ஒரே கல்லில் "2 இலை.." வலை பன்னீருக்கு மட்டுமில்ல! அடுத்தடுத்து அதிரடி காட்டும் எடப்பாடி
சென்னை: எடப்பாடி பழனிசாமியிடம் அதிமுக சென்றால் அவருடைய சமூகத்தினரிடமே கட்சி சென்று சாதிக் கட்சியாகிவிடும் என்று சசிகலா மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தெரிவித்து வந்த நிலையில், அந்த குற்றச்சாட்டையெல்லாம் துவம்சம் செய்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி.
ஒற்றைத் தலைமை தொடர்பாக பிரச்சனை எழுவதற்கு முன்பாகவே சசிகலாவை அதிமுகவில் மீண்டும் சேர்ப்பது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும் ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கும் கருத்து வேறுபாடு இருந்ததாக கூறப்படுகிறது.
ஓ.பன்னீர்செல்வமும், சசிகலாவும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் இருவரும் எடப்பாடிக்கு எதிராக காய் நகர்த்துவதாக கூறப்பட்டது. சசிகலா, தினகரனும் ஓ.பன்னீர்செல்வத்தின் தர்மயுத்த போராட்டங்களை எல்லாம் மறந்துவிட்டு அவருக்கு பரிந்தே பேசி வந்ததை காண முடிந்தது.

பொதுக்குழு
இந்த சூழலில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பின் தொடர் முட்டுக்கட்டைகள், வழக்குகளை கடந்து கடந்த 11 ஆம் தேதி சென்னையில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் பிரம்மாண்டமாக கூடியது. அதில் எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக பொறுப்பேற்க தென் மாவட்டத்தை சேர்ந்த திண்டுக்கல் சீனிவாசன் பொருளாளராக பொறுப்பேற்றார்.

ஓபிஎஸ் நகர்வு
முன்னதாக ஒற்றைத் தலைமை விவகாரத்தை எடப்பாடி பழனிசாமி தரப்பு கிளப்பியதிலிருந்தே, தென் மாவட்டம் மற்றும் சமூக ரீதியான ஆதரவை திரட்டத் தொடங்கினார் ஓ.பன்னீர்செல்வம். எடப்பாடி பழனிசாமிக்கு மேற்கு மாவட்டங்களிலும் அவரது சமூகத்திலும் இருக்கும் செல்வாக்கு ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இருப்பதை காட்ட அவரது ஆதரவாளர்களும் பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கினர்.

தென்மாவட்ட அதிமுகவினர்
ஆனாலும், தென் மாவட்டங்களை சேர்ந்த ஓ.பி.எஸின் சொந்த சமுதாயத்தை சேர்ந்த அதிமுக மூத்த நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் பலரின் ஆதரவு எடப்பாடி பழனிசாமி தரப்புக்கே சென்றுகொண்டிருந்தது. அண்மையில்கூட ஓபிஎஸின் சொந்த மாவட்டமான தேனி அதிமுக நிர்வாகிகள் மற்றும் ஓபிஎஸின் போடி தொகுதி அதிமுக நிர்வாகிகள் பலர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

எடப்பாடியின் செஸ்
இந்த நிலையில், தென் மாவட்டங்கள் மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தின் சமுதாய ஆதரவும் தன் வசமே இருப்பதை காட்டவும், முழு ஆதரவையும் ஈர்க்கவும் எடப்பாடி தரப்பு முயன்றதை பொதுக்குழுவில் பார்க்க முடிந்தது. அதன் அடிப்படையில் தென் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அதிமுக பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னுரிமை
இதேபோல், பொதுக்குழுவின் 16 தீர்மானங்களில் 8 தீர்மானங்களை வாசித்து ஒப்புதல் பெற்றவர் தென் மாவட்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார். மீதமுள்ள 8 தீர்மானங்களை வாசித்தவர் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன். தீர்மானங்களை முன்மொழிந்தவர் நத்தம் விஸ்வநாதன். கட்சி வரவு செலவு கணக்கை வாசித்து ஒப்புதல் பெற்றவர் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் அனைவருமே தென் மாவட்டங்களையோ அல்லது ஓபிஎஸ் சமுதாயத்தையோ சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தென் மாவட்ட தலைவர்கள்
பொதுக்குழுவுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி நியமித்த 2 துணைப் பொதுச்செயலாளர்களில் நத்தம் விஸ்வநாதனும் தென் மாவட்டமான திண்டுக்கலை சேர்ந்தவர். அதேபோல், அமைப்புச் செயலாளர்களில் செல்லூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி, கடம்பூர் ராஜூ, ராஜன் செல்லப்பா ஆகியோருக்கு அமைப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.
Recommended Video

செக் வைத்த எடப்பாடி
இந்த நிலையில் தென் மாவட்டமான மதுரையை சேர்ந்த சேர்ந்த முன்னாள் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு ஓ.பன்னீர்செல்வம் வகித்த எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா மற்றும் தினகரன் ஆகியோர் சமுதாய ஆதரவை வைத்து அதிமுகவை தங்கள் வசம் கொண்டுவந்துவிடலாம் என்று போட்ட கணக்கை எடப்பாடி பழனிசாமி தகர்த்துவிட்டதாக கூறுகிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
-
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
புதுச்சேரியில் அமைச்சர்கள் நியமனம்.. முதல்வர் ரங்கசாமியுடன் கருத்து வேறுபாடு? நமச்சிவாயம் விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு












Click it and Unblock the Notifications