அடுத்தடுத்து 4 சம்பவங்கள்.. டிசம்பர் தொடங்கியது முதலே துயரம்.. கலங்கும் வடசென்னை! அச்சத்தில் மக்கள்!
சென்னை: டிசம்பர் மாதம் தொடங்கியது முதலே வடசென்னை மக்களைத் துயர் துரத்தி வருகிறது. அடுத்தடுத்து நிகழும் கோரச் சம்பவங்களால் எண்ணூர் பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
டிசம்பர் முதல் வாரத்தில் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கடுமையன கன மழை காரணமாக, சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வடசென்னை பகுதிகளில் குடியிருப்பு பகுதிகள் முழுக்க வெள்ளம் புகுந்தது.

வடசென்னை வெள்ளம்: சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் 3 நாட்களுக்குள் வெள்ளம் முற்றிலுமாக வடிந்து, போக்குவரத்து சீரமைக்கப்பட்டது. ஆனால், வடசென்னை பகுதி மக்கள் வெள்ள நீரில் தத்தளித்தனர். நிவாரணங்களும், வடசென்னை மக்களுக்கு தாமதமாகவே கிடைத்தன. அன்றாட கூலி வேலைகளுக்குச் செல்வோரை அதிகம் கொண்ட வடசென்னை, புயல் வெள்ளத்தால் கடும் இன்னலைச் சந்தித்தது.
வெள்ள நீர் சூழ்ந்தது ஒரு பக்கம் என்றால், வடசென்னையின் எண்ணூர் பகுதி மக்களுக்கு இன்னொரு துயரமும் ஏற்பட்டது. பக்கிங்ஹாம் கால்வாய் வழியாக வெளியேறிய பெட்ரோலிய எண்ணெய்க் கழிவு, கொசஸ்தலை ஆற்றில் கலந்து கடலில் சுமார் 20 சதுர கி.மீ அளவுக்கு பரவியது. இதனால் மீனவர்களின் படகுகள் மற்றும் மீன்பிடி வலைகள் பாழாகி தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர்.
எண்ணெய் கழிவு: குடியிருப்பு பகுதியில் புகுந்த வெள்ளத்தில் கலந்து, வீடுகளுக்குள்ளும் எண்ணெய் கழிவுகள் படிந்து பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. பீப்பாய் பீப்பாய்களாக எண்ணெய் கழிவுகள் அகற்றப்பட்டன. எனினும், எண்ணெய் கழிவின் தாக்கத்தில் இருந்து எண்ணூர் பகுதி மக்கள் இன்னும் முழுமையாக மீளவில்லை. அப்பகுதியில் மீன்வளம் வெகு காலத்திற்கு பாதிக்கப்படும் என்ற அச்சமும் இருக்கிறது.
எண்ணூர் வாயு கசிவு: இந்நிலையில் நேற்று நள்ளிரவில் எண்ணூர் பகுதி மக்களுக்கு சோகச் செய்தி கிடைத்தது. எண்ணூர் பெரியகுப்பம் பகுதியில் உள்ள தனியார் உர ஆலையில் நேற்று நள்ளிரவு நேரத்தில் அம்மோனியா வாயு வெளியேறியது. இதனால், அப்பகுதியில் இருந்த மக்கள் பலருக்கும் மூச்சுத்திணறல், வாந்தி, மயக்கம் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட்டன.
கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்ட மக்கள் மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பெரியகுப்பம் பகுதியில் வசித்து வந்த மீனவ கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் அப்பகுதியை விட்டு வெளியேறியுள்ளனர். காற்றில் கலந்துள்ள நஞ்சு, மக்களுக்கு என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்தப் போகிறதோ என்ற அச்சம் நிலவி வருகிறது.
பாய்லர் வெடிப்பு: இந்நிலையில், இன்று மேலும் ஒரு செய்தி வடசென்னையை கலங்கடித்துள்ளது. சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் எண்ணெய் கசிவு ஏற்பட்டு பாய்லர் வெடித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
வடசென்னை பகுதியில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்தே மக்கள் முழுமையாக மீள்வதற்குள் அப்பகுதிகளில் உள்ள ஆலைகளில் கடந்த சில நாட்களாக நிகழ்ந்து வரும் எண்ணெய் கசிவு, வாயு கசிவு, பாய்லர் வெடிப்பு போன்ற சம்பவங்களால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடும் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
-
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு!












Click it and Unblock the Notifications