கொடநாடு கொள்ளை சம்பவத்துடன் எனக்கு தொடர்பில்லை.. முதல்வர் பரபர பேட்டி
Recommended Video

சென்னை: கொடநாடு கொள்ளை சம்பவத்துடன் எனக்கு தொடர்பில்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொள்ளையின் போது 5 பேர் மர்மமான முறையில் உயிரிழந்துவிட்டனர். இந்த நிலையில் 5 பேர் சாவு என்பது திட்டமிட்ட கொலை என கனகராஜ் கொலையும் சந்தேகத்துக்கிடமானது என்றும் திடுக் தகவலை அடங்கிய வீடியோ ஆவணத்தை தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் டெல்லியில் நேற்று வெளியிட்டார்.
இதுகுறித்து மேத்யூஸ் கூறுகையில், வெறும் கைக்கடிக்காரங்கள்தான் கொடநாடு எஸ்டேட்டில் திருடப்பட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. வெறும் கடிகாரங்களை திருடவா முன்னாள் முதல்வர் இல்லத்தில் கொலை நடந்திருக்கும் என்ற கேள்வி எழுப்பப்படாமல் இருந்தது.

அமைதி
இதற்காகத்தான் நான் விடைதேடி ஆய்வுகளை மேற்கொண்டேன். கொடநாடு எஸ்டேட்டில் இருந்து திருடப்பட்ட, ஒபிஎஸ், தினகரன் உள்ளிட்டோரின் வீடியோ ஆதாரங்கள் இப்போது அந்த 'முக்கிய பிரமுகரிடம்' உள்ளன. எனவேதான் அவர்கள் அமைதியாக உள்ளனர். இவ்வாறு மேத்யூஸ் தெரிவித்தார்.

ஆலோசனை
அந்த முக்கியப் புள்ளி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என மேத்யூஸ் வெளிப்படையாகவே அறிவித்திருந்தார். இந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் அதிமுக நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார்.

போலீஸில் புகார்
அப்போது அவர் கூறுகையில் கொடநாடு கொள்ளை சம்பவத்துக்கும் எனக்கும் தொடர்பில்லை. அந்த வீடியோவில் துளிக்கூட உண்மையில்லை. கொடநாடு கொள்ளை தொடர்பான வீடியோ குறித்து போலீஸில் புகார் கூறப்பட்டுள்ளது.

விசாரணை நடத்தப்படும்
அரசியலில் நேரடியாக எதிர்கொள்ள முடியாமல் வீடியோ வெளியிட்டிருப்பது கோழைத்தனம் ஆகும். அதிமுகவை யாராலும் வீழ்த்த முடியாது. வீடியோவை வெளியிட்டவர்களின் பின்புலம் குறித்து விசாரணை நடத்தப்படும்.

விரைவில் கண்டறியப்படுவர்
பொங்கல் பரிசு ரூ. 1000-ஐ எதிர்த்து திமுக தலைவர் ஸ்டாலின் தூண்டுதல் பெயரில் வழக்கு தொடுத்துள்ளார். எந்த ஒரு திட்டத்தையும் அதிமுக தொடங்குவதற்கு திமுக முட்டுக்கட்டை போடுகிறது. விரைவில் வீடியோவை வெளியிட்டவர்கள் விரைவில் கண்டறியப்படுவர் என்றார்.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications