ஒற்றை தலைமை! ஓபிஎஸ்ஸை சமாதானப்படுத்தும் ஈபிஎஸ் ஆதரவாளர்கள்? கிரீன்வேஸில் கிரீன் சிக்னல் கிடைக்குமா?
சென்னை: ஒற்றைத் தலைமை யார் என்பது குறித்து ஓபிஎஸ் ஈபிஎஸ் ஆகியோர் தனித்தனியே ஆலோசனை நடத்திய நிலையில் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் ஓபிஎஸ் வீட்டுக்கு வந்துள்ளார்கள். இதனால் எடப்பாடி பழனிச்சாமியை சமாதானப்படுத்தும் முயற்சியா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு ஓபிஎஸ் தர்மயுத்தத்தால் தமிழக அரசியல் களமே பரபரத்தது. இந்த நிலையில் கடந்த 5 நாட்களாக சிறு சிறு பிரச்சினைகள் புகைந்து கொண்டே வந்தது.
அதிமுகவை யார் கைப்பற்றுவது என வரும் போது அந்த புகைச்சல் கொழுந்துவிட்டு எரிகிறது. ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ் இருந்தாலும் அதிமுகவின் அதிகார மையமாக பார்க்கப்படுபவர் எடப்பாடி பழனிச்சாமிதான்.

ஆதரவாளர்கள்
அவரது ஆதரவாளர்களுக்கு தேவையான பதவிகளையும் தேர்தலில் நிற்க வைக்க சீட்டுகளையும் பெற்று தருவார். ஆனால் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுக்கு தேவையானவற்றை பெற முட்டி மோதினாலும் எடப்பாடி பழனிச்சாமி விட்டுக் கொடுப்பதில்லை. இதனால் அதிமுகவில் எடப்பாடி கோஷ்டி, ஓபிஎஸ் கோஷ்டி என பிரிந்து கிடக்கிறது.

ஒற்றைத் தலைமை
வரும் 23 ஆம் தேதி பொதுக் குழு கூட்டத்தில் ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிச்சாமியை அறிவிக்க அவரது ஆதரவாளர்கள் தீவிரம் காட்டி வருகிறார்கள். எடப்பாடியும் டெல்லி செல்வாக்கு உள்ளிட்டவைகளை வைத்துக் கொண்டு கட்சியை கைப்பற்ற திட்டமிட்டுள்ளார்.

அதிமுக பொதுக் கூட்டம்
இந்த நிலையில் அதிமுக பொதுக் குழு கூட்டத்திற்கு முன்னோட்டமாக நேற்றைய தினம் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஒற்றைத் தலைமை குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் அது போல் எந்த பேச்சும் இடம் பெறவில்லை என வைத்திலிங்கம் கூறியிருந்தார்.

மூத்த நிர்வாகிகள்
இந்த நிலையில் நேற்றைய தினம் ஓபிஎஸ் வீட்டில் மூத்த நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். அது போல் அந்த ஆலோசனை இன்றும் நடைபெற்றது. மனோஜ் பாண்டியன், ஆர் பி உதயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர். அது போல் இன்று காலை எடப்பாடி பழனிச்சாமி வீட்டிலும் வேலுமணி, தங்கமணி, சி விஜயபாஸ்கர், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தியிருந்தனர்.

எடப்பாடி பழனிச்சாமியுடன் ஆலோசனை
இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமியுடன் ஆலோசனை நடத்திய அவரது ஆதரவாளர்கள் திடீரென ஓபிஎஸ் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு அவர்கள் ஓபிஎஸ்ஸை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது அதிமுகவில் சண்டை வேண்டாம், சமாதானமாக போய்விடலாம் என்ற ரீதியில் இந்த புறா விடுதூது நடந்துள்ளதாகவே தெரிகிறது.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications