நீங்கதான் "ஆடு".. தோல்வி கன்பார்ம்.. எடப்பாடி ஒரு முடிவிற்கே வந்துவிட்டாராமே? கசிந்த சிதம்பர ரகசியம்
சென்னை: 2024 லோக்சபா தேர்தலில் தாங்கள் தோல்வி அடைய போகிறோம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். அதனால் . 2024 லோக்சபா தேர்தலில் நிற்பவர் நில்லுங்கள்.. தோல்வி அடையுங்கள் என்று எடப்பாடி பழனிசாமி விட்டேத்தியான மனப்பான்மைக்கு சென்றுவிட்டார் என்று பத்திரிகையாளர் துக்ளக் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
அதிமுக பாஜக இடையிலான மோதல் முடிவிற்கு வந்துள்ளது. இணைபிரியாத நண்பர்களாக தமிழ்நாடு அரசியலில் மட்டுமின்றி தேசிய அரசியலிலும் உச்சத்தில் இருந்த அதிமுக - பாஜக தங்கள் உறவை முறித்துக்கொண்டது.
அதிமுகவின் டாப் தலைவர்களை விமர்சனம் செய்ததை கண்டித்து இந்த கூட்டணியை முறித்துக்கொள்வதாக அதிமுக அறிவித்துள்ளது. பாஜகவுடன் கூட்டணி இனி கிடையாது. பாஜகவுடன் 2024 லோக்சபா தேர்தலில் கூட்டணி இல்லை. 2026 லோக்சபா தேர்தலிலும் கூட்டணி இல்லை என்று அதிமுக அறிவித்துள்ளது. இந்த கூட்டணி முறிவு தொடர்பாக பத்திரிகையாளர் துக்ளக் ரமேஷ் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில், அதிமுக என்ன செய்தாலும் அவர்களுக்கு சிறுபான்மையினர் வாக்குகள் சுத்தமாக விழாது. எடப்பாடி பழனிசாமி பாஜக கூட்டணியை உடைத்தால் சிறுபான்மையினர் வாக்குகள் வராது. 2024ல் படுதோல்வி அடைந்தால் கூட ஓகே என்றுதான் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். அவர்களின் நோக்கம் 2026 சட்டசபை தேர்தல்தான். 2024 லோக்சபா தேர்தலில் தாங்கள் தோல்வி அடைய போகிறோம் என்பதை அவர் நினைக்கிறார்கள். அவர்களுக்கு அது தெரியும். அவர்கள் 2026 சட்டசபை தேர்தலில் வெற்றிபெற திட்டமிடுகிறார்கள்.

எடப்பாடிக்கு சிக்கல்; இரட்டை இலை, ஜெயலலிதா , எம்ஜிஆரை வைத்து எப்படியாவது வாக்கு வாங்கலாம் என்று பார்க்கிறார்கள். ஆனால் நான் சொல்கிறேன் அப்போதும் கூட அவர்களுக்கு சிக்கல்தான். எடப்பாடிக்கு எல்லாம் செல்வாக்கு இல்லை. இரட்டை இலை, ஜெயலலிதா , எம்ஜிஆரை வைத்து எப்படியாவது வெல்ல வேண்டும் என்று நினைக்கிறார்கள். அவ்வளவுதான். இரட்டை இல்லை இல்லையென்றால் எடப்பாடி பழனிசாமியின் சாயம் வெளுத்துவிடும். 2024 லோக்சபா தேர்தலில் இவர்களுக்கு எம்பி வராது என்று தெரியும். அதனால் இந்த தேர்தலில் செலவு செய்ய அதிமுக விரும்பவில்லை.
2024 தேர்தலில் பணத்தை வேஸ்ட் செய்ய வேண்டாம் என்று நினைக்கிறார்கள். போட்டியிட்டாலும் வெல்ல முடியாது என்று தெரியும். அதனால் ஏதாவது செய்து இந்த தேர்தலை அப்படியே ஓட்டி விடலாம் என்று நினைக்கிறார்கள். எம்பி தேர்தலில் இதனால் எடப்பாடி பழனிசாமி சிலரை பலிகடா ஆக்க போகிறார். அதன்படி சிலரை ஆடா களமிறக்க போகிறார். 2024 லோக்சபா தேர்தலில் நிற்பவர் நில்லுங்கள்.. தோல்வி அடையுங்கள். நீங்கள்தான் பலிகடா என்று விடப்போகிறார்.

பலிகடா: யார் எல்லாம் தேர்தலில் நிற்கிறார்களோ அவர்கள் தோல்வி அடைய வாய்ப்பு உள்ளது. அவர்கள் காலி. யாரும் தேர்தலில் நிற்க முன் வரமாட்டார்கள் . சிலரை திணித்து தேர்தலில் நிற்க வைப்பார்கள். அவரும் செலவு செய்ய மாட்டார்., கட்சியும் செலவு செய்யாது. அவ்வளவுதான். கொஞ்சமாக போஸ்டர் ஓட்டுவார்கள். கொஞ்சமாக செலவு செய்வார்கள். அதை வைத்து தேர்தலை சந்திப்பார்கள். கண்டிப்பாக இவர்கள் வெல்ல வாய்ப்பே இல்லை. ஆனால் எடப்பாடி பழனிசாமி ஒன்றை நினைக்க மறந்துவிட்டார்.

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தால் எடப்பாடி பழனிசாமி கேள்விக்கு உள்ளாவார். அவர் கண்டிப்பாக கேள்வி கேட்கப்படுவார். அவரின் தலைமை கேள்வி எழுப்பப்படும். அவரின் தலைமைக்கு எதிராக உள்ளிருந்தும்.. வெளியே இருந்தும் அவருக்கு எதிராக கேள்வி வரும். வரிசையாக தோல்வி மேல் தோல்வி என்றால் எடப்பாடி பழனிசாமியை யார் மதிப்பார்கள். அவருக்கு யார் ஆதரவு கொடுப்பார்கள். எத்தனை காலம் அவர் தன்னை ஆளுமை என்று ஒப்புக்கொள்வார்கள்?
எத்தனை காலம் கட்சியினரை எடப்பாடி பழனிசாமி ஏமாற்ற முடியும்., என்று துக்ளக் ரமேஷ் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications