விடிய விடிய விடாமல் பேசிய எடப்பாடி! காலையில் ஷாக் தந்த "பெருந்தகையார்"! ஸ்டாலின் சம்பவம் பண்ணிட்டாரே
சென்னை: காங்கிரஸ் கட்சியை அதிமுக கூட்டணிக்கு இழுக்க எடப்பாடி பழனிசாமி விடிய விடிய பேசியும் கூட காங்கிரஸ் இறங்கி வரவில்லை என்றே அக்கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
லோக்சபா கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கியதில் இருந்தே காங்கிரஸ் மற்றும் விசிகவை எப்படியாவது அதிமுக கூட்டணிக்குள் இழுக்க எடப்பாடி முயன்று வந்தார். அதிலும் அதிமுக கூட்டணிக்கு விசிக வந்தால் அவர்களுக்குத்தான் லாபம். அவர்களுக்கு நிறைய இடம் கிடைக்கும். வராவிட்டால் 'Dont care' என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேரடியாக அழைப்பு விடுத்தார்.

அதேபோல் அதிமுகவின் மற்ற தலைவர்களும் கூட்டணிக்கு விசிகவை அழைத்தனர். ஆனால் அது எதுவும் பயன் அளிக்கவில்லை. விசிக திமுக கூட்டணியிலேயே தொடர முடிவு செய்தது. திமுகவிடம் 2 இடங்களை பெற விசிகவும் கூட ஒப்புக்கொண்டது.
அதிமுக தாமதம்: அதேபோல் கம்யூனிஸ்டுகள், மதிமுகவையும் கூட அதிமுகவால் இழுக்க முடியவில்லை. அதோடு இல்லாமல் காங்கிரஸ் கட்சியையும் விடாமல் அதிமுக அழைத்தது. இரவு முழுக்க எடப்பாடி இதற்காக காங்கிரஸ் தலைவர்கள் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோரிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வந்தார்.
எப்படியாவது காங்கிரஸ் திமுக கூட்டணியை உடைத்து தங்கள் பக்கம் இழுக்க முயன்றார். ஆனால் ஸ்டாலின் - காங்கிரஸ் இடையிலான உறவு மிக வலுவாக இருந்தது. 9 தமிழ்நாடு சீட் + புதுச்சேரி என்ற வலுவான ஆபரையும் கூட ஸ்டாலின் காங்கிரசுக்கு வழங்கி வந்தார்.
இது போக தேசிய அளவிலும் காங்கிரஸ் - ஸ்டாலின் உறவு வலுவாக இருக்கிறது. இதனால் அவர்கள் கூட்டணியும் உறுதியாகிவிட்டது. இப்படி பெரும்பாலான கட்சிகள் அதிமுகவிற்கு நோ சொல்லி அதிர்ச்சி அளித்துள்ளன. எடப்பாடி அவ்வளவு முயன்றும் கூட காங்கிரசை அதிமுக பக்கம் இழுக்க முடியாதது அவரின் அரசியல் ரீதியான தோல்வியாகவே பார்க்கப்படுகிறது.
அதிரடி வேகம்: லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தை முடிவுகளை திமுகவினர் வேகமாக எடுத்து வருகின்றனர். லோக்சபா தேர்தலையொட்டி திமுக- மார்க்சிஸ்ட் இடையே நடந்த தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே திமுக 2 தொகுதிகளின் பங்கீடு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 1 இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மீண்டும் ராமநாதபுரத்தில் போட்டியிடும் என்று அறிவித்துள்ளது. திமுக கூட்டணியில் ஐ.யூ.எம்.எல் கட்சி சார்பாக மீண்டும் ராமநாதபுரம் தொகுதியில் ஏணி சின்னத்தில் நவாஸ் கனி போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதேபோல் வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் மீண்டும் நாமக்கல் தொகுதி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது அந்த தொகுதி எம்பியாக அந்த கட்சியின் ஏகேபி சின்ராஜ் உள்ளார். ஆனால் புதுமுகத்துக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று உங்கள் கட்சியிலேயே முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
எம்பி ஏகேபி சின்ராஜ் வரும் தேர்தலில் போட்டியிடப்போவது இல்லை என கூறியுள்ளார். அதனால் புதுமுகம் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது போக மதிமுகவிற்கு வழங்கப்படும் தொகுதி குறித்தும் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2024 மக்களவைத் தேர்தல்: திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தொகுதிப் பங்கீடு விவரம்!
திமுக - 21
காங்கிரஸ் - 9 + புதுச்சேரி
விசிக - 2 (சிதம்பரம், விழுப்புரம்)
சிபிஐ - 2
சிபிஎம் - 2
மதிமுக -1
இயூமுலீ - 1 (ராமநாதபுரம்)
கொமதேக - 1 (நாமக்கல்)
-
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது?












Click it and Unblock the Notifications