யூ டர்ன் எல்லாம் போட்டு.. டேபிளை உடைத்தார்.. விஜயின் வாய்சாக பேசிய எடப்பாடிக்கு.. சம்பவம் செய்த தவெக
சென்னை: கடந்த சில காலங்களாக விஜயின், தவெக கட்சியின் குரலாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பல இடங்களில் பேசி வந்தார். ஆனால் இப்போது செங்கோட்டையன் தவெகவில் இணைந்ததன் மூலம் விஜய் கிட்டத்தட்ட எடப்பாடி பழனிசாமிக்கு மிகப்பெரிய செக் வைத்துள்ளார்.
கரூர் விவகாரத்தில் தொடக்கத்தில் இருந்தே விஜய்க்கு ஆதரவாக எடப்பாடி குரல் கொடுத்து வந்தார். தமிழ்நாடு சட்டசபையிலேயே தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் குரலாக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

விஜய்க்கு ஆதரவாக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி
எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் பேசுகையில், ஒரே இரவில் 39 சடலங்களுக்கு உடற்கூராய்வு (பிரேதப் பரிசோதனை) எவ்வாறு நடத்தப்பட்டது என்றும், ஏன் இவ்வளவு அவசரம் என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் சென்று கள்ளச்சாராயத்தில் பலியான நபர்களின் குடும்பங்களை பார்க்காத ஸ்டாலின்.. இங்கு மட்டும் ஏன் சென்றார். அமைச்சர்கள் அங்கு செல்லாத போது இங்கு மட்டும் அமைச்சர்கள் செல்வது ஏன்?
தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் என்பது நிச்சயம் தவிர்க்கப்பட்டிருக்கும். விஜயின் பிரச்சாரம் கரூருக்கு முன்பு நான்கு மாவட்டங்களில் நடைபெற்றது. அக்கூட்டங்களில் திரண்ட மக்கள் எண்ணிக்கையின் அடிப்படையில், காவல்துறையும் உளவுத்துறையும் அரசுக்கு ஒரு தகவலைக் கொடுத்திருக்கும்.
அதற்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தால், இத்தகைய சம்பவம் நிகழ்ந்திருக்காது. போக்குவரத்து நெரிசலைக் காரணம் காட்டி வேலுச்சாமிபுரத்தில் அதிமுக கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டபோது, அதே பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு மட்டும் எப்படி அனுமதி வழங்கப்பட்டது என்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது., என்று கேள்வி எழுப்பினார்.
ஆசையாக இருந்த எடப்பாடி?
சமீபத்தில் கூட அதிமுக கூட்டணியில் தவெக இணைய உள்ளதாக எடப்பாடி பழனிசாமி சூசகமாகப் பேசி இருந்தார். குமாரபாளையம் தேர்தல் பரப்புரையில், அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமைப்போம் என எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது, கூட்டத்திற்கு நடுவே சிலர் தவெக கொடியை உயர்த்தி உற்சாகமாக கோஷமிட்டனர். அப்போது, 'கொடி பறக்குது, கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டுவிட்டது ஸ்டாலின் அவர்களே.. இந்த ஆரவாரம் உங்கள் செவியைத் துளைக்கும்' எனக் கூறினார் எடப்பாடி பழனிசாமி.
போன் கால் பேச்சு
ஏற்கனவே எடப்பாடி கே. பழனிசாமி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யுடன் தொலைபேசியில் உரையாடினார். இந்த உரையாடலில் பல முக்கியமான விஷயங்கள் பேசப்பட்டதாக தகவல் வெளியானது.
2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சியை அகற்ற, தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்த போன் காலில் கேட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து அதிமுக வட்டாரம் நம்மிடம் பேசுகையில்.. கூட்டணிக்கு வருகிறீர்களா? என்று எடப்பாடி பழனிசாமி கேட்டார். இதற்கு விஜய் நோ சொல்லவில்லை. நான் மக்களை சந்திக்க போகிறேன். மீண்டும் பிரச்சாரத்தை தொடங்க போகிறேன், என்று கூறியதாக தெரிவித்தனர்.
செங்கோட்டையன் தவெக - எடப்பாடி ஷாக்
ஆனால் இப்போது செங்கோட்டையன் தவெகவில் இணைந்ததன் மூலம் விஜய் கிட்டத்தட்ட எடப்பாடி பழனிசாமிக்கு மிகப்பெரிய செக் வைத்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தில் செங்கோட்டையன் இணைந்துள்ளார். நேற்று எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த நிலையில் அவர் இன்று தவெகவில் இணைந்துள்ளார். அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் செங்கோட்டையன் இந்த முடிவை எடுத்துள்ளார்.
செங்கோட்டையன் தவெக சென்றுள்ளதால் அதிமுகவிற்கு கடுமையான சில நெருக்கடிகள், சிக்கல்கள் ஏற்படும் சூழல் உள்ளது. அதிமுக விஜயின் தமிழக வெற்றிக் கழகம் உடன் கூட்டணி வைக்க தீவிரமாக முயன்று வருகிறது. இதற்கான ஆசையை எடப்பாடி பழனிசாமி வெளிப்படையாகவே கூறி இருக்கிறார்.
செங்கோட்டையன் வழியாக எடப்பாடிக்கு செக்
செங்கோட்டையனுக்கு தவெக கட்சியில் அதிக பவர் இருக்கும் என்பதால்.. அவர் அதிமுக கூட்டணி உருவாகாமல் பார்த்துக்கொள்வார். அதாவது அதிமுக - தவெக கூட்டணி உருவாகி அது வென்றால், அது எடப்பாடிக்குத்தான் சாதகம். அதை செங்கோட்டையன் விரும்ப மாட்டார். எனவே இந்த கூட்டணிக்கு தவெக உள்ளே இருந்தே செங்கோட்டையன் முட்டுக்கட்டை போடுவார்.
ஒருவேளை கூட்டணி உருவாகிறது என்றாலும்.. எடப்பாடியை முதல்வர் வேட்பாளராக இருக்க அனுமதிக்க மாட்டார். தவெக வழியாக இதற்கு எதிராக பிரஷர் போடுவார். ஏனென்றால் இப்போதே NDA கூட்டணியில் எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளர் ஆக இருப்பதை செங்கோட்டையன் விரும்பவில்லை. இதனால் தவெகவில் தனக்கு கிடைக்கும் பவரை வைத்து எடப்பாடி ஆசைக்கும் செங்கோட்டையன் முற்றுப்புள்ளி வைப்பார். இப்படி செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகம் சென்று இருப்பது எடப்பாடி பழனிசாமிக்கு மிகப்பெரிய சிக்கலாக மாறி உள்ளது. தவெக உடன் கூட்டணி வைக்க முடியாத நிலை எடப்பாடிக்கு ஏற்பட்டு உள்ளது.
-
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
விஜய் போட்ட உத்தரவு.. 5 நாள் தான் டைம்.. வீடு கட்டுவோருக்கு மெகா குட்நியூஸ்! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா? -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட்












Click it and Unblock the Notifications