சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நாளைக்கே ஆளுநரிடம் அனுமதி பெற முடியுமா? ஊருக்குள் தனியாக நடந்து போய் பாருங்க.. ஸ்டாலின் பதிலடி

Google Oneindia Tamil News

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய அருகதையை, யோக்கியதையை நிரூபிக்க வேண்டுமானால் நாளையே அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டுக்கு ஆளுநரின் அனுமதியை பெறட்டும் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்,.

இது தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு அனுமதி கோரி ஆளுநருக்கு கடிதம் எழுதினேன். இன்னமும் நான்கு வார அவகாசம் சொல்லி பதில் அனுப்பியிருக்கிறார்.

Edappadi Palanisamy should seek the governors approval for the 7.5 per cent reservation : Mk Stalin

மாணவர் நலன் காக்க இணைந்து போராடுவோம் என்று அதிமுக அரசை அழைத்தேன். 'திமுக அரசியல் ஆதாயம் தேடுகிறது' என்கிறார் முதலமைச்சர்.

'வெண்ணை திரண்டு வரும் நேரத்தில்.. ஸ்டாலின் அறிவிப்பால் கொதித்த எடப்பாடி.. பரபரப்பு அறிக்கை'வெண்ணை திரண்டு வரும் நேரத்தில்.. ஸ்டாலின் அறிவிப்பால் கொதித்த எடப்பாடி.. பரபரப்பு அறிக்கை

அரசியல் ஆதாயம் தேடுவதாக இருந்தால் 'அதிமுக அரசு கொண்டு வந்த மசோதாவை நிறைவேற்று' என்று திமுக போராடுமா? குறைந்தபட்ச பொது அறிவு கூடவா முதலமைச்சருக்கு இல்லை?

தமக்கு மக்கள் மத்தியில் நற்பெயர் இருக்கிறது என்று நம்பிக் கொண்டிருக்கிறார் போலும்! அவர் ஏதாவது ஒரு ஊரில் தனியாக நடந்து போய் மக்கள் மத்தியில் துணிச்சலாகக் கேட்டுப்பார்க்கலாம்" என்று கூறியுள்ளார்.

English summary
DMK leader Mk Stalin has retaliated by saying that if Chief Minister Edappadi Palanisamy wants to prove his mettle, he should seek the governor's approval for the 7.5 per cent reservation for government school students tomorrow.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X