இதுதான் கடைசி வழி.. அதிமுகவை மீட்க.. நாம் தமிழர் உடன் கூட்டணி வைக்க திட்டம்.. எடப்பாடி மெகா முடிவு?
சென்னை: 2025 சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் சீமானை கூட்டணிக்குள் கொண்டு வந்தால் போதும்.. அதிமுகவை சரிவில் இருந்து மீட்டுவிடலாம்.. அதிமுக கட்சியை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வரலாம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நினைக்கிறாராம்.
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி வந்த காலத்தில் இருந்து வரிசையாக அக்கட்சி தோல்விகளை தழுவி வருகிறது. வரிசையாக 9 தேர்தல்களில் அதிமுக தோல்வி அடைந்தது. இன்றோடு 10வது தேர்தலில் தோல்வி அடைந்து உள்ளது.

அதன்படி 2017 ஆம் ஆண்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல், அதே ஆண்டு 22 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தல், 2020 ஊரக உள்ளாட்சி தேர்தல், 2021 சட்டசபை தேர்தல், 2021 ஆம் ஆண்டு நடந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல், 2022 ஆம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், 2023 ஆம் ஆண்டு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், 2020ல் நடந்த கன்னியாகுமரி லோக்சபா இடைத்தேர்தல் என மொத்தம் 9 தோல்விகளை எடப்பாடி தலைமையிலான அதிமுக சந்தித்தது. இன்றோடு 10வது தேர்தலில் தோல்வி அடைந்து உள்ளது.
டெபாசிட் இழப்பு: அதிலும் இந்த முறை அதிமுக அதிக இடங்களில் டெபாசிட் இழந்து உள்ளது. தென் சென்னை, கன்னியாகுமரி, புதுச்சேரி, தேனி, தூத்துக்குடி, நெல்லை மற்றும் வேலூர் ஆகிய 7 தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ளது அதிமுக.
படுதோல்வி: 9 தொகுதிகளில் மூன்றாமிடத்திற்கும் சென்றுள்ளது. மேலும் 3 தொகுதிகளில் நான்காவது இடத்திற்கும் தள்ளப்பட்டது. 2024 லோக்சபா தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்து உள்ளது. அதிமுகவின் தோல்விக்கு பின் வரும் காரணங்கள் உள்ளன.
அதிமுக கட்சி பல விதமாக பிரிந்தது. ஓபிஎஸ் தரப்பு, டிடிவி தரப்பு தென் மண்டலங்களில் , டெல்டாவில் வாக்குகளை பிரிக்கின்றனர். இவர்களை இணைக்க வேண்டும். அதிமுகவில் வேட்பாளர் தேர்வு சொதப்பல். பல தொகுதிகளில் உள்ளூர் ஆட்களுக்கே தெரியாதவர்கள் வேட்பாளர்கள் ஆனார்கள். சில இடங்களில் வெளியூர் ஆட்கள் வேட்பாளர்கள் ஆனார்கள். கல்லை கூட ஜெயிக்க வைக்க எடப்பாடி ஒன்றும் ஜெயலலிதா இல்லையே. அதிமுகவில் நிர்வாகிகளே பெரிதாக வேலை செய்யவில்லை. பெரிதாக தேர்தலுக்காக களமிறங்கி பணிகளை செய்யவில்லை.
நாம் தமிழர் உடன் கூட்டணி; ஆனால் இதை சரி செய்ய நாம் தமிழர் உடன் கூட்டணி வைப்பது தீர்வு என்று எடப்பாடி பழனிச்சாமி நினைக்கிறாராம். வரும் சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் சீமானை கூட்டணிக்குள் கொண்டு வந்தால் போதும்.. அதிமுகவை சரிவில் இருந்து மீட்டுவிடலாம்.. அதிமுக கட்சியை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வரலாம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நினைக்கிறாராம்.
தமிழ்நாட்டில் 40 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தனியாக போட்டியிட்டது. ஆனால் இந்த முறை நாம் தமிழர் சின்னம் மாறி புதிய சின்னத்தில் போட்டியிட்டது. 2024 லோக்சபா தேர்தலில் 40 தொகுதிகளிலும் டெபாசிட் இழந்தது நாம் தமிழர் கட்சி. இது நாம் தமிழர் கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
2024 லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் கட்சி தமிழ்நாடு, புதுச்சேரியில் எல்லா தொகுதிகளிலும் படுதோல்வி அடைந்து உள்ளது. இந்த தேர்தலில் நாம் தமிலர் 8.5% வாக்குகள் பெற்றுள்ளது. பல இடங்களில் முடிவுகளை தீர்மானிக்கும் சக்தியாக நாம் தமிழர் இருந்தது.
பிரச்சனைக்கு தீர்வு: நாம் தமிழர் உடன் இணைந்தால் அதிமுக சரிவில் இருந்து மீளும். அதிமுகவில் டிடிவி, ஓ பன்னீர்செல்வத்தை சேர்க்க வாய்ப்பு இல்லை. அவர்களை சேர்க்காமல் திமுகவை வீழ்த்த ஒரே வழி நாம் தமிழர்தான்.
பாஜக, டிடிவி, ஓ பன்னீர்செல்வத்தை சேர்க்காமல், அதிமுகவை கரைசேர்க்க நாம் தமிழர் கட்சியுடன் இணைய எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு வருகிறாராம்.












Click it and Unblock the Notifications