சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பவுன்சரோடு போன வேலுமணி! ஒரே சாலையில் இபிஎஸ்- ஓபிஎஸ் கார்! அப்போது நடந்த சம்பவம்! வாயை பிளந்த ரரக்கள்

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக பொதுக்குழுவிற்கு நிர்வாகிகள் வரிசையாக வர தொடங்கி உள்ளனர். முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அதிகாலையிலேயே பொதுக்குழுவிற்கு வந்த நிலையில், அவரை தொடர்ந்து மற்ற நிர்வாகிகள், முன்னாள் அதிமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பொதுக்குழு கூட்டத்திற்கு வந்தனர்.

Recommended Video

    AIADMK பொதுக்குழு கூட்டம் | EPS VS OPS | Oneindia Tamil

    அதிமுக பொதுக்குழு பல்வேறு பிரச்சனைகள், மோதல்கள், போராட்டங்களுக்கு இடையில் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு மண்டபத்தில் நடக்கிறது. இன்னும் சற்று நேரத்தில் பொதுக்குழு கூட்டம் நடக்க உள்ளது.

    இந்த கூட்டத்திற்கு அதிகாலையில் இருந்து நிர்வாகிகள் வரிசையாக வர தொடங்கி உள்ளனர். அதிமுக பொதுக்குழுவுக்கு வரும் தொண்டர்களை வரவேற்கும் விதமாக பெரிய பெரிய பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளது.

    அதிமுக பொதுக்குழு கூட்டம்.. வானகரத்தில் பிரம்மாண்ட ஏற்பாடு.. குவியும் ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் - வீடியோ அதிமுக பொதுக்குழு கூட்டம்.. வானகரத்தில் பிரம்மாண்ட ஏற்பாடு.. குவியும் ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் - வீடியோ

    பொதுக்குழு

    பொதுக்குழு

    முக்கியமாக ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் பூங்கொத்துடன் இருப்பது போன்று பேனர் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் மண்டபத்திற்கு உள்ளே, வெளியே, இணைப்பு சாலைகளில் மொத்தம் 2000 போலீஸ் குவிக்கப்பட்டு உள்ளனர். பொதுக்குழுவில் பங்கேற்க ஆவலுடன் வரும் தொண்டர்கள் ஸ்ரீவாரி மண்டபம் முன்பு குவிந்து வருகின்றனர். தாரை தப்பட்டை, கரகாட்டம், ஒயிலாட்டம், எம்ஜிஆர் பாடல்களுக்கு நடனம் என்று திருவிழா போல கூட்டம் தயாராகி வருகிறது. மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா போன்று வேடமணிந்து நிர்வாகிகள் கொண்டாடி வருகிறார்கள்.

     ஸ்ரீவாரி மண்டபம்

    ஸ்ரீவாரி மண்டபம்

    இந்த நிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக வரும் மூத்த உறுப்பினர்களுக்கு அதிக அளவு பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. போலீஸ் மற்றும் பவுன்சர்களின் சிறப்பு பாதுகாப்போடு முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி வருகை புரிந்தார். ஓபிஎஸ், இபிஎஸ்ஸுக்கு இணையாக வேலுமணிக்கு கூடுதல் பாதுகாப்பு கொடுக்கப்பட்டு இருந்தது. முதலில் வந்த அமைச்சர்களுக்கு இப்படி பவுன்சர் பாதுகாப்பு கொடுக்கப்படவில்லை. மாறாக வேலுமணிக்கு பவுன்சர் பாதுகாப்பு தரப்பப்ட்டது.

    ஓபிஎஸ்

    ஓபிஎஸ்

    இந்த நிலையில் கிரீம் சாலையில் இருந்து ஓபிஎஸ், இபிஎஸ் அடுத்தடுத்து பொதுக்குழு கூட்டத்திற்கு வருகை புரிந்தனர். பொதுக்குழு நோக்கி செல்வதற்கு எடப்பாடி பழனிசாமி காரில் ஏறும் முன் அவருக்கு அதிமுக நிர்வாகிகள் சார்பாக பூர்வ கும்ப மரியாதை கொடுத்தனர். அவரின் வீட்டிற்கு வெளியே ஏராளமான தொண்டர்கள் கூடி உள்ளனர். இந்த நிலையில் பொதுக்குழு கூட்டத்திற்கு வந்த எடப்பாடிக்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுக்கப்பட்டது.

     தேர் போல வந்தார்

    தேர் போல வந்தார்

    எடப்பாடிக்கு இவ்வளவு பெரிய வரவேற்பு கொடுக்கப்பட்டதை பார்த்து அவரின் ஆதரவாளர்களே வாயை பிளந்தனர். தேர் வலம் வருவது போல பெரிய ஆரவாரத்தோடு எடப்பாடி பழனிசாமி வந்தார். முன் பக்கமும், பின் பக்கமும் தொண்டர்கள் கூட்டம் சூழ.. கார்கள் படை சூழ எடப்பாடி வந்தார். ஒரு கட்டத்தில் எடப்பாடி வந்த காரும், ஓ பன்னீர்செல்வம் வந்த காரும் அருகருகே சில நூறு மீட்டர்கள் தூரத்தில் இருந்தது. இரண்டு கார்கள் கிட்டத்தட்ட 2 கிமீ தூரத்திற்கு குறைவான தூரத்தில் இருந்தது.

     ஓபிஎஸ் தனிமை

    ஓபிஎஸ் தனிமை

    எடப்பாடி இப்படி புடை சூழ வருவதை பார்த்து நிர்வாகிகள் ஒரு பக்கம் வாயை பிளந்து கொண்டு இருந்தார். ஆனால் இன்னொரு பக்கம் ஓ பன்னீர்செல்வம் ஆரவாரமின்றி வந்தார். அவர் வந்த கார், அதற்கு முன் ஒரு வேன், பின்னர் ஒரு கார் என்று பெரிய ஆரவாரமின்றி அமைதியாக வந்தார். பெரிய பகட்டு இல்லாமல் அமைதியாக அவர் பொதுக்குழுவிற்கு வருகை புரிந்தார். இன்னும் சற்று நேரத்தில் பொதுக்குழு கூட்டம் தொடங்க உள்ளது.

    English summary
    Edappadi Palanisamy - O Pannerselvam car close ahead of AIADMK meeting: What happened? அதிமுக பொதுக்குழுவிற்கு நிர்வாகிகள் வரிசையாக வர தொடங்கி உள்ளனர். முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அதிகாலையிலேயே பொதுக்குழுவிற்கு வந்த நிலையில், அவரை தொடர்ந்து மற்ற நிர்வாகிகள், முன்னாள் அதிமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பொதுக்குழு கூட்டத்திற்கு வந்தனர்.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X