"புது மாஸ்டர்மைண்ட்".. புத்தம் புது தலையை உள்ளே இறக்கும் எடப்பாடி.. லோக்சபா தேர்தலின் கேம் சேஞ்சர்?
சென்னை: லோக்சபா தேர்தலுக்காக எடப்பாடி பழனிசாமி கொஞ்சம் கொஞ்சமாக தயாராக தொடங்கி உள்ளாராம். இந்த தேர்தலில் அதிமுகவிற்கு பணியாற்றுவதற்காக முக்கியமான தலை ஒருவரை களமிறக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆன பின் தற்போது லோக்சபா தேர்தலுக்காக எடப்பாடி பழனிசாமி தயாராகி வருகிறார். மாவட்டம் வாரியாக தேர்தல் பணிகளை எடப்பாடி பழனிசாமி முடுக்கிவிட்டுள்ளார். அதிமுகவின் உட்கட்சி மோதலும் கிட்டத்தட்ட முடிவிற்கு வந்துவிட்டது.

லோக்சபா தேர்தலுக்கு அதிமுகவினரை தயார்படுத்தும் விதமாக மதுரையில் அதிமுக பொதுக்கூட்டத்தை நடத்த எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த பொதுக்கூட்டத்தை அவர் மதுரையில் நடத்தவும் முக்கியமான ஒரு காரணம் உள்ளதாம். எடப்பாடி என்றால் கொங்கு மண்டல தலைவர் என்ற இமேஜ் இருக்கிறது. அதை உடைக்க எடப்பாடி நினைக்கிறாராம்.
முக்குலத்தோர் அபிமானத்தை பெறும் விதமாக மதுரையில் எடப்பாடி கூட்டத்தை நடத்த உள்ளார் என்கிறார்கள். ஓ பன்னீர்செல்வம் காரணமாக முக்குலத்தோர் அப்செட் ஆக கூடாது என்பதற்காக இந்த கூட்டத்தை அவர் நடத்த வாய்ப்பு உள்ளது. அதோடு முக்கியமாக பிரதமர் மோடியை இந்த கூட்டத்தில் மேடை ஏற்ற எடப்பாடி முடிவு செய்துள்ளாராம். அதோடு கூட்டணி கட்சி தலைவர்கள் 10 பேரை மேடைக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளாராம்.
எடப்பாடி பழனிசாமி திட்டம்: இந்த நிலையில் லோக்சபா தேர்தலுக்காக எடப்பாடி பழனிசாமி கொஞ்சம் கொஞ்சமாக தயாராக தொடங்கி உள்ளாராம். இந்த தேர்தலில் அதிமுகவிற்கு பணியாற்றுவதற்காக முக்கியமான தலை ஒருவரை களமிறக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதாவது தேர்தல் வியூக வகுப்பாளர் ஒருவரை களமிறக்க தொடங்கி உள்ளாராம். திமுகவிற்கு வேலை பார்த்த பிரஷாந்த் கிஷோர் தற்போது ஐ பேக்கில் இல்லை. அவர் நேரடியாக தேர்தல் பணிகளை இனி செய்ய போவது இல்லை. இன்னொரு பக்கம் சுனில் கனகூலு காங்கிரசில் இருக்கிறார்.
காங்கிரஸ் திமுக கூட்டணியில் உள்ளது. இதனால் சுனில் அதிமுகவிற்கு தேர்தல் பணிகளை செய்ய மாட்டார். சுனில் இப்போதும் எடப்பாடியுடன் நட்பாகவே இருக்கிறார். கடந்த தேர்தலில் எடப்பாடிக்கு இவர் தேர்தல் பணிகளை செய்தார். இவர் மீண்டும் எடப்பாடி பக்கம் வர சான்ஸ் இல்லை. இந்த நிலையில் புதிய தேர்தல் வியூக வகுப்பாளர் ஒருவரை எடப்பாடி களமிறக்க உள்ளாராம்.
சமூக வலைதள பிரச்சாரம், தேர்தல் பிரச்சார திட்டமிடல், தொகுதி ரீதியாக சர்வே எடுக்கும் பணிகள் போன்றவற்றை மேற்கொள்ளும் விதமாக எடப்பாடி பழனிசாமி ஒருவரை களமிறக்க உள்ளாராம். இதற்காக டெல்லியை சேர்ந்த சில தேர்தல் வியூக வகுப்பு நிறுவனங்களிடம் பேசி வருகிறாராம். அடுத்த சில வாரங்களில் ஒருவரை தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
ஜெயலலிதா மறைவிற்கு பின் எல்லா தேர்தலிலும் அதிமுக தோல்வி அடைந்துவிட்டது. முக்கியமாக லோக்சபா தேர்தல், சட்டசபை தேர்தலில் எடப்பாடிக்கு கீழ் அதிமுக தோல்வி அடைந்துவிட்டது. இந்த இமேஜை மாற்ற வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி நினைக்கிறாராம். இதற்காகவே லோக்சபா தேர்தலுக்காக முக்கியமான தேர்தல் வகுப்பாளரை களமிறக்க 10 தொகுதிகளிலாவது வெற்றிபெறலாம் என்ற திட்டத்தில் இருக்கிறாராம். விரைவில் இதற்கான பணிகள் தொடங்கும் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications