சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எடப்பாடியின் 2 டார்கெட்.. ‘ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்’ - வேலுமணிக்கு கொடுத்த அசைன்மெண்ட்!

Google Oneindia Tamil News

சென்னை : எடப்பாடி பழனிசாமி அணியில் ஓ.பன்னீர்செல்வம் ஓட்டையைப் போட்டு வரும் நிலையில், தனது பலத்தைக் காட்டுவது, திமுக அரசை எதிர்ப்பது என 2 இலக்குகளை குறிவைத்து தொடர்ந்து நடைபோட்டு வருகிறார் ஈபிஎஸ்.

அதிமுக தொண்டர்களின் பேராதரவைப் பெறுவதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பதிலேயே கவனம் செலுத்தி வருகிறார் எடப்பாடி பழனிசாமி.

அந்தவகையில், திமுகவுக்கு எதிரான வலிமையான தலைமை தான் தான் என நிரூபிக்கும் வகையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறார் எடப்பாடி பழனிசாமி.

திமுக அரசை எதிர்க்கும் அதேவேளையில், ஓபிஎஸ் தரப்புக்கு தங்களின் பலத்தைக் காட்டுவதற்கான வாய்ப்பாகவும் இந்த ஆர்ப்பாட்டங்களைப் பயன்படுத்தி வருகிறார் ஈபிஎஸ்.

ஓபிஎஸ் சொன்ன சீக்ரெட்.. ஷாக் ஆன எடப்பாடி.. 'ஃபர்ஸ்ட் டைம்’ .. ஈபிஎஸ் தரப்பில் தொற்றிக்கொண்ட பயம்! ஓபிஎஸ் சொன்ன சீக்ரெட்.. ஷாக் ஆன எடப்பாடி.. 'ஃபர்ஸ்ட் டைம்’ .. ஈபிஎஸ் தரப்பில் தொற்றிக்கொண்ட பயம்!

 வேலையைக் காட்டிய ஓபிஎஸ்

வேலையைக் காட்டிய ஓபிஎஸ்

எடப்பாடி பழனிசாமி ஆதரவாளராக இருந்த உசிலம்பட்டி எம்எல்ஏ ஐயப்பன், நேற்று ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். பொதுக்குழு வழக்கு தீர்ப்புக்குப் பிறகு முன்னாள் மாவட்ட செயலாளர்கள், முன்னாள் எம்.பிக்கள், முன்னாள் எம்.எல்.ஏக்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் என நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், சிட்டிங் எம்.எல்.ஏவும் ஓபிஎஸ் அணிக்குத் தாவியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இன்னும் தொடரும்

இன்னும் தொடரும்

மேலும், அதிமுகவை ஒருங்கிணைக்க புரட்சிப் பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும், கட்சியின் நலன் கருதி சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை நேரில் சந்தித்து அழைப்பு விடுப்பேன் என்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மேலும் இன்னும் பலர் தன் பக்கம் வர உள்ளார்கள். அது யார் என்பது பரம ரகசியம் என்றும் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். இதன் மூலம், ஈபிஎஸ் கூடாரத்தில் இருந்து ஆட்களை இழுக்கும் ஓபிஎஸ் தரப்பின் பிளான் ஆக்டிவ்வாக இருப்பது உறுதியாகியுள்ளது.

ஈபிஎஸ் ஆலோசனை

ஈபிஎஸ் ஆலோசனை

இதற்கிடையே, எடப்பாடி பழனிசாமி இன்று திருச்சி வந்துள்ளார். திருச்சியில் பொதுக்கூட்டம் மற்றும், முன்னாள் அமைச்சர் சிவபதி இல்லத் திருமணம் ஆகியவற்றில் பங்கேற்கும் எடப்பாடி, இன்று மத்திய மண்டல நிர்வாகிகளுடன் ஆலோசனையிலும் ஈடுபடுகிறார். இதற்கிடையே இன்னொரு முக்கியமான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி. நீலகிரி மாவட்டம் கூடலுாரில் அ.தி.மு.க சார்பில் கண்டனப் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடக்கும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

இதுதொடர்பாக ஈபிஎஸ் வெளியிட்ட அறிவிப்பில், ஆட்சிக்கு வந்தால் வனவளம் சார்ந்த மற்றும் வனப்பகுதி மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண 'வன ஆணையம்' அமைக்கப்படும் என தி.மு.க வாக்குறுதி அளித்தது. ஆட்சி பொறுப்பேற்று 16 மாதங்கள் கடந்த பிறகும் இதுவரை எந்த முயற்சியையும் தி.மு.க அரசு எடுக்கவில்லை. நீலகிரி மாவட்டம் கூடலுார் பகுதியில் பல்வேறு நிலம் சார்ந்த பிரச்னைகள் உள்ளன.

கூடலூரில் ஆர்ப்பாட்டம்

கூடலூரில் ஆர்ப்பாட்டம்

அரசு தேயிலைத் தோட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களின் வாழ்வாதார பிரச்னைகள் குறித்தும் அரசு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வனப்பகுதி மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணவும் அரசு தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நீலகிரி மாவட்டம் கூடலுார் நகராட்சி அலுவலகத்தில் இருந்து காந்தி சிலை வரை ஆகஸ்ட் 30 காலை 11 மணிக்கு பேரணி நடக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

 வேலுமணிக்கு அசைன்மெண்ட்

வேலுமணிக்கு அசைன்மெண்ட்

இந்த கண்டனப் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம், கோவை புறநகர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ தலைமையில் நடக்கும் என ஈபிஎஸ் அறிவித்துள்ளார். ஓபிஎஸ் தரப்புக்கு எதிராக பலத்தைக் காட்ட, இந்த ஆர்ப்பாட்டத்தையே அசைன்மெண்ட்டாக வேலுமணிக்கு கொடுத்துள்ளார் ஈபிஎஸ். இதனால், கூடலூரில் கொங்கு மண்டலமே திரளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரிசையாக

வரிசையாக

திமுக அரசைக் கண்டித்து தொடர்ச்சியாக கண்டன ஆர்ப்பாட்டங்களை அறிவித்து நடத்தி வருகிறார் ஈபிஎஸ். திமுக அரசின் மின் கட்டண உயர்வை எதிர்த்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்களை நடத்திய எடப்பாடி பழனிசாமி, கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தை நிறைவேற்றாத திமுக அரசைக் கண்டித்து நேற்று விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினார். இந்நிலையில், எஸ்.பி.வேலுமணி தலைமையில் நீலகிரி மாவட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளார் ஈபிஎஸ்.

2 டார்கெட்

2 டார்கெட்

திமுகவுக்கு எதிராகக் கடுமையாகச் செயல்படுவதன் மூலமாகவே அதிமுக தொண்டர்களின் ஆதரவைப் பெற முடியும். ஓபிஎஸ் மீது தொண்டர்கள் நம்பிக்கை இழந்ததற்குக் காரணமே, திமுகவை அவர் கடுமையாக விமர்சிக்காததுதான் எனக் கூறப்படுகிறது. அதனை உணர்ந்துள்ள எடப்பாடி பழனிசாமி தொடர்ச்சியாக திமுகவையும், முதல்வர் ஸ்டாலினையும் விமர்சித்து, கடுமையான எதிர்வினைகளை ஆற்றி வருகிறார்.

 ஒரே கல்லில் இரண்டு மாங்காய்

ஒரே கல்லில் இரண்டு மாங்காய்

இப்போது அதிமுகவில் ஓபிஎஸ், ஈபிஎஸ் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில், ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக தனது பலத்தைக் காட்டுவதற்கும், திமுக அரசை எதிர்ப்பதற்கும் ஆர்ப்பாட்டங்களைப் பயன்படுத்தி வருகிறார் எடப்பாடி பழனிசாமி. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் கணக்குத்தான் இது என்கிறார்கள் ர.ர.க்கள்.

English summary
Edappadi Palanisamy continues to aim at 2 goals of showing its strength and opposing the DMK government : திமுகவுக்கு எதிரான வலிமையான தலைமை தான் தான் என நிரூபிக்கும் வகையில் தொடர்ந்து கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறார் எடப்பாடி பழனிசாமி.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X