இது மட்டும் நடக்கவே கூடாது.. பிளான் 180+.. எடப்பாடி பழனிச்சாமி எடுத்த முக்கிய முடிவு! அப்போ பாஜக?
சென்னை: 2026ல் அதிமுக ஆட்சிக்கு வந்தாலும் அது கூட்டணி ஆட்சியாக இருக்க கூடாது என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருக்கிறாராம். இதற்கான பல்வேறு ஆலோசனைகளை, திட்டங்களை எடப்பாடி பழனிசாமி வகுத்து வருகிறாராம்.
தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டு உள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் இந்த கூட்டணி அமைகிறது என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி செய்துள்ளார். சமீபத்தில் கூட சென்னையில் எடப்பாடி பழனிச்சாமி - அமித் ஷா - அண்ணாமலை கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அமித் ஷா அளித்த பேட்டியில், தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேர்தலை சந்திப்போம்.
2026 சட்டமன்ற தேர்தலை பிரதமர் மோடி தலைமையிலும், தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும் சந்திப்போம். எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் இந்த கூட்டணி அமைகிறது என்று அமித் ஷா கூறி உள்ளார். அதிலும் பாஜகவுடன் தேர்தல் கூட்டணிதான்.. ஆட்சியில் கூட்டணி இல்லை என்பதையும் எடப்பாடி பழனிசாமி உறுதியாக கூறிவிட்டார்.

அதாவது தேர்தலை ஒன்றாக சந்திப்போம். ஆனால் ஆட்சியில் பங்கு தரமாட்டோம் என்று இப்போதே சொல்லிவிட்டார். இப்படிப்பட்ட நிலையில்தான் எடப்பாடி பழனிசாமி சில சீக்ரெட் மீட்டிங்குகளை மேற்கொள்ள தொடங்கி உள்ளார். பொதுவாக அரசியலில் இன்ப்ளூயன்ஸ் செய்ய சிலர் இருப்பார்கள். அரசியல் வியூகம் வகுப்பவர்கள், சில பிரிவினரை ஒரு தலைவருக்கு கீழ் கொண்டு வருபவர்கள், ஒரு அரசியல் தலைவருக்கு ஆதரவாக களத்தை மாற்றுபவர்கள் என்று அரசியல் களத்தில் இன்ப்ளூயன்ஸ் செய்ய பலர் இருக்கிறார்கள். இவர்களை எடப்பாடி அடிக்கடி சந்தித்து வருகிறாராம்.
அதிமுக ஆட்சி
இந்த சந்திப்புகளை தொடர்ந்தே 2026ல் அதிமுக ஆட்சிக்கு வந்தாலும் அது கூட்டணி ஆட்சியாக இருக்க கூடாது என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருக்கிறாராம். இதற்கான பல்வேறு ஆலோசனைகளை, திட்டங்களை எடப்பாடி பழனிசாமி வகுத்து வருகிறாராம்.
அதாவது 180க்கும் அதிகமான இடங்களில் தனித்து போட்டியிட எடப்பாடி திட்டமிட்டு உள்ளாராம். அப்போதுதான் 118 இடங்களை வெல்ல வாய்ப்புகள் வரும். 60 இடங்களில் தோற்றால் கூட.. 120 இடங்களை வெல்ல முடியும் என்று எடப்பாடி நினைப்பதாக கூறப்படுகிறது. அதாவது தனியாக ஆட்சி அமைக்க முடியும். மீதம் உள்ள 54 இடங்களை அப்படியே பாஜகவிற்கு தரலாம்.
பாஜக அதை யாருக்கு பகிர வேண்டுமோ பகிரட்டும் என்ற நிலைப்பாட்டை அறிவிக்க எடப்பாடி திட்டமிட்டுள்ளாராம். இதன் மூலம் பாஜகவிற்கு கணிசமான இடங்களும் கிடைக்கும்.. எடப்பாடியும் வென்றால் அதிமுக சார்பாக தனியாக ஆட்சி அமைக்க முடியும் என்று எடப்பாடி நினைக்கிறாராம். இதற்கான பல்வேறு ஆலோசனைகளை, திட்டங்களை எடப்பாடி பழனிசாமி வகுத்து வருகிறாராம்.
எடப்பாடி பழனிசாமி எடுக்க போகும் சர்வே
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழக சட்டசபை தேர்தலுக்காக கட்சி ரீதியாக சர்வே எடுக்க உள்ளாராம். பல்வேறு விஷயங்களை மனதில் வைத்து எடப்பாடி இந்த சர்வேவை எடுக்க உள்ளாராம். அதன்படி அதிமுகவிற்கு கூட்டணி இல்லாமல் எவ்வளவு வெற்றி வாய்ப்பு இருந்தது. பாஜக கூட்டணியோடு எவ்வளவு வெற்றி வாய்ப்பு உள்ளது.
பாஜக மூலம் எத்தனை வாக்குகள் அதிமுகவை நோக்கி வருகின்றன வெளியே செல்கின்றன. முதலமைச்சர் முகங்களில் யாருக்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. விஜயால் அதிமுகவிற்கு ஏதேனும் சிக்கல்கள் உள்ளதா? திமுகவின் வாக்கு சதவிகிதம் உயர்ந்து உள்ளதா சரிந்து உள்ளதா?ஆட்சிக்கு ஆதரவான எதிரான மனநிலைகள் உள்ளதா? அதிமுக எந்தெந்த மண்டலங்களில் வலுவாக உள்ளது. எந்தெந்த மண்டலங்களில் வலிமை இன்றி உள்ளது என்று பல விஷயங்களை எடப்பாடி பழனிசாமி சர்வே மூலம் அறிய உள்ளாராம். இதற்காக தனியார் நிறுவனம் ஒன்றுடன் எடப்பாடி ஒப்பந்தம் செய்ய உள்ளாராம்












Click it and Unblock the Notifications