நான் சொன்னதை செஞ்சிருந்தா இப்படி ஒரு சம்பவமே நடந்திருக்காது.. திமுக அரசு மீது எடப்பாடி காட்டம்!
சென்னை: எனது ஆலோசனையின்படி, திமுக அரசு செயல்பட்டு, உடனடியாக மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகளை வடசென்னையில் உள்ள தொழிற்சாலைகளை ஆய்வு செய்ய அனுப்பியிருந்தால், நேற்று நள்ளிரவு இந்த கோர சம்பவம் ஏற்பட்டிருக்காது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
எண்ணூர் பெரியகுப்பம் பகுதியில் உள்ள தனியார் உர ஆலையில் நேற்று நள்ளிரவு நேரத்தில் அம்மோனியா வாயு வெளியேறியது. இதனால், அப்பகுதியில் இருந்த மக்கள் பலருக்கும் மூச்சுத்திணறல், வாந்தி, மயக்கம் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட்டன. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளனர். இந்நிலையில், மாசு கட்டுபாட்டு வாரிய அதிகாரிகள் தங்களது பணிகளைச் செவ்வனே செய்திருந்தால் இது போன்ற நிகழ்வு ஏற்பட்டிருக்காது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுத்தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “வட சென்னை, எண்ணூரில் அமைந்துள்ள கோரமண்டல் உரத் தொழிற்சாலையில் உரம் தயாரிப்பதற்காக பயன்படுத்தக்கூடிய அமோனியத்தை நேரடியாகக் கப்பலில் இருந்து தொழிற்சாலைக்கு எடுத்துச் செல்லும் அமோனியம் குழாய் 26.12.2023 அன்று நள்ளிரவில் வெடித்துச் சிதறியதாகவும், அமோனியம் காற்றில் கலந்து பரவத் தொடங்கியதால் தொழிற்சாலைக்கு அருகே உள்ள மீனவ கிராமங்களான பெரிய குப்பம், சின்ன குப்பம், உலகநாதபுரம், சத்தியவாணி மூர்த்தி நகர், தாழங்குப்பம் உள்ளிட்ட பல பகுதிகளில் காற்றில் பரவிய அம்மோனியாவை சுவாசித்தபோது அப்பகுதியில் வாழ்ந்து வந்த நூற்றுக்கணக்கான மக்களுக்கு மூச்சுத்திணறல், நெஞ்சு எரிச்சல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மீனவ மக்கள் உயிருக்கு பயந்து தங்களது உடைமைகளைக்கூட எடுத்துச் செல்லாமல், அவர்களுக்கு தங்கும் வசதி கூட செய்யப்படாத நிலையில், குளிரில் ஆங்காங்கே தங்கள் குழந்தைகளுடன் நேற்று இரவு தஞ்சம் அடைந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. மூச்சுத் திணறலாலும் மயக்கத்தினாலும் 40க்கும் மேற்பட்ட மக்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அடுத்தடுத்து 4 சம்பவங்கள்.. டிசம்பர் தொடங்கியது முதலே துயரம்.. கலங்கும் வடசென்னை! அச்சத்தில் மக்கள்!
ஏற்கனவே சென்னையில் மிக்ஜாம் புயல் பாதிப்பு ஏற்பட்ட காலத்தில் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் இருந்த கச்சா எண்ணெய் மழை வெள்ளத்திலும் கடலிலும் கலந்து மீனவ மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்திய நிகழ்வில், மாசு கட்டுபாட்டு வாரிய அதிகாரிகள் தங்களது பணிகளைச் செவ்வனே செய்திருந்தால் இது போன்ற நிகழ்வு ஏற்பட்டிருக்காது என்றும், மீனவ மக்கள் பாதிப்படைந்திருக்க மாட்டார்கள் என்றும் நான் சுட்டிக்காட்டியிருந்தேன். இனியாவது மாசு கட்டுபாட்டு அதிகாரிகள் தங்களது பணிகளை துரிதமாகவும் பொறுப்புடனும் செய்திட வலியுறுத்தியிருந்தேன்.
வட சென்னை, எண்ணூரில் அமைந்துள்ள கோரமண்டல் உரத்தொழிற்சாலையில் உரம் தயாரிப்பதற்காக பயன்படுத்தக்கூடிய அமோனியத்தை நேரடியாகக் கப்பலில் இருந்து தொழிற்சாலைக்கு எடுத்துச் செல்லும் அமோனியம் குழாய் 26.12.2023 அன்று நள்ளிரவில் வெடித்துச் சிதறியதாகவும், அமோனியம் காற்றில் கலந்து பரவத்…
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) December 27, 2023
எனது ஆலோசனையின்படி, இந்த விடியா திமுக அரசு செயல்பட்டு, உடனடியாக மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகளை வடசென்னையில் உள்ள தொழிற்சாலைகளை ஆய்வு செய்ய அனுப்பியிருந்தால், நேற்று நள்ளிரவு கோரமண்டல் உரத்தொழிற்சாலையில் நடைபெற்ற அம்மோனியம் வாயு கசிவு விபத்து நடைபெற்றிருக்காது. ஆனால், எப்போதும் போல் விடியா திமுக அரசு எங்களது ஆரோக்கியமான ஆலோசனைகளை காது கொடுத்து கேட்காதது போல், மேலே குறிப்பிட்ட எனது ஆலோசனையையும் காற்றிலே பறக்கவிட்டது.
ஏறத்தாழ இதுபோன்றே 40 ஆண்டுகளுக்கு முன் போபால் பூச்சிக்கொல்லி -உரத் தொழிற்சாலையில் ஏற்பட்ட விஷ வாயு விபத்து போன்றதுதான் இதுவும். கடவுள் அருளால் நேற்று நள்ளிரவு விஷ வாயு வெளியேறி ஏற்பட்ட விபத்தில், உயிர்பலிகள் இல்லாமல் மக்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன். இனியாவது விடியா திமுக அரசும், மாசு கட்டுபாட்டு வாரியமும் கும்பகர்ண தூக்கத்திலிருந்து விழித்து மக்கள் நலப்பணிகளில் தீவிரப் பணியாற்ற வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
-
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications