விடுவோமா? ஓபிஎஸ்ஸுக்கு போட்டியாக மீண்டும் மா.செக்கள் கூட்டம்.. தேதி குறித்தார் எடப்பாடி பழனிசாமி!
சென்னை: ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெற உள்ள நிலையில், அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் வரும் ஜூலை 5ஆம் தேதி அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2024 மக்களவைத் தேர்தலை நோக்கி அனைத்து கட்சிகளும் நடைபோடத் தொடங்கியுள்ளன. தேர்தலுக்கு இன்னும் ஓராண்டிற்கும் குறைவான நாட்களே இருக்கும் நிலையில், தனது பலத்தை நிரூபிக்கும் வேலைகளில் இறங்கியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. மூட்டு வலியில் இருந்து ஓரளவுக்கு மீண்டுள்ள ஈபிஎஸ், மீண்டும் கட்சிப் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார்.
ஏற்கனவே உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத்த கட்சியினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ள எடப்பாடி பழனிசாமி, மாவட்ட செயலாளர்களின் நகர்வுகளை நேரடியாகவே கவனித்து வருகிறார். அடுத்தகட்டமாக, பூத் கமிட்டிகளை வலுப்படுத்துவது, வார்டு வார்டாக கூட்டம் நடத்தி மக்களிடம் திமுக ஆட்சியின் குறைகளை சுட்டிக்காட்டுவது உள்ளிட்ட அறிவுறுத்தல்களும் பறந்திருக்கின்றன.
எல்லா மாவட்டங்களிலும் திமுக அரசுக்கு எதிராக கூட்டங்கள் நடத்தி மக்கள் மன்றத்தின் ஆதரவைப் பெறும் முயற்சியை தீவிரப்படுத்த எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார். இதுகுறித்து முக்கிய முடிவுகளை எடுப்பதற்காக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டவுள்ளார் எடப்பாடி பழனிசாமி.
அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் வரும் ஜூலை 5ஆம் தேதி காலை 9 மணிக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
ஓபிஎஸ் அணியினர் விரைவில் கொங்கு மண்டலத்தில் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே திருச்சியில் பிரமாண்ட மாநாட்டை நடத்திய நிலையில் அடுத்தகட்டமாக கொங்கு மண்டலத்தில் மாநாடு நடத்தத் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், மாவட்ட செயலாளர்களுடன் ஓபிஎஸ் நாளை (ஜூலை 1) சென்னையில் ஆலோசனை நடத்த உள்ளார்.
இந்நிலையில் தான், அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஜூலை 5ல் நடைபெறும் என ஈபிஎஸ் தரப்பு அறிவித்துள்ளது. ஓபிஎஸ் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடத்தும் போதெல்லாம் எடப்பாடி தரப்பும் கூட்டம் நடத்துவது வழக்கம். அந்த வகையில் இப்போதும் மாசெக்கள் கூட்டம் நடைபெற உள்ளது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை பற்ற வைத்துள்ளது.

-
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications