுடன் பொதுக்குழு கூட்டம் முடிவடைந்தது.

எஸ்பி வேலுமணி பேச்சு
இந்த கூட்டத்தில் வரவேற்புரை, இரங்கல் தீர்மானம் மட்டுமே வாசிக்கப்பட்டது. தீர்மானங்கள் முன்மொழிவுக்கு மத்தியிலேயே அனைத்து தீர்மானங்கள் நிராகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஜூலை 11ம் தேதிக்கு பொதுக்குழு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதில் ஒற்றை தலைமை பற்றிய தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது. இந்நியைில் இன்று நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளருமான எஸ்பி வேலுமணி பேசியதாவது:

ஒருமித்த பேச்சு
தமிழக மக்களின் இதயங்களில் நிரந்தரமாய் குடிகொண்ட தெய்வமாய் உள்ள எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுகவை ஒன்றரை கோடி தொண்டர்களின் கழகமாக ஜெயலலிதா மாற்றினார். தற்போது நடக்கும் இந்த வரலாற்று சிறப்புமிக்க பொதுக்குழு மக்கள், தொண்டர்களின் எழுச்சியாக மாறியுள்ளது. தமிழகம் முழுவதும் மாபெரும் எழுச்சி ஏற்பட்டுள்ளது. கடந்த 9 நாட்களாக உலகம் முழுவதும் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் ஆட்சியை கொடுக்கும் நபராக எடப்பாடி பழனிச்சாமி இருப்பார் என ஒருமித்தமாக பேசி வருகின்றனர்.

மக்கள் அங்கீகாரம்
மேலும் இன்று வரும் வழி எல்லாம் எடப்பாடி பழனிச்சாமிக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. 5 மணிநேரம் கழித்து தான் எடப்பாடி பழனிச்சாமி இங்கு வந்தார். அவரை அனைவரும் வாழ்த்தினார்கள். எடப்பாடி பழனிச்சாமிக்கு மக்கள் அங்கீகாரம் கொடுத்துவிட்டனர். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கட்சியை கட்டிக்காத்து எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சியை வழங்கியவர் தான் எடப்பாடி பழனிச்சாமி. தற்போது தமிழக மக்களின் விடிவெள்ளியாக எடப்பாடி பழனிச்சாமி உள்ளார். வாழும் காலத்தில் வரலாறு படைக்கும் நபர் தான் எடப்பாடி பழனிச்சாமி.

ஒற்றை தலைமைக்கான தலைவர்
இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள நிர்வாகிகள், அனைவருக்கும் எடப்பாடி பழனிச்சாமி சார்பில் நன்றி தெரிவித்து கொள்கிறேன். இன்றைய எழுச்சி தான் திமுக ஆட்சிக்கான சாவு மணியாக இருக்கும். மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக ஆவார். அனைத்து தொண்டர்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒற்றை தலைமைக்கு தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தான். அவர் மீண்டும் தமிழகத்தின் முதல்வராக வருவார்'' என்றார்.












Click it and Unblock the Notifications